Sunday, November 8
Shadow

Top Highlights

கல்லூரி மாணவி கொலை பெண்கள் பாதுகாப்பு  சூப்பர் ஸ்டார் சொன்ன பதில் !

கல்லூரி மாணவி கொலை பெண்கள் பாதுகாப்பு சூப்பர் ஸ்டார் சொன்ன பதில் !

Latest News, Top Highlights
இமயமலை செல்வதாக அறிவித்துவிட்டு சென்னையில் இருந்து இன்று கிளம்பினார் ரஜினிகாந்த். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த கேள்விக்கு அப்போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சென்னையில் இருந்து விமானத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இன்று காலை போயஸ்கார்டன் வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது பயண திட்டம் குறித்து அவர் எடுத்துரைத்தார். ஆனால், பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு கேள்வியை அவர் தவிர்த்த விதம், சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி என்பவர் நேற்று பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் அவரின் முன்னாள் காதலன் அழகேசன் என்பவரால் கழுத்தை அறுத்...
பிரபல தனியார் தொலைக்காட்சி எதிராக  விஜய் ரசிகர்கள் போராட்டம்

பிரபல தனியார் தொலைக்காட்சி எதிராக விஜய் ரசிகர்கள் போராட்டம்

Latest News, Top Highlights
சமீப காலமாக விஜய் ரசிகர்கள் பல பொது நல தொண்டுகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுவருகிறார்கள் எளிய மக்களுக்கு அத்தியாசபொருள்கள் மற்று பண உதவிகள் என்று பல மாவட்டங்களில் செய்து வருகின்றனர், இதை உண்மையில் பாராட்டியே ஆகவேண்டும் அந்த வகையில் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு எந்த வகையுளும் தொந்தரவு இல்லாமல் அவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல மலையாள டிவி சேனல் ஒன்றில் தளபதி விஜயையும் அவரது ரசிகர்களையும் பற்றி மோசமாக விமர்சனம் செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த தொலைக்காட்சி சேனலுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது....
காலா படத்தில் சூப்பர் ஸ்டார் பற்றி இதுவரை வெளிவராத விஷயம்

காலா படத்தில் சூப்பர் ஸ்டார் பற்றி இதுவரை வெளிவராத விஷயம்

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள காலா படத்தில் தினம் தினம் ஒரு சுவாரிசம் செய்திகள் வெளியாகிறது அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் செய்தி மிகவும் சுவாரிசம். அப்படி என்ன செய்தியா ஆம் ரஜினிகாந்த் அவர்கள் அணிந்து வரும் உடைகளை பற்றி தான் பாக்க போறோம் கபாலி படத்தில் ரஜினி அணிந்த உடைகள் மிகப்பரவலாக பேசப்பட்டது. இந்த உடைகளை பிரபல உடைவடிவைமைப்பாளர் அனுவர்தான் தான் உருவாக்கினார். அதே போல் காலப்படத்திலும் ரஜினியோட உடை கவனிப்பை அவரே உருவாக்கினார். இதுபற்றி கூறுகையில் "காலா படத்தை பொறுத்தவரை ரஜினிக்கு பிளாக் குர்தா,பல விதமான லுங்கி கள் அணிந்து நடித்துள்ளார். இந்த உடைகள் அனைத்தும் காட்டன் துணியால் வடிவமைக்கப்பட்டு அதில் எம்ராய்டரிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
வர்மா படக்குழுவுடன் சென்னை திரும்பிய விக்ரம் மகன்

வர்மா படக்குழுவுடன் சென்னை திரும்பிய விக்ரம் மகன்

Latest News, Top Highlights
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி இன்னமும் தேர்வாகவில்லை. பாலா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நேபாளத்தில் துவங்கியது. மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்றார். அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டார். ‘வர்மா’ படப்பிடிப்பு நேபாள தலைநகர் காத்மண்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருந்த நிலையில், படக்குழு தற்போது சென்னை விரைந்துள்ளது. மீண்டும் சென்னை திரும்புவதாக படத்தின் நாயகன் துருவ் விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதிலிருந்து நேபாளத்தில் நடத்தப்பட்டு வந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில...
நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

Latest News, Top Highlights
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் உடல் எடையை குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந...
வாழ்வின் கடைசி தருணத்தில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ரசிகை

வாழ்வின் கடைசி தருணத்தில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ரசிகை

Latest News, Top Highlights
தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் ரசிகர்கள், ரசிகைகள் நிறைய பேர் இருக்கின்றனர். நடிகர்களின் படங்களுக்கு பாலாபிஷேகம், சூடம் ஏற்றுவது போன்றவற்றை செய்வதை பார்த்திருக்கிறோம். ஒரு சிலர் கோவில் கட்டி சிலை வைக்கும் அளவுக்கும் சென்றிருக்கிறார்கள். ஆனால் இங்கு ரசிகை ஒருவர் தான் உயிரிழப்பதற்கு முன்னாள் தனது சொத்துக்கள் அனைத்தையும் நடிகர் பெயரில் எழுதிவிட்டு இறந்துள்ளார். மும்பையை சேர்ந்த ஹரிச்சந்திரா திரிபாதி என்ற பெண் ரசிகை ஒருவர் தனது சொத்துக்களை, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். சஞ்சய்தத்தின் தீவிர ரசிகையான இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். தனது நோய்க்காக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் மரணம் அடைந்தார். அந்த பெண்ணின் வங்கி கணக்கு, லாக்கர் ஆகியவற்றை வங்கி அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது, ...
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரோபோ

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்கும் ரோபோ

Latest News, Top Highlights
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 23-ல் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் உலா வந்தன. தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தில் ரோபோ சங்கர் முழு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், 50 நாட்களை படத்திற்காக ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெள...
மீம்ஸ் சேட்டைக்கு காயத்ரி ரகுராம் கொடுக்கும் எச்சரிக்கை

மீம்ஸ் சேட்டைக்கு காயத்ரி ரகுராம் கொடுக்கும் எச்சரிக்கை

Latest News, Top Highlights
நடிகை நடன இயக்குனர் அப்போது கிடைக்காத பெயர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்தது காரணம் அவ்வளவு வில்லிதனம் இதெல்லாம் யாருக்கு நமம கயாத்திரி ரகுராமுக்கு தான் பெண் நடன இயக்குனர் என்ற பெருமையோடு சினிமாவில் வலம் வந்தவர் காயத்ரி ரகுராம். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் எதிர்ப்புக்கு ஆளாகினார். இதனால் அவர் சமூக வலைதளங்களில் என்ன பதிவு செய்தாலும் அதற்கு ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வந்தார். தற்போது டுவிட்டரில் அவர், இனி சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் இன்றே முடிவுக்கு வர வேண்டும். இல்லை என்றால் நான் சைபர் கிரைமில் புகார் அளித்து உங்களை கண்டுபிடிப்பேன். என்னை, ஜுலியை அல்லது யாரை கிண்டல் செய்தாலும் சரி என்று பதிவு செய்துள்ளார்....
எஸ்எஸ் மியூசிக் சேனல்யின் திரில்லர் குறும்படம், தான் “காவு”

எஸ்எஸ் மியூசிக் சேனல்யின் திரில்லர் குறும்படம், தான் “காவு”

Latest News, Top Highlights
திறமையாளர்களை தேடும் யோசனையை மிக வேகமாக பரப்பி வருகிறது எஸ்எஸ் மியூசிக். இசையை தாண்டி எஸ்எஸ் மியூசிக் சேனல் திரைக்கலையை சிறப்பாக செய்யும் நல்ல திறமையாளர்களை அடையாளம் காணும் ஒரு ஒரு திட்டத்தை கையிலெடுத்திருக்கிறது. அதன் முதல் படி தான் காவு என்ற குறும்படம். "காவு சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம், முழு நீள படத்தை கொடுக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது. குற்றச்செயல்கள் செய்யும் ஒரு கும்பல், போதைப்பொருளான பாம்பு விஷத்தை கடத்துவதை பற்றிய படம். இயக்குனர் கிஷோர் குமாரின் அசாதாரணமான கதை சொல்லல், இந்த குறும்படத்தை கட்டாயமாக பார்க்க வேண்டிய படம் என்று சொல்ல வைத்திருக்கிறது. இந்த மாதிரி திறமையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து, அந்த பெருமைகளை தக்க வைத்து வருகிறது எஸ் எஸ் மியூசிக். காவு குறும்படங்களில் ஒரு பெஞ்ச் மார்க் படமாக நிச்சயம் இருக்கும்" என பெருமையோடு கூறு...
காலாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கதவு திறப்பு – இரும்புத் திரைக்கு மூடல்

காலாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கதவு திறப்பு – இரும்புத் திரைக்கு மூடல்

Latest News, Top Highlights
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களை கட்டண குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர். ரஜினியின் அரசியலா காலா டீசர்?- வீடியோ சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களை கட்டண குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழக திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால்கடந்த ஒரு வார காலத்தில் திரையரங்கு களுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வியாபார வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இம்முடிவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்தது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். சென்னையில் பொதுசெயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் தலை...