Sunday, November 8
Shadow

Top Highlights

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்களா. சூர்யா, கார்த்தி ஹீரோயின் பேட்டி

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்களா. சூர்யா, கார்த்தி ஹீரோயின் பேட்டி

Latest News, Top Highlights
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற அவர் பேட்டி அளித்துள்ளார். நான் இயற்கையாகவே கடின உழைப்பாளி. நான் எங்கு வேலை செய்கிறேனோ அவர்கள் பேசும் மொழியை கற்பது என் கடமை. தெலுங்கு திரையுலகில் பணியாற்றத் துவங்கியதும் அந்த மொழியை கற்கத் துவங்கிவிட்டேன் நான் ஒரு தென்னிந்திய நடிகை. நான் வடக்கில் இருந்து வந்ததாக மீடியாக்கள் சிலசமயம் கூறுவது வேதனையாக உள்ளது. நான் ஒரு தெலுங்கு அம்மாயி. தெலுங்கு பேசுபவர்களை எங்காவது பார்த்தால் உடனே நானும் தெலுங்கில் பேசுகிறேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம் அதில் மசாலா இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் மிக்க உலகம். இயற்கையாகவே மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள். இதுவரை நான் அப்படி பட்ட விஷயம் எதுவும் ஆகவில்லை ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் காலா டீசர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் காலா டீசர் விமர்சனம்

Latest News, Top Highlights
உலக தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது காலா டீசர் நேற்று வெளியாக வேண்டியது வெளியாகவில்லை என்று இகவும் ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆகவே அமைத்தது என்று தான் சொல்லணும் காரணம் தலைவர் பேசும் வசனம் ஸ்டைல் புது தலைவர் லுக் புதுசு முக்கியமாக சண்டைகாட்சிகளில் தெறிக்க விட்டு இருக்கும் காலா டீசர் விமர்சனம் பாக்கலாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் அதிரடியாக நள்ளிரவு வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல், நானா படேகரின் வில்லத்தனத்துடன் கூடிய இந்த டீசரின் பின்னணி இசை 'கபாலி' படத்திற்கு இணையாக அட்டகாசமாக உள்ளது. 'காலா' என்ன பேருய்யா இது' என்று நானாபடேகரின் கேள்விக்கு, 'காலா'ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்' என்ற பதில் பின்னணியில் ஒலிக்கின்றது. இந்த தேசம் சுத்தமா, ...
பேய் பசி படத்துக்காக பின்னணி பாடகரான விஜய் சேதுபதி

பேய் பசி படத்துக்காக பின்னணி பாடகரான விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் '#பேய் பசி'. இந்த படத்தை 'Rise East Entertainment Private Limited' நிறுவனம் சார்பில் Sreenidhi Sagar தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு ஒரு வித்தியாசமான, அனைவரையும் உடனே கவரும் குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிக பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர். நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவை தரும் விஜய் சேதுபதி '#பேய் பசி' படத்தின் இந்த பாடலிற்காக பாடகராக மாறியுள்ளார். வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியை பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்த கிளப் பாடலை தனது அதே வசீகர பணியில் பாடி அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது. டோனி சான் ஒளிப்பதிவில், ஆடை வடி...
‘மனுசனா நீ’ திரைப்படத்தை திருடி இணையதளத்தில் வெளியிட்ட  தியேட்டர் உரிமையாளர் கைது!

‘மனுசனா நீ’ திரைப்படத்தை திருடி இணையதளத்தில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர் கைது!

Latest News, Top Highlights
நான் ‘மனுசனா நீ’ என்ற மருத்துவத் துறை சம்பந்தமான கதையம்சமுள்ள தமிழ் திரைப்படம் எடுத்து கடந்த வாரம், பிப்ரவரி 16, 2018 ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியிட்டேன். வெளிநாட்டு உரிமை கொடுத்தால் இணையத்தில் வந்துவிடுகிறது என்று வெளிநாட்டு உரிமையைக் கொடுக்கவில்லை. தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் வெளியிடவில்லை. மேலும், வேறு மொழியில் டப்பிங் செய்தும் வெளியிடவில்லை. ஆனாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது. எனது பார்வைக்கு இந்தச் செய்தி வந்தவுடன், அந்த இணையத்திலிருந்து ஒரு பிரதி எடுத்து, தியேட்டருக்குப் படம் வெளியிடும் சேவை கம்பெனியான “கியூப் டிஜிட்டல் டெக்னாலஜி”க்குக் கொடுத்து FWM எனப்படும் ஃபாரன்சிக் வாட்டர்மார்க் முறையில் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி “எந்தத் திரையரங்கம், எத்தனை மணிக்கு கேமரா வைத்து பிரதி எடுக்கப்பட்டது என்று வழங்கக் கேட்டிருந்தேன். ...
நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நலையில், ஏற்கனவே ‘காலா’ டீசரை காண அதீத ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள், நாளை வெளியாகும் டீசரை காணும் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக காலா டீசர் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நாளை டீசர் வெளியாகி யூடியூப்பில் இதுவரை படைத்த சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலா படத்தில் ரஜினி மும்பை கேங்ஸ்டராக வருகிறார். ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல...
மீண்டும் ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் கமல்ஹாசன்

மீண்டும் ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் கமல்ஹாசன்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம்-2 ரிலீசாக இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து இருக்கிறது. இந்நிலையில், விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட இருப்பதாக போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், கமலின் விஸ்வரூபம்-2 டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப...
பிரபல விளம்பரத்தை படத்தலைப்பாக்கிய மகேந்திரன்

பிரபல விளம்பரத்தை படத்தலைப்பாக்கிய மகேந்திரன்

Latest News, Top Highlights
‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது நாயகனாக உயர்ந்திருப்பவர் மகேந்திரன். இவர் நடிப்பில் தற்போது ‘ரங்கராட்டினம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இதில் மகேந்திரன் ஜோடியாக ஷில்பா நடித்திருக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கு.ஞானசம்பந்தன், சென்ட்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சுந்தரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க மகேந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்புவதற்கு முன்பாக ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு...’ என்று புகைப்பிடிப்பதற்கு எதிரான விளம்பரம் ஒன்று திரையிடப்படும். தற்போது இந்த வசனத...
இணையதளங்களை தெறிக்க விடும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

இணையதளங்களை தெறிக்க விடும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி என்று தான் சொல்லணும் இன்று காலா டீசர் நேற்று தலைவர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அறிவிப்பு இணையதளங்களை தெறிக்க விடுகிறது . சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். இயக்குனர் ரஞ்சித்துடன் இரண்டு படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் எனக் கூறப்டுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி இருப்பதாக தயாரிப்பு குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனிருத் முதன்முறையாக ரஜினி படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் 'கால...
காலா படத்தில் அஜித் ஸ்பெஷல்! டீசர் ரகசியம் – ரசிகர்களுக்கு செம சர்ப்பிரைஸ்

காலா படத்தில் அஜித் ஸ்பெஷல்! டீசர் ரகசியம் – ரசிகர்களுக்கு செம சர்ப்பிரைஸ்

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்று பெருத்த ஏமாற்றம் தான் இதனால் ரசிகர்கள் கொஞ்சம் சோகமாக தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நாளைக்கு வர இருக்கும் டீசர் பற்றிய ஒரு சுவாரிஸ்யமான செய்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27 ல் வெளியாகவுள்ளது. கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் மும்பை கதையை கொண்டு காலா படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் காஞ்சிபுரம் சங்கராச்சாரியரின் இறுதி சடங்கு காரணமாக டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தகவல் வெளியிட்டார். தற்போது டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதில் ஸ்பெஷல் விசயம் என்றால் பிரபல ராப் இசை பாடகர் யோகி பி இப்படத்திலும் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் யோகிபாபுவுடன் காலாவில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ஒரு சிறந்...
சூப்பர் ஹிட் இயக்குனருடன் ஜோடி சேரும் தல அஜித்

சூப்பர் ஹிட் இயக்குனருடன் ஜோடி சேரும் தல அஜித்

Latest News, Top Highlights
அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை இருந்தும் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அஜித்தின் முக்கிய வட்டாரம் கூறுகிறது பொதுவாக அஜித் ஒரு படம் முடிந்தவுடன் தான் அடுத்த படம் அறிவிப்பு வரும் ஆனால் இந்த முறை கொஞ்சம் மாற்று கருத்துடன் அதுவும் சூப்பர் ஹிட் இயக்குனர் மட்டும் இல்லமால் வித்தியாசமான கதை களம் சொல்லும் இயக்குனருடன் ஜோடி சேருகிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனர் வினோத். சமீபத்தில் விஜய், அஜித் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். முன்னணி நடிகர்கள் இருவருமே வினோத்துடன் பணிபுரிய அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இருவரிடமும் வினோத் கதையைப் பற்றி ஆலோசனை செய்துள்ளார். அவர்களில் அஜித் நடிக்கும் படத்தை வினோத் அடுத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய், அடுத்த சில...