Sunday, June 21
Shadow

Tag: rs

கொரோனா தடுப்பு நடவடிக்கை; நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி

Latest News, Top Highlights
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதி வழங்கும்படி, பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆகியோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.3 கோடி வழங்கி உள்ளார். அவர், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பெப்சி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், தினக்கூலிகள் மற்றும் அவர் பிறந்த ராயபுரம் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் வழங்கியுள்ளார்....

கொரோனா நிவாரண உதவியா ₹1.25 கோடி வழங்கிய ‘தல’ அஜித்

Latest News, Top Highlights
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ரூ. 25 லட்சம் நன்கொடையாக நடிகர் அஜித் வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரத்திற்கு சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் உதவி வருகின்றனர். அத ஒரு பகுதியாக நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 ல...