Wednesday, October 28
Shadow

Author: admin

தலைப்பை போலவே படமும் ஆரம்பமே அட்டகாசமாக அமைய தன் வாழ்த்தினை கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

தலைப்பை போலவே படமும் ஆரம்பமே அட்டகாசமாக அமைய தன் வாழ்த்தினை கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

Latest News
ஜீவா கதாநாயகனாக நடிக்கும் “ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் First Look Poster-ஐ, “மக்கள் செல்வன்” திரு. விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். சுவாதி பிலிம் சர்க்யுட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் Teaser-ஐ வரும் 5 ம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தன்று நடிகர் விஜய் சேதுபதி வெளீயீட உள்ளார். “ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் இயக்குனர் ரங்காவை அவர் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்தே தெரியும் என்றும் அவர் வெற்றி பெற வேண்டும் என விஜய் சேதுபதி வாழ்த்தியுள்ளார். மேலும் இப்படத்தின் கதாநாயகன் ஜீவாவிடம் படத்தின் தலைப்பை போலவே படமும் ஆரம்பமே அட்டகாசமாக அமைய தன் வாழ்த்தினை கூறியுள்ளார் விஜய் சேதுபதி....
நெருப்புடா நெருங்குடா போல் எனக்கும் வேண்டும் – விஜ்யயின் அன்புகட்டளை

நெருப்புடா நெருங்குடா போல் எனக்கும் வேண்டும் – விஜ்யயின் அன்புகட்டளை

Latest News
சமீபத்தில்ர தமிழ்ஜி சினிமாவை உலுக்கிய பாடல் என்றால் ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது நாம் அறிந்ததே. அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்நிலையில் இதுபோன்ற ஒரு பாடலை ‘விஜய் 60’ படத்தில் இடம் பெற செய்யுமாறு சந்தோஷ் நாராயணனிடம் விஜய் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதற்காக சில நாட்கள் முன் அருண்ராஜா காமராஜ் யும் சந்தித்துள்ளார். பரதன் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது சந்தோஸ் நாராயணன் தான் தற்போது பிஸி இசையமைப்பாளர் விஜய்யின் அன்பு கட்டளைக்கு எப்படியான பாடல்கள் கொடுக்கபோகிறார் என்று பொருத்து இருந்து தான் பார்க்கணும்....
கலையரசன் நடிக்கும் எய்தவன் படத்தின் நாயகியாக சாண்டா டைடஸ்

கலையரசன் நடிக்கும் எய்தவன் படத்தின் நாயகியாக சாண்டா டைடஸ்

Latest News
மிஷ்கினின் நந்தலாலா படத்தில் அறிமுகமாகி மெட்ராஸ் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கலையரசன். தனது அசாதாரணமான திறமையால் குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் கபாலியில் நடித்த இவர், தமிழ் குமரன் எனும் கதாபாத்திரத்தில் அதில் அழுத்தமான முத்திரையை பதித்திருப்பார். கபாலியை தொடர்ந்து தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் எய்தவன். மதயானைக்கூட்டம் படத்தில் விக்ரம் சுகுமாரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ள இப்படத்தை Friends Festivel Films நிறுவனம் சார்பாக சுதாகரன் தயாரித்துள்ளார். பிச்சைக்காரன் நாயகி சாட்னா டைடஸ் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பசங்க போன்ற தரமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்கள்...
வீரசிவாஜி மக்களை காப்பாற்றும் சிவாஜியாக விக்ரம்பிரபு

வீரசிவாஜி மக்களை காப்பாற்றும் சிவாஜியாக விக்ரம்பிரபு

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். இது கமர்ஷியல் படம். ஆனால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிற மாதிரியான ஜனரஞ்சக படம். ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடமிருந்து அந்த மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெரும் வீரமான இளைஞனாக விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திரப் பெயர் சிவாஜி. அதுதான் படத்திற்கான தலைப்பாக “ வீரசிவாஜி “ யாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு பாண்டியிலும், பாடல் காட்சிகள் ஜார்ஜியாவிலும் படமாக்கப் பட்டுள்ளது. படம்இந்த மாதம் திரைக்கு வருகிறது. ...
பெண்கள் சம்பாதிப்பதால் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்ய முன்வர வேண்டும்”- காஜல் அகர்வால்

பெண்கள் சம்பாதிப்பதால் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்ய முன்வர வேண்டும்”- காஜல் அகர்வால்

Latest News
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி பெரிய வரவேற்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்று வெற்றிநாயகி என்ற பெயருடன் வந்த காஜல் அகர்வால் இன்று தமிழுலும் முன்னணி நாயகி இன்று இருக்கும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவருகிறார் . தற்போது அஜித்துடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.சமீபத்தில் ஒரு பெட்டியில் புரட்சி பெண் பேசுவது போல பேசியுள்ளார். பெண்களின் சுதந்திரம் பற்றியும் அவர்களின் உரிமையை பற்றியும் பெண்கள் சம்பாதிப்பதால் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்ய முன்வர வேண்டும்” என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்தார். நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:- “பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கிறார்கள். ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கிறார்கள். சில பெண்கள் ஆண்களை விட அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள். எனவே பெண்கள் விஷயத்தில் ஆண்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்னும் பழைய மாதிரி அவர்களை வ...
இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதிக்கு நன்றி சொன்ன திருநங்கை ஸ்நேகா

இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதிக்கு நன்றி சொன்ன திருநங்கை ஸ்நேகா

Latest News
தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா கூறியதாவது... என் சொந்த ஊர் சிவகாசி,நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13 ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன். கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாயப்புக்காக ஏறி இறங்கினேன். சில சினிமா கம்பெனிகளில் உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள். எப்படி போட்டோ கொடுப்பது என தெரியாமல் பாஸ்போட் போட்டோக்களை கொடுத்து இருக்கிறேன். வடபழநியில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பாரத்துக்கொண்டே நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் புதியபூமி எனும் நடனப்பள்ளியில் நடனம் கற்றுகொண்டேன். நடனம் என் சிறுவயது கனவு. பின்பு நிறைய இடங்களில் மேடை நடன கலைஞராக என் வாழ்க்கை ஆரம்பமானது. அந்த சமயங்களில் நிறைய பேரின்...
தங்கள் அணியின் நட்சத்திர வீரர்களை அறிமுகப்படுத்தியது ‘சென்னை ராக்கர்ஸ்’

தங்கள் அணியின் நட்சத்திர வீரர்களை அறிமுகப்படுத்தியது ‘சென்னை ராக்கர்ஸ்’

Latest News
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிரிக்கெட் விளையாட்டு மட்டும் தான் நம் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இறகுப் பந்தாட்டத்திற்காக வெள்ளி பதக்கம் வென்றதும், நாடெங்கும் அந்த விளையாட்டின் புகழ் பரவ தொடங்கிவிட்டது. தற்போது அந்த இறகுப் பந்தாட்டத்தின் முக்கியத்துவத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க தயாராக உள்ளது விரைவில் நடைபெற இருக்கும் 'செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் - 2016' (சீசன் 1). விளையாட்டு மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து தொடங்கப்பட்டிருப்பது தான் இந்த நட்சத்திரங்களுக்கான இறகுப் பந்தாட்டப் போட்டி... தமிழ்நாட்டின் சார்பில் களம் இறங்க இருக்கும் 'சென்னை ராக்கர்ஸ்', தங்கள் அணியின் விளையாட்டு வீரர்களை சென்னையில் உள்ள ஹயாத் ரீஜெண்சி நட்சத்திர ஹோட்டலில் அறிமுகப்படுத்த...
வீரசிவாஜி இயக்குனரால் பாதிக்க பட்ட விக்ரம் பிரபு

வீரசிவாஜி இயக்குனரால் பாதிக்க பட்ட விக்ரம் பிரபு

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் யில் நடைபெட்ட்றது இதில் தாமதாமாக வந்த விக்ரம் பிரபுவை நம் இணையத்தளத்தில் தொடர் தோல்வியில் பந்தா காட்டும் விக்ரம் பிரபு என்று சொல்லி இருந்தோம் உண்மையில் விக்ரம்பிரபு மேல் எந்த தவறும் இல்லையாம் இயக்குனரிடம் பல முறை நான் இந்த தேதியில் இல்லை எனக்கு என் குடும்ப நிகழ்ச்சி இருப்பதால் வர முடியாது என்று சொல்லி இயக்குனர் அந்த தேதியில் இசை வெளியீட்டு விழா வைத்துனால் தான் ...
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் சினேகா

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் சினேகா

Latest News
ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்னதாகவே ரசிகர்களை ஈர்க்க கூடிய வலிமை ஒரு சில படங்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது. இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கும் பெயர் சூட்டப்படாத திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரித்து வரும் இந்த திரைப்படமானது ஏற்கனவே பாஹத் பாசில், ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பி ராமையா என பல சிறந்த நடிகர்களை உள்ளடக்கி இருக்க, தற்போது இந்த திரைப்படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சினேகா நடிக்க இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது. "கவிதை எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல... சிறந்த உருவகம், பொருத்தமான சொற்கள் என அனைத்தும் மனதில் இருந்து வர வேண்டும். அது போல தான் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்பதும...