
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்!
பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.
சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு என்பது ஒவ்வொரு படக்குழுவினருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக அல்லாமல், தங்களின் படத்திற்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் சென்னை பிரசாத் லேபில் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

“சிறிய படத்துக்கும் பெரிய வெற்றி சாத்தியம்” – தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன், இப்படம் வெளியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பார்த்ததாகவும், நல்ல க்ரைம் த்ரில்லராக உருவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
பல படங்கள் வெளியாகும் போட்டியான சூழலில் ‘தி டார்க் ஹெவன்’ வெற்றிகரமாக ஓடுவதற்கு ஊடகங்களும் ரசிகர்களும் கொடுத்த ஆதரவே முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட அவர், பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்ற சூழலிலும் ஒரு சிறிய படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு முக்கியமானது என்றார்.
மேலும், படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்த பின்னர் சில காரணங்களால் கதாநாயகனை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும், அதுபோன்ற முடிவை எடுப்பது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் மிகவும் கடினமானது என்றும் கூறினார்.
படத்திற்கு சித்து அளித்த முழுமையான ஒத்துழைப்பையும் அவரது நடிப்பையும் பாராட்டிய தனஞ்ஜெயன், நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது தயாரிப்பு நிறுவனத்துடன் சரியான புரிதலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, படப்பிடிப்பு முழுவதும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

ஒரே வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் பேசிய அவர், சிறு முதலீட்டுப் படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்கும் வகையில் வெளியீட்டு முறையில் ஒழுங்கு தேவை எனக் குறிப்பிட்டார்.
“இது சக்சஸ் மீட் அல்ல… நன்றி தெரிவிக்கும் சந்திப்பு” – இயக்குநர் பாலாஜி
இயக்குநர் பாலாஜி பேசும்போது, ‘தி டார்க் ஹெவன்’ உருவான பயணம் தனக்கு மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று என்று தெரிவித்தார்.
படத்தின் 60 முதல் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஏற்கெனவே எடுக்கப்பட்ட காட்சிகளைத் தாண்டி புதிய பாதையில் படத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் ஷரண் மற்றும் கோபால் ஆகியோர் தன்னுடன் உறுதியாக நின்றதாகவும் கூறினார்.
தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படக்குழுவினர் அளித்த ஆதரவையும் நினைவுகூர்ந்த அவர், ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, எடிட்டர் ராஜா ஆறுமுகம், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோரின் பங்களிப்பை சிறப்பாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஏற்கெனவே படமாக்கப்பட்ட பகுதிகளில் தேவையற்ற காட்சிகளை நீக்கி, புதிதாக எடுக்கப்பட்ட காட்சிகளுடன் படத்தை ஒருங்கிணைத்த எடிட்டர் ராஜா ஆறுமுகத்தின் பணியை பாராட்டினார்.
இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் இசை குறித்து பலரும் பாராட்டிப் பேசுவது தனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக கூறிய பாலாஜி, அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
“இது வழக்கமான சக்சஸ் மீட் அல்ல. இந்தப் படத்திற்கு ஆதரவளித்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கவே இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தோம். விரைவில் இன்னும் பெரிய வெற்றியுடன், வசூல் விவரங்களுடன் உங்களை சந்திப்போம்” என்று இயக்குநர் பாலாஜி தெரிவித்தார்.

“என் முதல் படம் என்று பெருமையாகச் சொல்வேன்” – தர்ஷிகா
நடிகை தர்ஷிகா பேசும்போது, ஒரு திரைப்படத்தின் வெற்றியில் ‘வேர்ட் ஆஃப் மவுத்’ முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
படத்தைப் பார்த்துவிட்டு ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வழங்கிய நேர்மறையான கருத்துகள் பலரை திரையரங்கிற்கு அழைத்து வந்ததாகக் கூறிய அவர், அதற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“பல ஆண்டுகள் கழித்தும் இது என்னுடைய முதல் படம் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் ‘தி டார்க் ஹெவன்’ எனக்கு ஒரு பெருமையான முதல் படமாக அமைந்திருக்கிறது” என்றார் தர்ஷிகா.
“திரையரங்க அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்” – ரித்விகா
நடிகை ரித்விகா பேசும்போது, ஊடகங்களின் விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வரும் பதிவுகள் படத்தை மேலும் பலரிடம் கொண்டு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னும் அதிகமான ரசிகர்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்றார்.
“ஓடிடியில் வரும் வரை காத்திருக்காமல், திரைப்படங்களை திரையரங்கிற்கு வந்து பாருங்கள். அப்போதுதான் உண்மையான திரையரங்கு அனுபவத்தைப் பெற முடியும். திரையரங்குகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து வரும்போதுதான் சினிமாவும் வளர்ச்சி பெறும்” என்று ரித்விகா தெரிவித்தார்.

“சினிமா நம்மை கைவிடாது” – சித்து
படத்தின் நாயகன் சித்து பேசும்போது, இந்தத் தருணத்திற்காக தான் 14 ஆண்டுகளாக காத்திருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சாலிகிராமத்தில் சிறிய அறையில் தங்கி, வாய்ப்பு தேடி பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு புகைப்படங்களுடன் சென்று வந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர், வாய்ப்புக்காக காத்திருந்த காலத்தில் சந்தித்த சிரமங்களையும் பகிர்ந்து கொண்டார்.
தன்னுடன் வாய்ப்பு கேட்டவர்கள் பின்னர் பெரிய நடிகர்களாக மாறி, அவர்களது படங்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியதை திரையரங்குகளில் பார்த்ததாகவும், அப்போது மகிழ்ச்சியுடன் அவர்களை பாராட்டிய போதிலும், தனக்கான வாய்ப்பு எப்போது வரும் என்ற ஏக்கம் இருந்ததாகவும் கூறினார்.
தற்போது தான் நடித்த படத்தை பல ஊர்களில் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து வருவதை நேரில் பார்க்கும்போது, பல ஆண்டுகளாக தான் எதிர்பார்த்த தருணம் நிஜமாகியிருப்பதாக சித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“சினிமாவை நாம் உண்மையாக நேசித்தால், அது நம்மை கைவிடாது என்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ‘தி டார்க் ஹெவன்’ எனக்கு ஒரு நல்ல தொடக்கம். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பாலாஜி சகோதரருக்கு எனது நன்றி” என்றார் சித்து.
வெற்றிப் பயணத்தில் படக்குழுவினர்
‘தி டார்க் ஹெவன்’ படத்தின் வெற்றிக்குப் பின்னால் தங்களது உழைப்பையும், எதிர்பாராத சூழ்நிலைகளில் படத்தை கைவிடாமல் தொடர்ந்து பயணித்த அனுபவத்தையும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, நடிகர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார், ஆர்த்தி, சுமித்ரா, பிரதீப், விவேக், செல்வா, மனோஜ், அலெக்ஸ், டேனி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
படம் வெளியாவதற்கு முன் எதிர்கொண்ட சவால்களைத் தாண்டி, இன்று ரசிகர்களின் வரவேற்புடன் திரையரங்குகளில் பயணித்து வரும் ‘தி டார்க் ஹெவன்’, சிறு படங்களுக்கும் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவு கிடைக்க முடியும் என்ற நம்பிக்கையை படக்குழுவினருக்கு அளித்துள்ளது.

‘The Dark Heaven’ Team Thanks Media and Audiences for Supporting the Film’s Successful Theatrical Run
The recently released crime thriller ‘The Dark Heaven’ is continuing its successful theatrical run, receiving appreciation from both audiences and the media. Directed by Balaji, the film features Bigg Boss-fame actors Sidhu, Darshika and Rithvika, along with Pradeep, Vela Ramamurthy, Nizhalgal Ravi, Jayakumar, Arul D. Shankar, Sathya, Chaplin Balu, Gopal, Aarthi and several others.
The film has cinematography by Manikandan PK, editing by Raja Arumugam, and music by Sakthi Balaji. The film is produced by Gothai Entertainment and MS Swiss Film Factory.
Positioned as a different kind of crime thriller among recent releases, The Dark Heaven has earned positive responses from the media and audiences. The response has also resulted in an increase in the number of theatres screening the film.
To celebrate the audience response and, more importantly, to thank the journalists and media fraternity who supported the film, the team organised a special interaction at Prasad Lab, Chennai. The event was presented as a thank-you gathering rather than a conventional success meet.
“The Success of a Small Film Like This Deserves to Be Celebrated” – G. Dhananjayan
Producer G. Dhananjayan, who attended the event, congratulated director Balaji and the producers.
Sharing his experience, he revealed that he had watched the film nearly six months before its release and felt that it had shaped up as a strong thriller. He had also advised the director that choosing the right release date could help the film reach a wider audience.
He noted that The Dark Heaven was released alongside several other films and was still managing to attract audiences. According to him, the support from the media and theatre-going audiences had played an important role in the film’s performance.
Dhananjayan also spoke about the challenges faced during production, particularly the decision to move forward with the film after a substantial portion of the shoot had already been completed.

He appreciated actor Sidhu for stepping in and committing himself to the project, praising his performance in the film.
He further stressed the importance of actors maintaining proper communication with producers and completing projects with full cooperation after committing to them.
Dhananjayan also highlighted the challenges faced by smaller films due to the number of releases every week and said that the industry needs a more organised release system so that films, including those made with smaller investments, get adequate theatrical opportunities.
He congratulated the entire team and also appreciated the support extended by PVR Cinemas to the film.
“This Is Not a Conventional Success Meet; It Is a Thank-You Meet” – Director Balaji
Director Balaji described the occasion as an emotional moment.
Recalling the difficult phase during production, he revealed that a substantial portion of the film had already been completed before the team had to take a difficult decision and rethink the project.
He expressed gratitude to producers Sharan and Gopal, who stood by him during the challenging period, along with his wife, family members, friends and the entire crew.
Balaji also thanked cinematographer Manikandan PK, editor Raja Arumugam and composer Sakthi Balaji for their contribution.
Speaking about the editing process, he explained that integrating newly shot portions with the existing footage while removing unnecessary material was a challenging task, and he appreciated Raja Arumugam for successfully handling it.
He also expressed his happiness over the appreciation received for Sakthi Balaji’s music and said that he believed the composer had a bright future ahead.
“Without Sharan and Gopal sir, this film would not have happened, and neither would this stage. Many people worked with confidence even when there were doubts about whether the film would make it to theatres,” Balaji said.
He added that he did not want to revisit the controversies surrounding the earlier stages of production while the film was currently receiving a positive response.
“I did not want anyone to say that this was just another success meet. This is a meeting to thank the media. The applause you gave us at the press screening has travelled all the way to the theatres. That gives us immense happiness,” he said.

“I Will Always Be Proud to Call This My First Film” – Darshika
Actress Darshika spoke about the importance of word-of-mouth publicity in the success of a film.
She said that positive feedback from the media after the initial screenings had encouraged many people to watch the film.
“Words have a lot of power. When something positive is said, it reaches several people. I am grateful to everyone who watched the film and spoke positively about it,” she said.
Darshika added that an actor should be able to proudly call their first film their first film even many years later.
“In that sense, The Dark Heaven has given me something to be proud of. I will always proudly say that this is my first film,” she said.
“Please Don’t Wait for OTT; Experience Films in Theatres” – Rithvika
Actress Rithvika thanked the media for helping the film reach audiences.
She noted that reviews published by the media had reached viewers and contributed to the film’s theatrical response. She also acknowledged the support received through social media, where audiences have been sharing reels and posts about the film.
However, she said that the team wanted the film to reach an even wider audience.
“This is a film made for the theatrical experience. Please don’t wait for it to arrive on OTT. Whatever the film may be, audiences should come to theatres and watch it. That is how cinema and the theatrical ecosystem will continue to grow,” Rithvika said.
“Cinema Will Never Abandon Those Who Truly Believe in It” – Sidhu
Lead actor Sidhu delivered an emotional speech, revealing that he had waited for this moment for nearly 14 years.
He recalled the days when he stayed in a small room in Saligramam and travelled to various production houses carrying photographs in search of acting opportunities.
He spoke about the struggles, disappointments and long periods of waiting he experienced while trying to enter the film industry.
Sidhu also recalled watching films in theatres and seeing people who had once sought opportunities alongside him go on to become successful actors. While he was happy for them, he admitted that he also wondered when his own opportunity would arrive.
Today, seeing The Dark Heaven play to packed audiences in different towns has given him a sense of fulfilment.
“I have personally witnessed that if we truly love cinema, it will never abandon us. This is only the beginning for me. The Dark Heaven has given me a wonderful introduction. If I have to thank one person for making this possible, it would be director Balaji,” Sidhu said.
The Team Celebrates a Hard-Earned Theatrical Journey
The gathering brought together several members of the cast and crew who were part of the film’s journey.
Cinematographer Manikandan PK, producers Sharan and Gopal, composer Sakthi Balaji, and actors Vela Ramamurthy, Jayakumar, Aarthi, Sumithra, Pradeep, Vivek, Selva, Manoj, Alex and Danny, among others, attended the event.
Having overcome several challenges during its making and release, The Dark Heaven is now continuing its theatrical journey with audience support, giving its team renewed confidence in the potential of smaller films to find their audience on the big screen.
