Sunday, November 8
Shadow

Top Highlights

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அரசியல் மேடை எங்கு தெரியுமா யார் சிலை திறக்கிறார் தெரியுமா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அரசியல் மேடை எங்கு தெரியுமா யார் சிலை திறக்கிறார் தெரியுமா

Latest News, Top Highlights
சென்னை அடுத்த வேலப்பன் சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. விழாவில் மொரீஷியஸ் நாட்டு குடியரசு துணைத் தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கலந்துகொண்டு நூற்றாண்டு விழா கட்டடத்தை திறந்துவைக்கப்போகிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியைத் திறந்துவைக்கப்போகிறார். ரஜினி, எம்.ஜி.ஆரின் வெங்கலச் சிலையைத் திறந்துவைக்கப் போகிறார். அவரின் கையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்...அப்போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.ஜி.ஆருடன் நடத்த நடிகர், நடிகைகள், எம்.ஜி.ஆரின் உறவினர்கள்...என்று முக்கியமானவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகளை வழங்கப்போகிறார். அரசியல் வானில் ஜொலிக்கப்போகும் ரஜினிக்கு இந்த விழா ஒரு மகுடமாக இருக்கப்போகிறது " என்றார். இதே நேரத்...
வித்யா பாலன் நடித்த வேடத்தில் நடிக்கும் ஜோதிகா

வித்யா பாலன் நடித்த வேடத்தில் நடிக்கும் ஜோதிகா

Actress Gallery, Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
வெற்றிப்படமான ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது! வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்! கடந்த வருடத்தில் வெளியாகி மகத்தான வெற்றிபெற்ற ‘துமாரி சுலு’ படத்தை டிசீரிஸ் மற்றும் எல்லிப்சிப்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடிக்க... மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த குடும்ப & நகைச்சுவை படமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்தின் தமிழாக்க உரிமையை சென்னையின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தற்போது தயாரித்துக்கொண்டிருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் நடிகர் கார்த்திக், கௌதம் கார்த்தி, ரெஜினா, வரலட்சுமி உட்பட மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த நிறுவனம் இதற்கு...
கவுதமியின் சம்பள பாக்கியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்: கமல்

கவுதமியின் சம்பள பாக்கியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்: கமல்

Latest News, Top Highlights
துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு நடிகர், நடிகைகள் சென்று போனிகபூரின் தம்பி அனில்கபூர் அவரது மனைவி சுனிதா போனி கபூரின் தாயார், குடும்பத்தினர் மற்றும் ஜான்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். ஸ்ரீதேவியுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் போனி கபூர் வீட்டுக்கு சென்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதில் நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறிவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசும்போது, ‘ஸ்ரீதேவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். ஐஐடி வளாகத்தில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழகத்தி...
திருமணத்திற்கு தயாரான ஸ்ரேயா

திருமணத்திற்கு தயாரான ஸ்ரேயா

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் கார்த்திக் நரேன் இயக்கும் `நரகாசூரன்', படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் இவருக்கும், இவரது ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது வதந்தி என கூறியிருந்தார்கள். ஆனால், தற்போது ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதி எனக் கூறப்படுகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷிக்கும் ஸ்ரேயாவிற்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமண நிகழ்வு இந்து முறைப்படி மார்ச் 17, 18 மற்றும் 19 என மூன்று தினங்கள் உதய்பூரில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது....
அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம்  ‘என் பெயர் ஆனந்தன்’..!

அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம் ‘என் பெயர் ஆனந்தன்’..!

Latest News, Top Highlights
காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார். குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ள...
‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்..!

‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்..!

Latest News, Top Highlights
கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் 'காளி' நாயகி ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.. இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் பட வெளியீடு விரைவில் நடைபெறும்....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ

Latest News, Top Highlights
தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை விரைவில் அறிவிக்க உள்ள ரஜினிகாந்த், மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ’பீட்சா’, ’ஜிகர்தண்டா’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார். ‘2.0’, ’காலா’ என இரண்டு படங்கள் ரஜினியின் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயராக உள்ள நிலையில், அவரது புதிய படத்தின் அறிவிப்பும், அதன் இயக்குநராக இளம் இயக்குநரை அவர் தேர்வு செய்திருப்பதும், தமிழ் சினிமாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து இந்த தகவல...
சூர்யா படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட செல்வராகவன்

சூர்யா படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட செல்வராகவன்

Latest News, Top Highlights
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கிறார்கள். த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் ஒன்றும் அமைக்கப்படுகிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மார்ச் 5-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
அடுத்தடுத்து கிசுகிசுக்கப்படும் காஜல் அகர்வால் – இப்போ இவரா?

அடுத்தடுத்து கிசுகிசுக்கப்படும் காஜல் அகர்வால் – இப்போ இவரா?

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் அவசரம் காட்டுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காஜல் அகர்வால் - நடிகர் ராணா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ‘நீனே ராஜு நீனே மந்திரி’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் மறுத்தனர். பின்னர் தெலுங்கு இளம் நடிகர் ஒருவருடனும் காஜல் அகர்வால் இணைத்து பேசப்பட்டார். தற்போது காஜல் அகர்வாலுக்கும், மும்பை தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் வந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. அவரை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், அதனை காதல் அகர்வால் மறுத்துள்ளார்....
அஜித் படத்தில் முதல்முறையாக நடிக்கும் காமெடி நடிகர்

அஜித் படத்தில் முதல்முறையாக நடிக்கும் காமெடி நடிகர்

Latest News, Top Highlights
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது....