Sunday, November 8
Shadow

Top Highlights

இசையமைப்பாளர் ”ஸ்ரீ” யின் இசையில் “நாகேஷ் திரையரங்கம்”. பாடல்கள் வெளியானது

இசையமைப்பாளர் ”ஸ்ரீ” யின் இசையில் “நாகேஷ் திரையரங்கம்”. பாடல்கள் வெளியானது

Latest News, Top Highlights
டிரான்ஸ் இண்டியா மீடியா சார்பில், ராஜேந்திர M ராஜன் தயாரிப்பில், தனது முதலாவது திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து, கின்னஸ் சாதனை புரிந்த, இயக்குநர் இசாக் இயக்கத்தில், உருவாகி இருக்கும் திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ”நெடுஞ்சாலை” ஆரி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மாசூம் சங்கர், அதுல்யா, எம்.ஜி.ஆர் லதா, மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு, “பழைய சோறு பச்ச மிளகா” பாடல் புகழ், இசையமைப்பாளர் ”ஸ்ரீ” அவர்கள் இசையமைத்திருக்கிறார். பாடல்களை தாமரை, “மாயநதி” உமாதேவி, முருகன் மந்திரம், வேல்முருகன், மற்றும் ஜெகன் சேட் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2-&ல் சூரியன் பண்பலையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டில், ஆரி, ஆஷ்னா சவேரி, மாசூம் சங்கர் அதுல்யா மற்றும் இயக்குநர் இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். ”நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16-ல் திரைக்கு வர இருக்கிறது...
படைவீரன் – திரைவிமர்சனம் (3/5)

படைவீரன் – திரைவிமர்சனம் (3/5)

Review, Top Highlights
நாயகன் விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவர் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழகி வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் யேசுதாஸ் அவரது உறவுக்கார பெண்ணான நாயகி அம்ரிதாவை காதலித்து வருகிறார். அதேநேரத்தில் போலீஸ் வேலை மீது விஜய் யேசுதாஸுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. போலீஸானால் மரியாதை கிடைக்கும், சாப்பாடு, சரக்கு என ஜாலியாக இருக்கலாம் என்ற ஆசையில் போலீசாக முயற்சி செய்கிறார். அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார். அவரும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விஜய்க்கு உதவி செய்து, தேர்வில் தேர்ச்சி பெற வைக்கிறார். பிறகு பயிற்சியில் மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக போலீசாகி விடுகிறார். ஆனால், பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேய...
நான் திமிரு பிடிச்சவன் தான் – விஜய் ஆண்டனி

நான் திமிரு பிடிச்சவன் தான் – விஜய் ஆண்டனி

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான `அண்ணாதுரை' படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற நிலையில், கிருத்திகா உதயநிதி நடிப்பில் விஜய் ஆண்டனி நடித்து வந்த `காளி' படத்தின் படப்பிடிப்பும் கடந்த திங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த பட போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்க இர...
மதுர வீரன் – திரை விமர்சனம் (வீரம்)  (3/5)

மதுர வீரன் – திரை விமர்சனம் (வீரம்) (3/5)

Review, Top Highlights
மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றின் தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் மக்கள் அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் செல்லக்கூடாது. ஜல்லிக்கட்டு போன்ற பொது நிகழ்ச்சிகளில் களமிறங்க கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கட்டுள்ளது. அவர்களும் கோயிலுக்குள் வர வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்று அந்த ஊர் மக்களு ஆதரவாக பேசுகிறார் சமுத்திரக்கனி. அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கிறது. அதில் பக்கத்து ஊர் மக்களும் கலந்து கெள்கின்றனர். அந்த போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தியின் தம்பி, மைம் கோபியின் அண்ணன் உயிரிழந்து விடுகின்றனர். இதையடுத்து அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் சமுத்திரக்கனியின் மனைவி, அவரது சிறுவயது மகன் சண்...
நான் தளபதியின் ரசிகை அப்புறம் தான் நடிகை பிரபல நடிகை ஓபன் டாக்

நான் தளபதியின் ரசிகை அப்புறம் தான் நடிகை பிரபல நடிகை ஓபன் டாக்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் பலரும் அவருடைய ரசிகர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகைகள் அதிகம் இதனை பிரபலங்கள் பலர் பேட்டிகளில் தெரிவித்து உள்ளனர். தற்போது அந்த லிஸ்டில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அதுல்யாவும் இணைந்துள்ளார். இன்று படு பிஸியான நடிகை அதோடு அதிக ரசிகர் பட்டாளம் உள்ள நடிகையும் இவர் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் முதலில் தளபதி விஜயின் தீவிர ரசிகை, அதன் பிறகு தான் நடிகை என்பதெல்லாம் என கூறியுள்ளார். மேலும் தளபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தவறாமல் நடிப்பேன் என கூறியுள்ளார். வேறு எந்த படத்தின் பிடிப்பு இருந்தாலும் அதை தவிர்த்து விட்டு நடிப்பேன்...
சமூகவலைத்தளங்களை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள் எதற்கு தெரியுமா ?

