Friday, November 6
Shadow

1983-க்குப் பிறகு மீண்டும் இணையும் மைக் மோகன் – சுஹாசினி ஜோடி!

1983-க்குப் பிறகு மீண்டும் இணையும் மைக் மோகன் – சுஹாசினி ஜோடி!

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படத்தில் கணவன் – மனைவியாக நடிக்கும் மைக் மோகன், சுஹாசினி!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜி திரைப்படத்தில், நடிகர் மைக் மோகனும் நடிகை சுஹாசினியும் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் மைக் மோகனும் சுஹாசினியும் கணவன் – மனைவியாக நடிக்க இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, 1983-ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தில் கணவன் – மனைவியாக நடித்த மைக் மோகன் – சுஹாசினி ஜோடி, சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே உறவுமுறையில் இணைந்து நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நட்சத்திர ஜோடி மீண்டும் திரையில் இணைவதால், அவர்களது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Mike Mohan and Suhasini Reunite as Husband and Wife After 43 Years!

The popular on-screen pair reunites for an anthology film starring G.V. Prakash Kumar.

Veteran actors Mike Mohan and Suhasini are all set to share screen space once again in an upcoming anthology film featuring actor and composer G.V. Prakash Kumar.

Adding to the excitement, the duo will be seen playing a married couple in the film, bringing back memories of their much-loved on-screen pairing.

Interestingly, Mike Mohan and Suhasini last played husband and wife in the 1983 film Gopurangal Saivathillai, directed by Manivannan. Now, after a gap of nearly 43 years, the actors are reuniting in the same relationship on screen.

Their reunion is particularly special for fans who fondly remember their performances in the Manivannan-directed classic. The prospect of seeing the much-loved pair together again has certainly added to the anticipation surrounding G.V. Prakash Kumar’s upcoming anthology film.

Further details about the film and its release are awaited.