Sunday, November 8
Shadow

Top Highlights

விஜய் ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் கொடுக்கும் மிக பெரிய சப்ரைஸ்

விஜய் ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் கொடுக்கும் மிக பெரிய சப்ரைஸ்

Latest News, Top Highlights
தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து தற்போது தளபதி-62 படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது உறுதியாகி உள்ளது, இது தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தளபதி-62 படத்தை பற்றி பேட்டியளித்துள்ளார், அதில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. தளபதி-62 படத்தின் பாடல்கள் மெர்சல் பட பாடல்களை போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கும், விஜயை பாட வைப்பது பற்றியும் பரிசீலனை செய்யப்படும் என கூறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்....
பா.இரஞ்சித் ஒருங்கிணைப்பில் சென்னையில் முதல் முறையாக வரலாற்று இசை இணைவு “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்”!

பா.இரஞ்சித் ஒருங்கிணைப்பில் சென்னையில் முதல் முறையாக வரலாற்று இசை இணைவு “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்”!

Latest News, Top Highlights
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி சென்னையில் 06-01-2018 அன்று நடைபெற இருக்கிறது. முன்னதாக, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு கலைஞர்களை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பா.இரஞ்சித் பேசியதாவது, “நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சி தான் இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி. இதில் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிக பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவ...
பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் மீண்டும் விஜய் படத்தில் இணைவதை பற்றி ஏ..ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா

பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் மீண்டும் விஜய் படத்தில் இணைவதை பற்றி ஏ..ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா

Latest News, Top Highlights
முருகதாஸ் திறமையான இயக்குநர், திரைப்பட பாடல்களுக்கு நன்றாக காட்சிகளை அமைக்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைவது மகத்தானது என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். விஜய் படம் உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ''முருகதாஸ் திறமையான இயக்குநர், திரைப்பட பாடல்களுக்கு நன்றாக காட்சிகளை அமைக்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைவது மகத்தானது. மெர்சல் பாடல்களிலிருந்து வித்தியாசமான பாடல்களை விரும்புபவர்களுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் விருந்தாக அமையும். விஜய்யை பாடவைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதைஒ பார்த்து வருகிறோம், ஒருவரை ஒரு விஷயத்தைச் செய்யுமாறு வற்புறுத்தக் கூடாது. கடைசியில் இது அவர் படம்தான். பார்ப்போம்'' என்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான், அசின் நடித்த 'கஜினி' இந்திப் படத்துக்கு ர...
மலேசியாவில் பார்த்திபன் ஆடும் ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

மலேசியாவில் பார்த்திபன் ஆடும் ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்ட நிலைதானோ என்னவோ அனைத்து இயக்குனர்களும் தங்களது வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க களமிறங்கி விட்டார்கள். அந்த வரிசையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தான் இயக்கி, நடித்து, தயாரித்து 1993-ல் வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். கடைசியாக ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி, நடக்கவிருக்கும் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள பார்த்திபன் அது குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘‘மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி! 5,6,7 தேதிகளில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் விழாவுக்கும், என அடுத்த படமான ‘உள்ளே வெளியே-2’ படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் மலேசியா வருகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்....
நயன்தாராவிற்கு கிடைத்த புதிய மச்சினிச்சி!

நயன்தாராவிற்கு கிடைத்த புதிய மச்சினிச்சி!

Latest News, Top Highlights
  சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ’தானா சேர்ந்த கூட்டம்’. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் “ தானா சேர்ந்த கூட்டம் “ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பா...
கெழவிக்காக பாட்டு எழுதிய முருகன் மந்திரம்

கெழவிக்காக பாட்டு எழுதிய முருகன் மந்திரம்

Latest News, Top Highlights
எத்தனையோ ஆன்ந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆன்ந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும்ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆன்ந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆன்ந்தம். மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த கெழவிஆன்ந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. பாடலை முருகன் மந்திரம் மற்றும் ராஜேஷ் எழுதியுள்ளனர். பிரேம்ஜி பாடியுள்ளார். கார்த்திக் குமார் ஒளிப்பதிவில் அருண்கிருஷ்ணா எடிட் செய்துள்ளார். மார்த்தாண்ட சக்கரவர்த்தி வெப் சீரிஸ் பார்ப்போரை எல்லாம் இடைவெளி இல்லாமல் சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, சீரிஸ்-ன் ஸ்பெஷலாக இருக்கும்இந்த கெழவி ஆன்ந்தம் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. ந...
என் படத்தில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை: சூர்யா

என் படத்தில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை: சூர்யா

Latest News, Top Highlights
ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டர் முக்கியமோ...
விஜய் 62 படத்தின் நாயகி உறுதிசெய்யப்பட்டது

விஜய் 62 படத்தின் நாயகி உறுதிசெய்யப்பட்டது

Latest News, Top Highlights
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மீண்டும் இணைவது உறுதியாகிவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இதற்காக வேலைகளை இயக்குனர் செய்து வருகிறார். தற்போது இப்படத்திற்காக விஜய்யின் போட்டோ ஷூட் போயிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது இந்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்‌ஸ்ர்ஸ் உறுதி செய்துள்ளது. பைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் கீர்த்தி அவருடன் ஜோடி சேர்கிறார். ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது....
முன்னணி நடிகரின் டார்ச்சர் இயக்குனர் தற்கொலை முயற்சி

முன்னணி நடிகரின் டார்ச்சர் இயக்குனர் தற்கொலை முயற்சி

Latest News, Top Highlights
ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பலூன்’. இதில் ஹீரோயின்களாக அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார். ரசிகர்களிடம் இப்படம் வரவேற்பு பெற்றாலும், காலதாமதமாக ரிலீஸ் ஆனதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நஷ்ட்டத்திற்கும், படம் காலதாமதம் ஆனதற்கும் காரணம் நடிகர் ஜெய் தான் என்றும், அதற்காக அவர் தயாரிப்பாளருக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் இயக்குநர் சினிஷ் மறைமுகமாக கூறியிருந்தார். இந்த நிலையில், பலூன் படப்பிடிப்பின் போது, சரியாக படப்பிடிப்புக்கு வராமலும், அப்படி வந்தாலும் மது போதையில் வந்து படப்பிடிப்பு நடைபெறாத வகையிலும் ஜெய் நடந்துக்கொண்டதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜெய், இப்படி தொடர்ந்து கொடுத்த டார்ச்சர் காரணமாக இயக்குநர் சினிஷ் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை காப்பாற்றி சமாதானப...
ஏசி சண்முகம் தலைமையில் விஷால் முன்னிலையில் விஜயகாந்த் எம்.ஜி.ஆா். உருவசிலையை திறந்து வைத்தார்

ஏசி சண்முகம் தலைமையில் விஷால் முன்னிலையில் விஜயகாந்த் எம்.ஜி.ஆா். உருவசிலையை திறந்து வைத்தார்

Latest News, Top Highlights
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜாரமணி, ஜெயா, லதா, பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா மா.லட்சுமணன், குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ...