‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!
‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!
சென்னை, ஆகஸ்ட் 20, 2026:
தமிழ் சினிமாவில் வழக்கமான விளையாட்டுக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தையும், கடலோர மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தணிக்கைப் பணிகளை நிறைவு செய்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து, திரைப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். பாரம்பரிய மீனவர்களின் பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விளையாட்டின் பரபர...
