Sunday, November 8
Shadow

Top Highlights

காலா டீசர் தள்ளிவைப்பு உண்மை காரணம் இதுதான்

காலா டீசர் தள்ளிவைப்பு உண்மை காரணம் இதுதான்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'காலா' படத்தின் டீசர் மார்ச் மாதம் 1-ம் தேதியான இன்று வெளியாக இருந்தது. ஆனால், டீசர் நாளை வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் ட்விட்டரில் அறிவித்தார். 'காலா' டீசர் வெளியீட்டை தள்ளிவைத்ததில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. நேற்று காலை காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக 'காலா' படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். டீசருக்காக ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களை வருத்தமடையச் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார் தனுஷ். இந்த அறிவிப்பு ர...
கிளாப்போர்ட் புரொடக்ஷன்“ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ”கோலிசோடா 2“

கிளாப்போர்ட் புரொடக்ஷன்“ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ”கோலிசோடா 2“

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தார் வி.சத்யமூர்த்தி…இதை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து ‘கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ சார்பில் தயாரித்து வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே நிறுவனம் தற்போது கோடை கொண்டாட்டமாக மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள ‘கோலிசோடா 2’ படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்...
காலா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா காலா?  இன்னொரு பாட்ஷா வா?

காலா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா காலா? இன்னொரு பாட்ஷா வா?

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இந்த டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய திரையுலகின் பல சாதனைகளை இந்த டீசர் உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இந்த டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய திரையுலகின் பல சாதனைகளை இந்த டீசர் உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் 'காலா' என்பதும் அவரது கேரக்டரில் தான் படத்தின் டைட்டிலும் அமைந்துள்ளது என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் அவருடைய முழு பெயர் 'காலா சயித்' ( என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த கேரக்டர் பாட்ஷா பாய்' போல் ரசிகர்களிடையே பிரபலமாகும் என்று கூறப்படுகிறது. மேலும...
ஆபாச வலைத்தளங்களை பற்றிய முதல் தமிழ் படம் “எக்ஸ் வீடியோ”

ஆபாச வலைத்தளங்களை பற்றிய முதல் தமிழ் படம் “எக்ஸ் வீடியோ”

Latest News, Top Highlights
தமிழில் வெளியான ‘தோனி’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர். இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் "எக்ஸ் வீடியோஸ்". பிரபல ஆபாச வலைதளமான எக்ஸ் வீடியோவை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் சஜோ சுந்தர் கூறும்போது, "ஆபாசமான படங்களை எக்ஸ் வீடியோஸ் என்ற வலைத்தளம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வலைதளத்திற்கு எதிராக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. யூ-டியூப் போன்று எக்ஸ் வீடியோஸ் வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் வீடியோ பதிவு செய்யலாம். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானாலும் இளைய தலைமுறையினர் செய்யும் தவறுகள் அனைத்தும் எக்ஸ் வீடியோஸ் வலைதளத்தில் அரங்கேறி வருகிறது. எக்ஸ் என்பது எதை வேண்டுமானாலும் குறிப்பிடலாம். ஆனால், இங்கு எக்ஸ் என்று சொல்லும் போது தவறான வீடியோக்களாக மட்டுமே புரிந்துக் கொள்ளப்படுகிறது. ஆபாச வலைத்தளம் ...
காலா டீசர் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு  ரசிகர்கள் அதிர்ச்சி

காலா டீசர் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு ரசிகர்கள் அதிர்ச்சி

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா டீஸர் நாளை (மார்ச் 1ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதை காண ஆவலுடன் இருந்தனர். நாளை காலை 11 மணிக்கு டீஸர் வெளிவரும் என தனுஷ் இன்று மாலை அறிவித்தார். ஆனால் தற்போது தனுஷ் டீசர் மார்ச் 2ம் தேதிக்கு தள்ளிப்போவதாக அறிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று இறந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டீஸர் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தனுஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது....
மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும்

மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும்

Latest News, Top Highlights
புதிய திரைப்படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்கு கடிதம் அளித்தல். இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு முடித்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடேர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பதமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதுவரை தயாரிபளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது. ...
புதுமுக நடிகைகளை தன்வசமாக்கும் சந்தானம்

புதுமுக நடிகைகளை தன்வசமாக்கும் சந்தானம்

Latest News, Top Highlights
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், சஹான்யா நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் துவங்கியது. சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியும் வெளியாகவில்லை. செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' படமும் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை தீப்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....
வாழும்போதும் ஸ்ரீதேவி நிம்மதியாக இல்லை – பிரபல இயக்குநர் வருத்தம்

வாழும்போதும் ஸ்ரீதேவி நிம்மதியாக இல்லை – பிரபல இயக்குநர் வருத்தம்

Latest News, Top Highlights
நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் மறைவு குறித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீதேவி மரணச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். ஒருவரது வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்க பொறாமைப்படக் கூடியதாக தெரியும். ஆனால் அதன் மறுமுகம் வேதனையாக கூட இருக்கலாம். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அதற்கு உதாரணம். ஸ்ரீதேவி ஒரு கூண்டுக்கிளி போன்று சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்தார். தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள் அவர் மனதில் காயத்தை ஏற்படுத்தின. அதில் இருந்து அவர் நிம்மதியாகவே இல்லை. கேமிராவுக்கு முன்பு நடிக்கும் போது மட்டுமே ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்தார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அழகானது என்றே பலரும் நினைத்தனர். அழகு முகம், அற்புதமான திறமை, 2 அழகான மகள்களுடன் நல்ல...
சசிகுமார் – சமுத்திரக்கனியின் திடீர் முடிவு

சசிகுமார் – சமுத்திரக்கனியின் திடீர் முடிவு

Latest News, Top Highlights
இயக்குனர் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘நாடோடிகள்’. 9 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிக்க பழைய தோற்றம் வர வேண்டும் என்று சமுத்திரகனி, சசிகுமார் இருவரும் எடையை குறைக்கும் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அதன்படி அசைவ, சமைத்த உணவுகளை சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள். வேர்கடலை, தேங்காய், இளநீர், கற்றாழை ஜூஸ் போன்ற இயற்கை உணவுக்கு மாறி விட்டார்கள். இது தவிர லாரி டயர்களை உருட்டுவது, பெரிய கயிற்று வடங்களை சுழற்றுவது போன்ற தீவிர உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். “ ‘நாடோடிகள்-2’-ம் முதல் பாகம் போல பேசப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த வித்தியாசமான முயற்சி” என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் அஞ்சலி, அதுல்யா, பரணி, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்....
இன்றைய பெண் காவலர்கள் அவலத்தை சொல்ல வரும் படம்  மிக மிக அவசரம்

இன்றைய பெண் காவலர்கள் அவலத்தை சொல்ல வரும் படம் மிக மிக அவசரம்

Latest News, Top Highlights
அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார். புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். அவரோடு வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமா...