Monday, November 9
Shadow

Top Highlights

கோலமாவு கோகிலா படத்தை பற்றி இதுவரை வெளிவராத ரகசியம் அம்மாடியோ!

கோலமாவு கோகிலா படத்தை பற்றி இதுவரை வெளிவராத ரகசியம் அம்மாடியோ!

Latest News, Top Highlights
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விரும்பும் நயன்தாராவுக்கு, ‘அறம்’ படத்தின் வெற்றி, தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவர், ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் நெல்சன் கூறியதாவது:- “இது, கடத்தல் தொழிலை பற்றிய கதை. இந்த படத்தில், ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நயன்தாரா வருகிறார். அம்மா, அப்பா, தங்கை என்று ஒரு குடும்பத்தை தாங்கி பிடிக்கும் பெண்ணாக நடிக்கிறார். அவருடைய அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், அப்பாவாக ஆர்.எஸ்.சிவாஜி, தங்கையாக ஜாக்குலின் ஆகியோர் வருகிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில், சரவணன் நடிக்கிறார். படத்தில், நயன்தாராவுக்கு ஜோடி இல்லை. அவரை ஒருதலையாக காதலிப்பவராக யோகி பாபு நடித்து வருகிறார். கதையை கேட்டதுமே நயன்தாரா நடிக்க சம்மதித்தார். படத்...
குறிப்பட்ட நகரில் ரஜினிகாந்த்யின் காலா ரிலீஸில் சிக்கல்

குறிப்பட்ட நகரில் ரஜினிகாந்த்யின் காலா ரிலீஸில் சிக்கல்

Latest News, Top Highlights
கன்னட சலுவாலி வாட்டாள் பக்‌ஷா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ். இவர், காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராக குரல்கொடுத்துவருபவர். மேலும், பிற கன்னட அமைப்புகளுடன் இணைந்து காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையில் அவ்வப்போது போராட்டங்களையும் நடத்திவருபவர். இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம், ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ரஜினி கன்னட மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அரசியல...
அடம் பிடிக்கும் வடிவேலு ரெட் போடா போகும் விஷால்

அடம் பிடிக்கும் வடிவேலு ரெட் போடா போகும் விஷால்

Latest News, Top Highlights
தயாரிப்பாளர் சங்கம் ஒன்று சொல்ல வடிவேலுவோ வேறு விதமாக பேசியுள்ளார். இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து படப்பிடிப்பையும் துவங்கினார்கள். படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நின்றுவிட்டது. இதை தொடர்ந்து படத்தில் இருந்து வெளியேறுவதாக வடிவேலு அறிவித்தார். 24ம் புலிகேசி பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை போனது. வடிவேலுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவரோ, தான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை என்றும், படப்பிடிப்பை தொடங்க தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டதாகவும், அதனால் படத்தில் நடிக்க முடியாது வடிவேலுவிடம் இருந்து ரூ. 9 கோடி நஷ்டஈடு வாங்கிக் கொடுக்குமாறு 24ம் புலிகேசி படத்தின் தய...
நவரசநாயகன் கார்த்திக்நடிப்பில்  ஜூலை 6ம் தேதி வெளியாகும் “மிஸ்டர் சந்திரமௌலி”

நவரசநாயகன் கார்த்திக்நடிப்பில் ஜூலை 6ம் தேதி வெளியாகும் “மிஸ்டர் சந்திரமௌலி”

Latest News, Top Highlights
தந்தை, மகன் நவரச நாயகன் கார்த்திக், கவுதம் கார்த்திக் ஆகியோரை ஒரே படத்தில் பார்க்க மகிழ்ச்சியான தருணம் வெகு தொலைவில் இல்லை. மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான சந்திரமௌலி படம் தணிக்கை செய்யப்பட்டு ஜூலை 6, 2018ல் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் பாடல்களும், காட்சி விளம்பரங்களும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன. "ஆம், மிஸ்டர் சந்திரமௌலி படம் துவங்கிய நாள் முதல் மிகவும் positive ஆகவே இருந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திய உத்தியாகட்டும், படத்தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதாகட்டும் ஒவ்வொன்றுமே சிறப்பு. இத்தகைய செயல்களுக்கு பின்னால் இருந்த வித்தைக்காரர் தயாரிப்பாளர் தனஞ்செயன் தான். படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் இருந்து வெளியீடு வரை அவர் காட்டிய நம்பிக்கை, சலுகை அபரிமிதமானது. மிஸ்டர் சந்திரமௌலியில் நாங்கள் வழங்கியிருக்கும் பொழுதுபோக்கு மற்றும் எமோஷன் ப...
தனுஷ் அடுத்து அடுத்த படங்களை பற்றிய விவரங்கள்

தனுஷ் அடுத்து அடுத்த படங்களை பற்றிய விவரங்கள்

Latest News, Top Highlights
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபக்கிர்’. கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சில் தயாராகியுள்ளது. காமெடி அட்வெஞ்சர் படமான இது, ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (மே 30) இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷனில் தற்போது ஈடுபட்டுள்ளார் தனுஷ் இந்தப் படத்துக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ ஆகிய படங்களின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இதுதவிர, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தனுஷின் அடுத்த 4 புதுப்படங்களைப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் நடிப்பில் தனுஷ் இயக்குநராக அறிமுகமான படம் ‘பவர் பாண்டி’. இந்...
அரசியல் நையாண்டி திரைப்படம் ஆர்.கே.நகர்’ சென்சாரில் ‘U/A’ சான்றிதழ்

