
காதல் எப்போது கட்டுப்பாடாக மாறுகிறது? ‘EYES’ சொல்ல வரும் உறவுகளின் இருண்ட பக்கம்!
அக்டோபர் 9 முதல் Sony LIV-ல் வெளியாகிறது புதிய மலையாள Original தொடர் ‘EYES’
காதல்… அக்கறை… அதீத ஈடுபாடு… இவை எல்லாம் ஒரு கட்டத்தில் எல்லை மீறினால் என்ன ஆகும்? ஒருவரின் வாழ்க்கையை தொடர்ந்து கவனிப்பது காதலா, இல்லை அது ஒருவிதமான கட்டுப்பாடா? இப்படியான கேள்விகளை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய மலையாள Original தொடர் ‘EYES’, அக்டோபர் 9 முதல் Sony LIV-ல் வெளியாகிறது.
ஒருவரை பின்தொடர்வது, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை கண்காணிப்பது போன்ற செயல்கள் வெறும் தொந்தரவாக மட்டும் இல்லாமல், ஒருவரின் பாதுகாப்பையும் மனநிலையையும் எந்த அளவுக்கு பாதிக்கக்கூடும் என்பதை ஒரு பரபரப்பான த்ரில்லர் கதையின் வழியாக இந்தத் தொடர் பேசுகிறது.
‘EYES’ தொடரின் கதையின் மையத்தில் காவல்துறை அதிகாரியான டினா செபாஸ்டியன் இருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிகை கனி குஸ்ருதி நடித்துள்ளார்.

காதல், அதீத ஈடுபாடு மற்றும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை டினா விசாரிக்கத் தொடங்குகிறார். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றும் இந்த வழக்குகளின் பின்னணி ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கும்போது, காதலுக்கும் ஆபத்துக்கும் இடையிலான எல்லை எவ்வளவு மெல்லியதாக இருக்கிறது என்பதை அவர் உணர்கிறார்.
விசாரணை தீவிரமடையும் நிலையில், பயம், சந்தேகம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் டினாவைச் சுற்றி உருவாகின்றன. உண்மைக்கு நெருக்கமாகச் செல்லச் செல்ல, அவர் கண்டுபிடிக்கும் சில விஷயங்கள் எதிர்பார்த்ததைவிட அதிர்ச்சிகரமானதாக மாறுகிறது. இதனால், வழக்கை விசாரிக்கும் டினாவே ஒரு கட்டத்தில் அந்த மர்மத்தின் ஒரு பகுதியாக மாறுகிறாரா என்ற கேள்வியும் கதையில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தத் தொடரை இயக்கியுள்ள மனு அசோகன், தனது படைப்பு குறித்து பேசுகையில், ‘EYES’ தனக்கு மிகவும் நெருக்கமான மற்றும் உணர்வுபூர்வமான கதை என்று தெரிவித்துள்ளார். ஒருவரை பின்தொடர்வது என்பது வெறும் குற்றச்செயல் மட்டுமல்ல; அது சம்பந்தப்பட்ட நபரின் பாதுகாப்பு மற்றும் மனநிலையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை சுவாரஸ்யமான த்ரில்லர் வடிவில் சொல்ல முயற்சித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் கதையை திரையில் கொண்டு வர உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ள மனு அசோகன், Sony LIV பார்வையாளர்கள் இந்தக் கதையுடன் இணைவதோடு, இதுபோன்ற சம்பவங்களை வேறொரு கோணத்தில் பார்க்கத் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
மனு அசோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘EYES’ தொடருக்கு பாபி–சஞ்சய் எழுத்துப் பணியை மேற்கொண்டுள்ளனர். அஞ்சனா நாயர் கதையை உருவாக்கியுள்ளார்.
‘Uyare’ மற்றும் ‘Kaanekkaane’ படங்களுக்குப் பிறகு மனு அசோகன் – பாபி–சஞ்சய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படைப்பு என்பதும் இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
DreamKatcher தயாரித்துள்ள ‘EYES’ தொடரில் நிகிலா விமல், தேவ் மோகன், சானியா ஐயப்பன் மற்றும் ஸ்ருதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் என்ற பெயரில் தொடங்கும் ஒரு விஷயம் எப்போது பயமாக மாறுகிறது? ஒருவரை கவனிப்பது எப்போது அவரை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாறுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்ல வருகிறது ‘EYES’.
‘EYES’ – அக்டோபர் 9, வெள்ளிக்கிழமை முதல் Sony LIV-ல் மட்டும்.

When Does Love Turn Into Control? ‘EYES’ Explores the Dark Side of Love and Obsession
The new Malayalam Original series premieres on Sony LIV on October 9
When does love cross the line and turn into control? When does caring for someone become an obsession, and when does that obsession become frightening? Exploring these unsettling questions, Sony LIV’s new Malayalam Original series ‘EYES’ delves into the darker side of love, obsession and control. The series premieres exclusively on Sony LIV on October 9.
At the heart of ‘EYES’ is Tina Sebastian, a police officer played by acclaimed actress Kani Kusruti. Tina begins investigating a series of cases involving love, obsessive behaviour and incidents where personal boundaries have been crossed.
As the investigation progresses, the line between love and danger begins to blur. Fear, insecurity and unexpected twists emerge at every turn. However, the closer Tina gets to the truth, the more shocking the reality she uncovers becomes.
The series is directed by Manu Ashokan, who describes ‘EYES’ as a story he wanted to tell with honesty and emotional depth. According to the director, stalking is not merely a crime; it can have a deep impact on an individual’s sense of safety and mental well-being. The team has attempted to explore this reality through an engaging thriller narrative.
Manu Ashokan has also expressed his gratitude to the cast and technical crew who helped bring the story to life, adding that he hopes Sony LIV audiences will connect with the series and begin looking at the issue from a different perspective.
Written by Bobby–Sanjay, with the story created by Anjana Nair, ‘EYES’ marks the reunion of the Manu Ashokan–Bobby–Sanjay combination after the acclaimed films Uyare and Kaanekkaane.
Produced by DreamKatcher, the series features Nikhila Vimal, Dev Mohan, Saniya Iyappan and Sruthi in prominent roles alongside Kani Kusruti.
With its exploration of love that gradually transforms into obsession, control and fear, ‘EYES’ promises to take viewers into a tense and unsettling world where nothing is quite what it seems.
‘EYES’ premieres exclusively on Sony LIV on Friday, October 9.
