
அப்பா–மகள் பாசத்துடன் அதிரடி காட்ட வரும் விஜய் ஆண்டனி… ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில்!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’. மு. மாறன் இயக்கியுள்ள இப்படம், ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசம், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான உறவு மற்றும் அந்த உறவைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் என உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் விஜய் ஆண்டனியின் வழக்கமான ஆக்ஷன் பாணியையும் இணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் படத்தை உருவாக்கியிருக்கிறது படக்குழு.
படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் விஜய் ஆண்டனி ஒரு சிறுமியுடன் இடம்பெற்றிருந்த காட்சி, படத்தின் மையக் கதாபாத்திரங்களான தந்தை–மகள் உறவைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டுக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அடுத்தடுத்த விளம்பர நிகழ்ச்சிகளும் தொடங்க உள்ளன.
ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லித்தன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்பிரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ், லிசி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீணா, ஹரிதா, ஹரிப்பிரியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை மு. மாறன் கவனித்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன், படத்தொகுப்புப் பணியையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ராஜா கலை இயக்கத்தையும், ஜி. அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். ராஜசேகர் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், ஆக்ஷன் காட்சிகளின் விறுவிறுப்பையும் ஒரே கதையில் இணைத்து உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’, விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் மற்றுமொரு வித்தியாசமான படமாக அமையும் வகையில் உருவாகியுள்ளது.
அப்பா–மகள் பாசம்… அதிரடி ஆக்ஷன்… குடும்ப உணர்வு — ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில்!

Vijay Antony’s ‘Appa Kutty’ Brings Father-Daughter Emotion and Action to Theatres on October 16!
Vijay Antony’s upcoming film ‘Appa Kutty’ is gearing up for a worldwide theatrical release on October 16, 2026. Directed by Mu. Maran, the film combines family emotions, action and an engaging commercial narrative.
At the heart of the film is the special bond between a father and his daughter. The story explores their affection and relationship while also bringing in action-packed moments and dramatic situations. The makers have crafted the film with a balance of emotional family sequences and Vijay Antony’s action-oriented screen presence.
The film’s second-look poster, which featured Vijay Antony alongside a young girl, had already caught the attention of audiences. The poster offered a glimpse into the father-daughter relationship that forms the emotional backbone of the story and created curiosity about the film’s narrative.
With the shooting and post-production work completed, the team is now gearing up for the film’s theatrical release. Promotional activities are also set to begin ahead of its worldwide release on October 16.
Preethi Asrani, Baby Lithanya, Bagavathi Perumal (Baks), Haripriya Isai, Aruvi Madhan, Chitra Lakshmanan, Sreeja Ravi, Vettai Muthukumar, Jensan Diwakar, Muruganantham, Munnar Ramesh, Lissy Antony, Kumar Natarajan, Vijayan, Praveena, Haritha and Haripriya are part of the film’s ensemble cast.
Mu. Maran has written and directed the film. Vijay Antony is the music director and editor. Rajeev Rajendran is the Director of Photography, while A. Raja is the Art Director. G. Anusha Meenakshi has handled costume design and Rajasekar is the stunt choreographer.
Blending the warmth of family relationships with action and drama, ‘Appa Kutty’ is set to arrive in theatres worldwide on October 16, 2026.