அரசியல் நையாண்டி திரைப்படம் ஆர்.கே.நகர்’ சென்சாரில் ‘U/A’ சான்றிதழ்

Latest News, Top Highlights
அரசியல் நையாண்டி படங்கள் எப்போதுமே அந்தந்த கால கட்டங்களில் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சமகாலத்திய நிகழ்வுகளை படத்தில் பிரதிபலிக்க இந்த வகை படங்கள் உதவுகின்றன. உண்மையில், முன்னுதாரண படங்கள் எப்போதும் நோக்கத்தை அடைய தவறியதில்லை. இது ஆர்.கே. நகருக்கு மிகவும் பொருத்தமானது. படத்தின் தலைப்பு 'ஆர்.கே.நகர்' என அறிவித்த உடனே உற்சாகமும் வேகமும் தொற்றிக் கொண்டது. மேலும், அதன் காட்சி விளம்பரங்கள் குறுகிய காலத்திலேயே எல்லோரிடமும் சென்று சேர்ந்து பெரும் பாராட்டுகளையும் பெற்றது. படம் இப்போது சென்சாரில் 'U/A' சான்றிதழை பெற்று அடுத்த கட்டமான ரிலீஸை நெருங்கியிருக்கிறது.க்கு திரைப்படத்தை வெளியிட முழுவீச்சில் இயங்கி வரும் தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி, "ஆர்.கே.நகரின் தலைப்பாக இருக்கட்டும் அல்லது டிரைலராக இருக்கட்டும், ரசிகர்கள் சிறப்பான ஆதரவையும், பாராட்டுக்களையும் கொடுத்திருக்கி...
என்னை பற்றி வரும் வதந்திகளை நம்பவேண்டாம் ரகுல் ப்ரீத்த சிங்

என்னை பற்றி வரும் வதந்திகளை நம்பவேண்டாம் ரகுல் ப்ரீத்த சிங்

Latest News, Top Highlights
கதாநாயகர்களுடனும் நடித்து வருகிறார். அவரிடம் கேட்டபோது, நடிகைகள் எந்த மொழி படத்தில் நடிக்கிறார்களோ அந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும். மொழி தெரியாமல் நடித்தால் சிறப்பாக இருக்காது. நான் தமிழையும் கற்று வருகிறேன். இந்தி படத்தில் நடித்து வருவதால், எனக்கு தென்னிந்திய மொழிகளில் படங்கள் குறைந்துவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். தென் இந்திய மொழி படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை தமிழ் பெண்ணாக பார்க்கிறார்கள். தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கு பெண்ணாக பார்க்கிறார்கள். கதாநாயகிகளுக்கு அழகு முக்கியம். அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு அழகு வந்தது. ஆனாலும் சினிமாவில் நிலைத்து நிற்க திறமை தான் மிகவும் முக்கியம். திறமை இல்லாத நடிகைகளை அழகாக இருந்தாலும் ஒதுக்கிவிடுவார்கள். முன்பெல்...
பிக் பாஸ்-2 போட்டியாளர்கள் விவரம் – லீக்கான ரகசியத் தகவல்.!

பிக் பாஸ்-2 போட்டியாளர்கள் விவரம் – லீக்கான ரகசியத் தகவல்.!

Latest News, Top Highlights
உலக தமிழர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் எப்ப யார் எல்லாம் கலந்துகொள்ளபோகிரார்கள் என்ற எதிர்பார்ப்புதான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது, மேலும் மற்றொரு டீசர் உருவாகி வருவதாகவும் தகவல்கள் கிடைத்து இருந்தன. இந்நிலையில் தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் என ஒரு சிலரின் பெயர்கள் வெளியாகி உள்ளன. ஓவியா இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாகவும் ஆனால் அவர் சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் நடிகை சிம்ரன், சினேகா மற்றும் கஸ்துரி ஆகியோர் கலந்து கொள்ள ...
ஏ.ஆர் முருகதாஸ்க்கு அஜித் வைத்த கோரிக்கை

ஏ.ஆர் முருகதாஸ்க்கு அஜித் வைத்த கோரிக்கை

Latest News, Top Highlights
தல அஜித் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்த படம் தீனா. இந்த படத்தில் முருகதாஸ் தல அஜித்தை மாஸ் அண்ட் கிளாஸ் என வித்தியாசமாக காட்டி இருந்தார். முதலில் இந்த படத்தின் கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டதாம், இதனால் கதையில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லையாம். ஆனால் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்துள்ளார், அது என்னவென்றால் நிறைய ஜெயின் அணிய வேண்டாம். ஒன்று மட்டும் போதும் என கூற முருகதாஸும் சம்மதம் கூறி பத எடுத்து முடித்து விட்டனர். பின்னர் படம் வேற லெவலில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் அஜித் அணிந்திருந்த அந்த ஜெயின் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி உள்ளது....
கதைகேட்காமலே ரஜினி படத்தின் ஏன் நடிக்க சம்மதித்தேன் விஜய் சேதுபதி விளக்கம்

கதைகேட்காமலே ரஜினி படத்தின் ஏன் நடிக்க சம்மதித்தேன் விஜய் சேதுபதி விளக்கம்

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் கதையைக் கேட்காமலே ஓகே சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து ஜுன் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினியுடன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஜூன் மாதம் டார்ஜிலிங்கில் படப்பிடிப்பு தொடங்க, முதற்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இந்நிலையில், விஜய்சேதுபதி இப்படத்தின் கதையைக் கேட்காமலே ஒப்பந்தமானதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: இந்த வாய்ப்பைக் கொடுத்தது கார்த்திக் சுப்பராஜ். எனக்கு இன்னும் கதையே ...