என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் சவால்களையும் குடும்பப் போராட்டங்களையும் பேசும் ‘பரீட்’! – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரபாகரன், ஆரி அர்ஜுனா!
‘8 தோட்டாக்கள்’ வெற்றி நாயகனாக நடிக்கும் ‘பரீட்’ படத்தின் போஸ்டர் வெளியீடு – விரைவில் திரைக்கு வருகிறது!
ஒரு காவல் அதிகாரியின் கடமைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சவால்களும், அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளும் சினிமாவில் இதுவரை பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியின் பணிச்சூழலையும், அவர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பரீட்’ (Buried).
ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, ‘வெப்’ திரைப்படத்தை இயக்கிய ஹாரூண் எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தின...
