Friday, April 17
Shadow

Tag: பதிவு

நடிகர் வையாபுரி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வையாபுரி ஒரு நகைச்சுவை நடிகர். தேனி அருகிலுள்ள முத்துத்தேவன்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவரது இயற்பெயர் இராமகிருஷ்ணன். இவர் எட்டாம் வகுப்பு வரை முத்துத்தேவன் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை பழனிசெட்டிபட்டி, பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அதன் பின்பு தேனியிலுள்ள மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்தார். திரைப்படத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தில் சென்னைக்குச் சென்ற இவர் முதலில் திரைப்படத்துறையில் பல வேலைகளைச் செய்தார். சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்ன மருது பெரிய மருது”, “மால்குடி டேஸ்” போன்ற தொடர்களில் நடிக்கத் தொடங்கிய இவரை “இளைய ராகம்” எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்க வைத்தார். அதன் பிறகு “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தில் திருநங்கை வேடத்தின் மூலம் பெயர் பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம்...

நடிகை கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். 'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள். வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப்...

நடிகை காவ்யா மாதவன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
காவ்யா மாதவன் ஒரு மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகை. பூக்காலம் வரவாயி (1991), அழகிய ராவணன் (1996) உட்பட்ட திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார். இவர் நடித்த தமிழ் படங்கள்: சாது மிரண்டால், காசி

நடிகை மேக்னா நாயுடு பிறந்த தின பதிவு

Top Highlights
மேக்னா நாயுடு இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவில், விஜயவாடா நகரில் செப்டம்பர் 19ல் மேக்னா நாயுடு பிறந்தார். இவரின் தந்தை எத்திராஜ் ஏர் இந்தியாவில் பணியாற்றினார். தாய் டென்னிசு பயிற்சியாளராக பணியாற்றினார். இவருக்கு சோனா என்னும் தங்கையும் உள்ளார். இவர் நடித்த தமிழ் படங்கள்: வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தயம், குட்டி, வாடா, சிறுத்தை, புலி வேசம், வேலூர் மாவட்டம்,...

நடிகை இஷா கோப்பிகர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
இஷா கோப்பிகர் இந்திய திரைப்பட நடிகையான இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, ஜோடி, நெஞ்சினிலே

இசையமைப்பாளர் எம். பி. சீனிவாசன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எம். பி. சீனிவாசன் தமிழ், மற்றும் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர். பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஒரு மார்க்சியவாதி. திரையுலகிலும் கம்யூனிஸ்ட் இயக்க வட்டாரத்திலும் அவர் "எம்.பி.எஸ்" என்று பிரியத்துடன் அழைக்கப்பெற்றார். 1962இல் வெளிவந்த "கால்படுகள்" என்ற மலையாளப் படத்திற்காக இசையமைத்ததே இவரது முதல் பாடல். எம்.பி.எஸ், 1925இல் பாலகிருஷ்ணன் என்ற என்பவருக்கு மகனாக பிறந்தார். சங்கீத வித்துவானாகிய தாயிடமிருந்து இசையைக் கற்றார். கம்யூனிஸ்ட் தலைவராகிய தன் சிறிய தந்தையிடமிருந்து அரசியல் கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர் சீனிவாசன். அப்போது விடுதலைப் போராட்டப் பொதுக் கூட்டங்களில் பாரதியார் பாடல்களைப் பாடி வந்தார். தமிழகத்தில் கம்யூனிச சார்புள்ள மதராஸ் மாணவர் அமைப்பு தோன்றியது. சீனிவாசன் இந்த அமைப்பில் இணைந்தார். மாணவர் இயக்கப் பணிகளுக்காக இந்தியா முழுக்க அலைந்து திரிந்த சீனிவாசன் அதே இலட்...

நடிகை ரம்யா பாண்டியன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜோக்கர் படத்தில் மிகத்துல்லியமான கிராமத்து பெண்ணாக வலம் வரும் ரம்யா தனது நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தார். அதேபோல் அவருக்கு ‘ஆண் தேவதை’ என்ற படம் வெளிவந்தது இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார். தற்போது பட வாய்ப்பிற்காக நடிகைகள் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

நடிகர் கார்த்திக் பிறந்த தின பதிவு

Top Highlights
கார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார்.2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கௌதம் கார்த்திக் இவரது மூத்த மகனாவார்....

நடிகர் கௌதம் கார்த்திக் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இவர் தனது பள்ளிப் படிப்பை ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி, கிறிஸ்து பல்கலைக்கழகம் பெங்களூரில் முடித்தார். 2013ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இவர் தற்பொழுது சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் போன்ற திரைப்படங்கள...

பின்னணிப் பாடகர் கிரிஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும். வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத்தில் மஞ்சள் வெய்யில் எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன....