Sunday, November 8
Shadow

Top Highlights

நடிகர் ஜெய்க்கு கைகொடுக்கும் சூர்யா

நடிகர் ஜெய்க்கு கைகொடுக்கும் சூர்யா

Latest News, Top Highlights
ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற 'பலூன்' படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக கலகலப்பு-2 படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஜெய் தற்போது வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கத்தில் 'ஜருகண்டி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். 'ஜருகண்டி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில தினங்களுக்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் செய்தார். இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். வருகிற பிப்ரவரி 5-ம் தேதி மாலை 6 மணிக்கு டீசரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய...
நான் முதலில் விஜய் ரசிகை, அப்புறம் தான் நடிகை – யார் சொன்னா தெரியுமா?

நான் முதலில் விஜய் ரசிகை, அப்புறம் தான் நடிகை – யார் சொன்னா தெரியுமா?

Latest News, Top Highlights
‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர். தற்போது இவரது நடிப்பில் ‘ஏமாலி’ என்ற படம் வெளியாகி உள்ளது. இதில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வி.இசட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யுடன் நடிக்க ஆசையாக இருப்பதாக அதுல்யா ரவி கூறியிருக்கிறார். இது பற்றி அதுல்யா அளித்த பேட்டியில், “நான் முதலில் விஜய் ரசிகை. அதன் பிறகு தான் நடிகை. அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்று கூறியுள்ளார். வாய்ப்பு கிடைக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்....
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு

ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு

Latest News, Top Highlights
என்னை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த R.சேகர் சென்னை வரும் போது விபத்தில் இறந்து போனார்.. அவரது குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டேன்....அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது....அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்... இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம்.. வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்... சந்திக்கும் இடம் நேரம் தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும்.. அதன் முதல் கட்டமாக வரும் 7ம் தேதி புதன் கிழமை சேலத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைபடம் எடுத்துக...
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்

களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்

Latest News, Top Highlights
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "களவாணி" திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த "எத்தன்" படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டது. தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் "வதம்" படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க "களவாணி 2" என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. "களவாணி 2" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது. இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தய...
காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

Latest News, Top Highlights
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் காவல்துறையிடம் புகாரும் அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தது. காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது....
விசிறி – விமர்சனம் (Rating 3.5/5)

விசிறி – விமர்சனம் (Rating 3.5/5)

Review, Top Highlights
சென்னையில் அம்மா, அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராம் சரவணா. இவர் அஜித்தின் தீவிர ரசிகர். அதுபோல், மதுரையில் வாழ்ந்து வருகிறார் மற்றொரு நாயகன் ராஜ் சூர்யா. இவர் விஜய்யின் தீவிர ரசிகர். இருவரும் அடிக்கடி பேஸ்புக்கில் சண்டைப்போட்டு வருகிறார்கள். இதை தன் நண்பர்களுடன் பகிர்கிறார் ராம் சரவணா. ஆனால் நண்பர்களோ, நாங்கள் எல்லாம் பேஸ்புக்கில் பெண்களை கரெக்ட் செய்கிறோம். நீ சண்டை போட்டுகிட்டு இருக்கிற என்று அவரை கிண்டல் செய்கிறார்கள். இதையடுத்து, தானும் ஒரு பெண்ணை காதலிப்பேன் என்ற சவால் விடுகிறார் ராம் சரவணா. ஒரு நாள் நாயகி ரெமோனா ஸ்டெபனி பார்த்து காதல் வயப்படுகிறார். முதலில் ராம் சரவணாவின் காதலை மறுக்கும் ரெமோனா பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார். ரெமோனா விஜய் ரசிகை என்பதால், தானும் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி காதலித்து வருகிறார் ராம் சரவணா. இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னை...
சிலம்பத்தால் வசீகரிக்கப்பட்டு ஈர்க்கப்பட்ட விஜய் ஆண்டனி

சிலம்பத்தால் வசீகரிக்கப்பட்டு ஈர்க்கப்பட்ட விஜய் ஆண்டனி

Latest News, Top Highlights
புதிய புதிய இலக்குகளை மிக மிக ஆர்வத்தோடு கடக்கும் ஒரு மாலுமி தான் நடிகர் விஜய் ஆண்டனி என்றால் மிகை ஆகாது. ஒரு இசையமைப்பாளராக துவங்கிய விஜய் ஆண்டனி மிகப்பெரிய அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் பெற்றார். பல்வேறு அவதாரங்களை எடுத்த விஜய ஆண்டனி, தன் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி நடிகராக, எடிட்டராகவும் மாறியிருக்கிறார். எஸ் எஸ் ராஜமௌலியின் முன்னாள் உதவியாளர் கணேஷா இயக்கும் திமிர் பிடிச்சவன் படத்தில் தன் ஒட்டு மொத்த திறமைகளையும் உபயோகப்படுத்த இருக்கிறார் விஜய் ஆண்டனி. போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய் ஆண்டனி இன்னொரு புதிய அவதாரத்தையும் எடுக்கிறார் விஜய் ஆண்டனி. பன்முகத் தன்மைகளை கொண்ட விஜய் ஆண்டனி, இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக சிலம்பம் பயின்று வருகிறார். விஜய் ஆண்டனியின் இந்த முயற்சிகளை பற்றி இயக்குனர் கணேஷா கூறும்போது, "எல்லா துறைகளிலும் தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுக்க முய...
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம் (கலாட்டா கலக்கல்)

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம் (கலாட்டா கலக்கல்)

Review, Top Highlights
கருப்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள அடுத்த படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக பூர்த்தி செய்தது. படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை பார்த்து விடலாம். ஆந்திர மாநிலம் எமசிங்கபுரம் என்ற ஒரு மலைகிராமம் தான் படத்தின் கதைக்களம். இங்கு வாழும் அனைவரும் நேர்மையாகவும், யாரையும் துன்புறுத்தாமலும் திருடுவது மட்டும் தான் இவர்களது தொழில். எமனையே முதற்கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு விஜய் சேதுபதி தான் இளவரசர். தனது நண்பர்கள் இருவருடன் திருடுவதற்காக சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு நாயகி நிகாரிகாவை சந்திக்கிறார். அவரை கடத்திச் சென்று விட வேண்டும் என்று சில திட்டங்கள் போட்டு தோல்வியடைந்தாலும், இறுதியாக அவரை கடத்தி தனது கிராமத்திற்கு சென்று...
கமல் மற்றும் ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கும் விஜய்

கமல் மற்றும் ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கும் விஜய்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து அதிரடி காண்பித்துவிட்டார். மேலும், தனது கட்சிக்காக மாவட்டம் வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், ஒவ்வொரு மாவட்டத்திற்கான பொறுப்பாளர்களை நியமித்து அவர்களது பெயர்களையும் வெளியிட்டு வருகிறார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போல நடிகர் விஜய்க்கும் அரசியல் மீது ஆர்வம் இருந்த நிலையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரது படங்கள் ரிலிஸின் போது தொடர்ந்து சந்தித்த சிக்கலால், தனது அரசியல் ஆசைக்கு ஓய்வு அளித்திருந்தார். தற்போது, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலில் நுழைய உள்ள நிலையில், விஜயும் அரசியலில் ஈடுபடுவதற்காக முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தனது படங்களில் அரசியல் வசனங்களை பேசி சர்ச்சையை உருவாக்கி...
ஏமாலி – திரைவிமர்சனம்  (நாகரிக கோமாளி) Rank 2.5/5

ஏமாலி – திரைவிமர்சனம் (நாகரிக கோமாளி) Rank 2.5/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் வந்துகொண்டு தான் இருக்கிறது எல்லா இயக்குனர்களும் நல்ல கதை என்று தான் எழுதுகிறார்கள் ஆனால், அதை திரைக்கதை எழுதும் போது இவர்களின் எண்ணத்தை மாற்றிகொள்கிறார்கள் நாகரிக காலத்துக்கு ஏற்ப திரைக்கதை அமைக்கிறேன் என்று கோமாளித்தனம் செய்கிறார்கள் என்று தான் சொல்லணும் . அப்படியான ஒரு படம் தான் ஏமாளி ஆம் நல்ல கதை அனால் தேவையில்லாத திரைகதை தேவையில்லாத பாடல்கள் என்று கோட்டை விட்ட படம் தான் ஏமாளி இளம் ரசிகர்களுக்கு உண்மையான திருவிழா கொண்டாட்டம் மற்றவர்களுக்கு சமுதாய சீர்கேடு என்று தான் சொல்லணும் நாட்டில் எத்தனை விதமான செக்ஸ் இருக்கோ அத்தனை பற்றியும் விவாதம் செய்துள்ளார் இயக்குனர் திழ் சினிமாவின் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வி.இசட். துரை அஜித் வைத்து முகவரி என்று காலத்தால் அழிக்கமுடியாத படத்தை இயக்கிய துரை தான் இந்த படத்தின் இயக்குனர் படம் முழுக்க இன்றய காலத்த...