சமூகவலைத்தளங்களை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள் எதற்கு தெரியுமா ?

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நித்ய சினிமாவிலே மிகவும் சிறந்த ரசிகர்கள் என்றால் அது அஜித் ரசிகர்கள் தான் காரணம் மன்றம் கிடையாது சந்திப்புகிடையாது இருந்தும் அஜித் மீது உள்ள பக்தி ரசிகர்களுக்கு குறைந்தது கிடையாது அவர் என்ன தான் வேண்டாம் எனக்கு எதுவும் செய்யாதீர்கள் என்றாலும் அவர் ரசிகர்கள் அவரை காய் விட்டது இல்லை இப்படி ஒரு ரசிகர்கள் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது மேலும் தல அஜித் மே 1-ம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார், இதற்காக ரசிகர்கள் பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அதற்காக தற்போதே ட்விட்டரில் #3MonthsToதலതലअजीतBDay உருவாக்கி பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றன...
பிரபல பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னையில் நடக்கிறது

பிரபல பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னையில் நடக்கிறது

Latest News, Top Highlights
“ விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே “ “ நெஞ்சு பொருக்கிதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை “ “ குற்றம் புரிந்தவர் வாழ்கையில் நிம்மதி கொள்வது ஏது “ “ வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் அருகில் வந்தால் “ “ இன்று போய் நாளை வாராய் “ “ காவியமா இல்லை ஓவியமோ ? “ அன்பால தேடிய என் அறிவுச் செல்வம் – தங்கம் “ இது காலம் போன்ற காலம் கடந்தும் இன்றும் காற்றில் கலந்து நிலைத்து நிற்கும் பாடல்களை பாடியவர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். சுமார் 500 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னை மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. சிறுவனாக இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த சிதம்பரம் எஸ்.ஜெயராமன் காலத்தால் அழியாத பாடல்களை பாடியதுடன், இசையமைப்பாளர், விளையாட்டு வீரர் என்று பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார். சிதம்பரம் எஸ்.ஜெயரா...
தம்பி கார்த்தி படத்துக்கு அண்ணன் சூர்யா வைத்த ஆப்பு

தம்பி கார்த்தி படத்துக்கு அண்ணன் சூர்யா வைத்த ஆப்பு

Latest News, Top Highlights
தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு 'கடைக்குட்டி சிங்கம்' என தலைப்பு வைக்கப்பட்டது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றுள்ள 'பயிர் செய்ய விரும்பு' என்ற வாசகம் சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. இந்நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்' படப்பிடிப்பைக் காண தன் மகன் தேவ் உடன் வந்த சூர்யா, ரேக்ளா ரேஸ் பந்...
ரயிலில் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொல்லை

ரயிலில் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொல்லை

Latest News, Top Highlights
பிரபல மலையாள நடிகையான சனுஷா, தமிழில் ‘ரேனிகுண்டா’ படம் மூலம் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து ‘நந்தி’, ‘எத்தன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘கொடி வீரன்’ திரைப்படம் வெளியானது. இந்நிலையில், நேற்று சனுஷா கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரெயிலில் சென்றிருக்கிறார். தூக்கத்தில் இருக்கும் சனுஷாவை அன்டோ போஸ் என்ற மனிதர், சனுஷாவின் உதட்டில் கை வைத்திருக்கிறார். இதையறிந்த சனுஷா, அவரை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தின் போது, திரைக்கதை ஆசிரியர் உன்னி மற்றும் ரஞ்சித் என்பவர் மட்டும் சனுஷாவிற்கு உதவி செய்திருக்கிறார்கள். மற்ற பயணிகள் யாரும் சனுஷாவிற்கு உதவி செய்யவில்லை. இதுகுறித்து சனுஷா கூறும்போது, ‘ரெயிலில் ஏற்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. அந்த சம்பவத்தின் போது, என்னுடன் பயணித்தவர்கள் மட்டுமே எனக்கு உதவி செய...
சூர்யாவுக்கு வில்லனான விஜய் பட வில்லன்

சூர்யாவுக்கு வில்லனான விஜய் பட வில்லன்

Latest News, Top Highlights
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் நாயகிகளாக ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நடிக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் துவங்கிய இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது....