அப்பா–மகள் பாசத்துடன் அதிரடி காட்ட வரும் விஜய் ஆண்டனி… ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில்
அப்பா–மகள் பாசத்துடன் அதிரடி காட்ட வரும் விஜய் ஆண்டனி… ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில்!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’. மு. மாறன் இயக்கியுள்ள இப்படம், ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசம், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான உறவு மற்றும் அந்த உறவைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் என உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் விஜய் ஆண்டனியின் வழக்கமான ஆக்ஷன் பாணியையும் இணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் படத்தை உருவாக்கியிருக்கிறது படக்குழு.
படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் விஜய் ஆண்டனி ஒரு சி...
