Thursday, October 29
Shadow

Author: admin

மீண்டும் இணையும் சித்தார்த், பாபி சிம்ஹா

மீண்டும் இணையும் சித்தார்த், பாபி சிம்ஹா

Latest News
'ஜிகர்தண்டா' படத்தில் இணைந்து நடித்த சித்தார்த்தும் பாபி சிம்ஹாவும் மீண்டும் இணைந்து இன்னொரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ஆனால் இங்கல்ல. மலையாளத்தில். ஆம். ரத்தீஷ் அம்பாட் இயக்கத்தில் திலீப் நடித்துவரும் 'கம்மார சம்பவம்' படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். சித்தார்த் இந்தப்பத்தில் நடிப்பது கடந்த மாதமே உறுதியாகவிட்ட நிலையில், இப்போது பாபி சிம்ஹாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். சித்தார்த்திற்கு மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்றாலும், பாபி சிம்ஹா மலையாளத்தில் ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் தான். நேரம் படத்தில் மலையாளத்திலும் 'வட்டி ராஜாவாக நடித்த பாபி சிம்ஹா, அதன்பின்னர் பிவேர் ஆப் டாக்ஸ்' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அடுத்ததாக ஒரு வடக்கன் செல்பி' படத்தில் சில வினாடிகளே வந்து செல்லும் கேரக்டரில் நட்புக்காக நடி...
தணிக்கையில் ‘யு’ சான்றிதழ்: செப்.23-ல் ‘வீரசிவாஜி’ வெளியீடு

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ்: செப்.23-ல் ‘வீரசிவாஜி’ வெளியீடு

Latest News
விக்ரம் பிரபு, ஷாம்லி, ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வீரசிவாஜி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். தணிக்கை பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து செப்டம்பர் 23-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது....
காவேரி பிரச்சனைக்கு முதல்வருடன்  கை கோர்த்து நிற்போம் நடிகர் சங்கம்

காவேரி பிரச்சனைக்கு முதல்வருடன் கை கோர்த்து நிற்போம் நடிகர் சங்கம்

Latest News
உலகில் உள்ள நதிகள் அனைத்தும் எங்கே உற்பத்தியாக வேண்டும்- எங்கு சென்று சேர வேண்டும் என்று பல கோடி வருடங்களுக்கு முன்பே "இயற்கை" தீர்மானித்தது!​​ காட்டு விலங்குகளை உணவாக தின்று திரிந்த மனிதன், விவசாயத்தை கண்டறிந்த பின் அதற்காக நதியை ஒட்டிய இடங்களில் வந்து குடியேறினான்.! "நதிக்கரை நாகரீகம்" வளர்ந்த பின் மனிதர்கள் "நதியை" தாயாகவும், கடவுளாகவும் போற்றி வந்து இருக்கிறார்கள். அன்றிலிருந்து "இரண்டாம் உலகப் போருக்கு" பின் நாட்டின் எல்லைகள் வகுக்கப்படும் வரை - நதி பொதுவானதாகவே கருதப்பட்டது!. அதன் பின் "நதி நீர் கொள்கைகள்" வகுக்கப்பட்டு உலக நாடுகள் அதை பின்பற்றியும் வருகின்றன!. உலக நாடுகளுக்கு பொருந்தும் விதி..! இந்தியாவில் உள்ள "கர்நாடக மாநிலத்திற்கு" பொறுந்தாமல் போனதுதான் வருத்தம்!. நதிகள் உற்பத்தியாகும் இடத்தை விட அது சேரும் இடத்தை சார்ந்தவர்களுக்கு உரிமை அதிகம் என உலக விதி ...
தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் திடீர் ராஜினாமா

தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் திடீர் ராஜினாமா

Latest News
தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் விலகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தலுக்கு முன்பு கோரிக்கையாக வைத்திருந்தார். முதல்வர் ஜெயலலிதாவும் கூட இதே கோரிக்கையை தன்னை சந்தித்த நாசர் மற்றும் விஷால் குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கோரிக்கையை நடிகர் சங்கம் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பை சன் டி.வி.க்கு கொடுத்ததும் ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் விலகி விட்டதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை சங்க நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பி வைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள...
மாரியப்பன் தங்கவேலுக்கு பிரபல நடிகர் விஜய் பாராட்டு

மாரியப்பன் தங்கவேலுக்கு பிரபல நடிகர் விஜய் பாராட்டு

Latest News
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை புரிந்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு பிரபல நடிகர் விஜய் தனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று நம் எல்லோருக்கும் பெருமையை தேடி தந்துள்ள உங்களுக்கு என் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் நீங்கள் எதிர்காலத்தில் பல சாதனைகள் புரிய வாழ்த்துவதாகவும், மாரியப்பனுக்கு கூறியுள்ள வாழ்த்து செய்தியில் அவர் கூறிப்பிட்டுள்ளார். பிரதமர், ஜனாதிபதி என பலரது வாழ்த்து மழையில் நனைந்து வரும் மாரியப்பனுக்கு தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது....
தனுஷ்யின் ஹாலிவுட் படத்தின்படபிடிப்பு எப்போது ?

தனுஷ்யின் ஹாலிவுட் படத்தின்படபிடிப்பு எப்போது ?

Latest News
தமிழ் சினிமாவில் சகலகலாவல்லவன் பட்டியலில் இடம் பிடித்துள்ள தனுஷ் நடிகன் பாடகர் தயாரிப்பாளர் வசனகர்த்தா இயக்குனர் பாடலாசிரியர் என்று பல அவதாரங்கள் எடுத்தவர் தமிழ் சினிமாவில் இருந்து முதலில் ஹாலிவுட் போன நடிகர் என்றால் அது ரஜினிகாந்த இப்ப அவர் மருமகன் தனுஷும் ஹாலிவுட் செல்வது நாம் அறிந்த விஷயமே ஆனால் இந்த படம் படபிடிப்பு தள்ளி போய்கொண்டே இருந்தது ஒரு வழியாக இந்த படத்தி படபிடிப்பு ஆரம்பமாக போகிறது . தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் அதை பற்றி கூறும்போது;- “ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறேன். நன்றாக விற்பனையான ஒரு நாவலை படமாக பண்ணுகிறோம். அந்த இயக்குநர் என்னை அணுகிய விதம் ரொம்ப பிடித்திருந்தது. இங்கு இருக்கும் நடிகர்கள் தேர்வு குழு “எங்கள் மனதில் ஒருவர் இருக்கிறார். நாங்கள் 10 நடிகர்களின் படத்தை அனுப்புகிறோம். ஆனால், நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என எங்களு...
புது விதமான கதையில் “ஆண்டவன் கட்டளை” படத்தின் கதை கசிவு

புது விதமான கதையில் “ஆண்டவன் கட்டளை” படத்தின் கதை கசிவு

Latest News
விஜய் சேதுபதி, ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் மணிகண்டன் இயக்கி வரும் படம் ஆண்டவன் கட்டளை. பாஸ்போர்ட் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் கதை இதுவரை இல்லது புது மாதிரி தமிழ் சினிமாவின்ரோ பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாம் ஹீரோ , ஹீரோயின், வில்லன் என யாரை சுற்றியும் நகராதாம். மேலும் இப்படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும் கதையுடன் ஒட்டிய பாடல்களாகவே அவை இருக்குமென்றும் ஹீரோ, ஹீரோயினுக்கு என தனியாக பாடல்கள் இல்லை என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்படம் கொஞ்சம் வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது....