Sunday, November 8
Shadow

Top Highlights

‘நிமிர்’ படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு

‘நிமிர்’ படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள படம் ‘நிமிர்’. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு சமீபத்தில் தணிக்கை குழு `யு' சான்றிதழை வழங்கியிருந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ‘நிமிர்’ படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி ...
`சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

`சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் `சாமி ஸ்கொயர்' படத்தில் விக்ரம், தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்த...
முதல் முறையாக ரூட்டை மாற்றும் அருண் விஜய்!

முதல் முறையாக ரூட்டை மாற்றும் அருண் விஜய்!

Latest News, Top Highlights
’குற்றம் 23’ படத்திற்கு பிறகு அருண் விஜய் நடித்து வரும் அடுத்த படம் தடம். இப்படத்தை மகிழ் திருமேணி இயக்கி வருகிறார். படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் முக்கிய ஒரு தகவலை அருண் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். இப்படத்தில் முதல் முறையாக அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம். எழில், கவின் என்ற இரு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம். ரொமண்டிக் த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் நாயகிகளாக தன்யா ஹாப், ஸ்மிரிதி மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை கோபிநாத் ஏற்றுள்ளார். அருண் ராஜ் இசை அமைக்கிறார்....
பிகினி புகைப்படத்தை வெளியிட்டு திட்டு வாங்கிய கஸ்தூரி

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு திட்டு வாங்கிய கஸ்தூரி

Latest News, Top Highlights
ஹாலிவுட் நடிகை சல்மா ஹயேக்கின் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு நடிகை கஸ்தூரி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நடிகை கஸ்தூரி சமீப காலமாகவே டுவிட்டரில் அவரது கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதேபோல் சர்ச்சைக்குரிய பல விஷயங்களையும் பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில், என்னுடைய புதுவருட தீர்மானம், என்னுடைய 50 வயதில் நான் ஹாலிவுட் நடிகை சல்மா ஹயேக் போல் தோற்றம் பெற வேண்டும் என்று, அந்த நடிகையின் பிகினி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அவரது இந்த புகைப்படத்திற்கு சிலர் வரவேற்பு அளித்தாலும், பலரும் உங்களது தீர்மானம் எதுவாக இருந்தாலும், பொது இடத்தில் இப்படி புகைப்படத்தை போட்டு உங்களது மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்களே என்று கேட்டு வருகின்றனர். ஹாலிவுட் நடிகை நடிகை சல்மா ஹயக்குக்கு தற்போதைய 51 வயதாகிறத...
டிக் டிக் டிக் படத்தை மக்கள் முதலில் ஏற்க தயங்குவார்கள் – ஜெயம் ரவி!

டிக் டிக் டிக் படத்தை மக்கள் முதலில் ஏற்க தயங்குவார்கள் – ஜெயம் ரவி!

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் ஷக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ளது டிக் டிக் டிக். ஆசியாவின் முதல் விண்வெளி படம் என்ற பெருமையையும் இப்படம் தட்டிச் சென்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஜெயம் ரவி, ‘ முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். அதே போல் தான் இப்படத்தையும் முதலில் மக்கள் ஏற்க கொஞ்சம் தயங்குவார்கள். நமது உழைப்பாளிகளை வைத்தே இப்படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கியிருக்கிறோம். நல்லபடம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ...
கொலை செய்ய துணிந்த சமந்தா – வைரலாகும் வீடியோ

கொலை செய்ய துணிந்த சமந்தா – வைரலாகும் வீடியோ

Latest News, Top Highlights
‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா அடுத்ததாக இயக்கிய வரும் வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் முதல்முறையாக திருநங்கையாக நடிக்கிறார். பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். பி.எஸ்.வினோத் மற்றும் நிரவ்ஷா ஒளிப்பதிவு பண்களை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரத்திற்கான புகைப்படம் வெளியாகி மூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், சமந்தா கதாபாத்திரம் குறித்து சி...
படம் வெற்றி தான்… ஆனால் நான் சந்தோஷமாக இல்லை – புலம்பும் ‘பலூன்’ பட இயக்குநர்

படம் வெற்றி தான்… ஆனால் நான் சந்தோஷமாக இல்லை – புலம்பும் ‘பலூன்’ பட இயக்குநர்

Latest News, Top Highlights
ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. சினிஷ் இயக்கியிருந்த இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். ஆனால் படத்தின் இயக்குநர் மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார். இயக்குனர் சினிஷ் இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘பலூன்’ வெற்றி... தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி... இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை. சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் பலூன் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஏற்பட்ட பொருள் நஷ்டத்திற்கு யாரோ ஒருவரை ...
ரஜினிக்கு நானே தொண்டன்… அவருக்காக ரோட்ல இறங்குவேன் – விஷால்!

ரஜினிக்கு நானே தொண்டன்… அவருக்காக ரோட்ல இறங்குவேன் – விஷால்!

Latest News, Top Highlights
டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தனது அரசியல் பாதையை துவங்கி வைத்தார் ரஜினி. சில இடங்களில் எதிர்ப்பும் பல இடங்களில் ஆதரவும் வந்த வண்ணம் உள்ளன. மூத்த கலைஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் ரஜினியை வாழ்த்து வரவேற்றுள்ளனர். ரஜினியின் அரசியல் குறித்து விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார். நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன். அவருக்கு உதவியா இருப்பேன்," என்றார்....
புரளியை கிளப்பும் ரஜினி ரசிகர்கள் உண்மை நிலவரம் இதோ

புரளியை கிளப்பும் ரஜினி ரசிகர்கள் உண்மை நிலவரம் இதோ

Latest News, Top Highlights
இன்று உலக தமிழர்களிடம் மிகவும் பரபரப்பாக உள்ளவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஒரு பக்கம் அவரது அரசியல் ஒரு பக்கம் அவரது 2.0 படமும் தான் காரணம் அந்த அளவுக்கு ரசிகர்கள் அவர் மீது ஒரு நம்பிக்கை வைத்துள்ளனர் சரி நம்ம மேட்டருக்கு வருவோம் 2.0 படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று உறுதியாக கூறியுள்ளனர் இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறினார்கள் அனால் அது உண்மை இல்லையாம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இடம் வந்துகொண்டு இருக்கிறது. படம் எதிர்பார்ப்பில் இருக்கும் சமயத்தில் நேற்று இப்படத்தின் டீசரை மலேசியாவில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருக்கும் நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது உண்மையில்லையாம். இந்த விழாவில் 2.0 படத்தின் புகைப்படங்கள் கொண்ட டி ஷர்ட்டுகளை தான...
‘டிக் டிக் டிக்’ படபிடிப்பு அரங்கம் எங்களின் நடிப்பை எளிதாக்கியது – ஜெயம் ரவி

‘டிக் டிக் டிக்’ படபிடிப்பு அரங்கம் எங்களின் நடிப்பை எளிதாக்கியது – ஜெயம் ரவி

Latest News, Top Highlights
நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். இவ்விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஜெயப்ரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன், பாலாஜி வேணுகோபால், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ், இசையமைப்ப...