Sunday, November 8
Shadow

Top Highlights

நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. இந்த வருடம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா' என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்திலும் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 5-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் முதல் பாடலை மார்ச் 8-ம் தேதி வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை இப்படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதன்...
6 அத்தியாயம் – திரைவிமர்சனம் (புதிய அத்தியாயம்) Rank 3.5/5

6 அத்தியாயம் – திரைவிமர்சனம் (புதிய அத்தியாயம்) Rank 3.5/5

Review, Top Highlights
6 அத்தியாயம் இது ஆறு இயக்குனர்களின் உணர்வு அந்த ஆறும் ஆறுமுகனை போல அழகு அருமையான கதையம்சம் கொண்ட படங்கள் நேர்த்தியான நட்சத்திர தேர்வுகள் புதிய முயற்சி சாதனை முயற்சி என்று சொல்லணும் அந்த அளவுக்கு அருமையான முயற்சி என்று சொல்லவதை புதுவிதம் அது சாதனை என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு சிறப்பான படம் இந்த படத்தில் தமன்.எஸ்.எஸ்.ஸ்டான்லி,பாப் சுரேஷ், பசங்க கிஷோர் வினோத் கிருஷ்ணன் ,விஷ்ணு சந்தோஷ், இசை சாம் ஜோஷ்னா , தாஜ்நூர், சதீஷ் குமார், ஜோஸ் பிராங்கிளின் இவர்கள் இசையில் கேபிள் ஷங்கர், அஜயன் பாலா, லோகேஷ் , ஸ்ரீதர் வெங்கடேசன் இவர்களின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் 6 அத்தியாயம் குறும்படங்களை தங்களுக்கான விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி வந்தவர்கள், இனி அந்த குறும்படங்கள் மூலமாக இயக்குநர் என்ற அங்கீகாரத்தை பெறும் புதிய முயற்சியாக வெளியாகியிருக்கும் படம் தான் ‘6 அத்தியாயம்’. 6 கதைகள், 6 இ...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுக்கும் உத்திரவாதம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுக்கும் உத்திரவாதம்

Latest News, Top Highlights
ரஜினி நடித்து முடித்துள்ள காலா படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகிறது. லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் பற்றி கார்த்திக் சுப்பாராஜிடம் கேட்டால், ''இந்த படத்தில் பிரம்மாண்டம் இருக்காது. ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் பிரம்மாண்டம் இருக்கும்.” என்கிறார். நானும் ரஜினி ரசிகன். அவருடைய படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்கும் தெரியும். அனைத்து அம்சங்களும் என்படத்தில் இருக்கும்' என்று உத்தரவாதம் தருகிறார் கார்த்திக் சுப்பாராஜ்....
6  அத்தியாயம் – சித்திரம் கொல்லுதடி’ இயக்குனரின் அடுத்த த்ரில்லர் ‘என் பெயர் ஆனந்தன்’..!

6 அத்தியாயம் – சித்திரம் கொல்லுதடி’ இயக்குனரின் அடுத்த த்ரில்லர் ‘என் பெயர் ஆனந்தன்’..!

Latest News, Top Highlights
காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார். குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ள...
சீமான், குஷ்புவை இணைத்த டிராபிக் ராமசாமி !

சீமான், குஷ்புவை இணைத்த டிராபிக் ராமசாமி !

Latest News, Top Highlights
அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் 'டிராபிக் ராமசாமி ' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை 'டிராபிக் ராமசாமி' என்கிற திரைப்படமாகி வருகிறது. கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத் தொழில்நுட்பம் படித்தவர். ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் . இப்படத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் , எஸ்.வி.சேகர் ,ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா , உபாசனா ,கஸ்தூரி , மனோபாலா, மதன் பாப் ,லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி , மோகன்ர...
ஸ்ரீதேவி (மயில்) மரணம் மேட்டர்ல சிக்கல் மேல சிக்கலாக்குறாங்க..!

ஸ்ரீதேவி (மயில்) மரணம் மேட்டர்ல சிக்கல் மேல சிக்கலாக்குறாங்க..!

Latest News, Top Highlights
7 மணிக்கு போனி கபூர் ஹோட்டலுக்கு போயிருக்காரு..! 7.15 மணிக்கு ஸ்ரீதேவி பாத்ரூமுக்குள்ள போயிருக்காங்க..! 7.30 மணிக்கு போனி கபூர் பாத்ரூம் கதவைத் தட்டியிருக்காரு.. பதில் இல்லை..! ஆனால் 10.30 மணிக்குத்தான் போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்காரு.. கபூர் 3 மணி நேரமா என்னய்யா பண்ணிக்கிட்டிருந்தாரு..? குழப்புதே..? துபாய், எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் 2201 எண் அறையில் ஸ்ரீதேவி தங்கியிருந்திருக்கிறார். அவருடைய பாத்ரூமிருக்கும் பாத்டாப் ஒன்றரை அடி தூரமே உயரம் கொண்டது. "அதில் எப்படி ஸ்ரீதேவி தானாக மூழ்கியிருக்க முடியும்..?" என்று கேள்வியெழுப்புகிறாராம் துபாய் அரசு வழக்கறிஞர். அதோடு "மும்பைக்கு போய்விட்டு உடனேயே திரும்பி வர வேண்டிய அவசியம் என்ன.? இருவரும் கடைசியாக என்ன பேசினீர்கள்...?" என்றெல்லாம் போனி கபூரிடம் கேள்விகள் கேட்டு குடைந்தெடுக்கிறார்களாம்..! துபாய் போலீஸ் "இது வன்முறையான ...
மக்கள் திலகம் எம் .ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடிக்கும்  கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு

மக்கள் திலகம் எம் .ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடிக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு

Latest News, Top Highlights
மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். படத்தின் நாயகி அறிவிப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி பட்டிகாட்டு பொன்னையா வரை 28 படங்களில...
பாடகர் உன்னிகிருஷ்ணன், ஷிரத் மற்றும்  சித்ரா துவங்கி வைத்த த்ரயா ஸ்டூடியோ

பாடகர் உன்னிகிருஷ்ணன், ஷிரத் மற்றும் சித்ரா துவங்கி வைத்த த்ரயா ஸ்டூடியோ

Latest News, Top Highlights
பாடகி சித்ரா , உன்னிகிருஷ்ணன் , மற்றும் இசையமைப்பாளர் ஷிரத் துவங்கி வைத்த த்ரயா போஸ்ட் ப்ரோடுக்ஷன் ஸ்டூடியோ ஹாலிவுட் தரத்தில் போஸ்ட் புரடக்‌ஷன்ஸ் ஸ்டூடியோ. முகப்பேரில் டப்பிங், ரெக்கார்டிங், மிக்சிங், அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் வசதியுடன் உதயமாகியுள்ளது த்ரயா ஸ்டூடியோ. ஜீலியும் நான்கு பேரும் படத்தின் இசையமைப்பாளர் " ரகு சவன் குமார் " சினிமா மீதான காதலால் ஒலியை துல்லித்தன்மையுடன் உருவாக்க இந்த ஸ்டூடியோவை நிர்மாணித்திருக்கிறார். இங்கு பயன்படுத்தபடும் கருவிகள் மிகப்பெரும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தன் கனவு ஸ்டூயோவை உருவாக்கியிருக்கிறார். ஒலி சம்மந்தமான ரெக்கார்டிங், ரீரெக்கார்டிங் , மிக்‌ஷிங், மாஸ்டரிங் போன்ற எல்லா போஸ்ட் புரடக்‌ஷனஸ் வேலைகளுக்கு வெளியே எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் நடைபெறுவதற்கு ஏற்றவாறு இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இங்கே மிக்ககுறைந்த பட்ஜ...
என்னை 2-வது நாயகியாக்க நினைத்தால்… மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங்

என்னை 2-வது நாயகியாக்க நினைத்தால்… மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங்

Latest News, Top Highlights
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். அடுத்ததாக ரஜாத் இயக்கத்தில் கார்தியுடன் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார். அடுத்து அஜய் தேவ்கனுடன் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் ‘அய்யார்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், 2-வது நாயகியாக ரகுல் நடிப்பதாக வெளியான செய்திக்கு பதில் அளித்த ரகுல் பிரீத் சிங், “நான் தற்போது நடிக்கும் படங்களில் முன்னணி நாயகியாக தான் நடித்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகளும் நடிக்கிறார்கள். என்றாலும், அவர்களை காரணம் காட்டி எனது பாத்திரத்தை எந்த இயக்குனரும் டம்மி ஆக்கவில்லை. 2-வது நாயகியாகவும் நடிக்கவில்லை. மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு என்னை 2-வது நாயகி ஆக்கினால், நான் அந்த படத்தில் இருந்து வெளியேறி விடுவேன் என்று ஆ...
அடுத்த படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

அடுத்த படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
ஆரம்பத்தில் ஊர் சுற்றும் வாலிபராக காமெடி கலந்த வேடத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், ‘வேலைக்காரன்’ படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார். மோகன்ராஜா இந்த படத்தை இயக்கினார். இது சிவகார்த்திகேயனுக்கு புதுவிதமான படமாக அமைந்தது. தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். முதல் படத்தில் ‘டைம் டிராவல்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார். வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை. எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந...