Sunday, November 8
Shadow

Top Highlights

வெளியாகிறது த்ரிஷாவின் மோகினி அவதாரம்

வெளியாகிறது த்ரிஷாவின் மோகினி அவதாரம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. அவரது நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ `1818' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைக்கிறார். இதில் `மோகினி' என்ற படத்தை ஆர்.மாதேஷ் இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மேலும் விஜய் நடித்த `மதுர' படத்தை இயக்கியவரும் இவர் தான். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை சிங்கம் 2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விவேக் மெர்வின் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 21-ஆம் தேதியும், இசை ஜனவரி 12-ஆம் தேதியும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது....
ரசிகர்கள்  மற்றும் மாணவர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வேலைக்காரன்

ரசிகர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வேலைக்காரன்

Latest News, Top Highlights
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வாரம் டிசம்பர் 22-ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள படம் 'வேலைக்காரன்'. இந்தப் படத்துக்கு மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகியுள்ளன. 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த வாரத்தில் அரையாண்டு பரீட்சை முடிவதால் வேலைக்காரன் படத்தை குடும்பத்துடன் கொண்டாடக்கூடிய வகையில் ரிலீஸ் செய்கிறார்கள். வேலைக்காரன் படத்திற்கு சென்சாரில் 'யு' சர்டிபிகேட் கிடைத்துள்ளது....
அமெரிக்காவை தொடர்ந்து ஐதராபாத்திலும் ஆடிப்பாடும் நாகர்ஜுனா மகன் அகில்

அமெரிக்காவை தொடர்ந்து ஐதராபாத்திலும் ஆடிப்பாடும் நாகர்ஜுனா மகன் அகில்

Latest News, Top Highlights
அகில் அக்கினேனி, ராணா டக்குபதி, நாயகி கல்யாணி பிரியதர்ஷன், இசையமைப்பாளர் அனூப் ரூபன்ஸ் ஆகியோர் தங்களின் புரமோஷனல் டூர் மூலம் அமெரிக்க ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கடந்த வாரம் கொடுத்தனர். நியூ ஜெர்ஸி, டல்லாஸ், சான் ஜோஸ் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்த ஹலோ படக்குழுவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்று தங்களின் அன்பால் திக்குமுக்காட செய்தனர். ஹலோ படக்குழுவினரின் அமெரிக்க டுர், வழக்கமான விளம்பர டூராக இல்லாமல் ஆடல், பாடல், நடிகர்கள் ரசிகர்கள் உரையாடல் என ஒரு கண்கவர் விழாவாக நடைபெற்றது. அகில் படங்களில் இருந்து பாடல் பாடியதோடு, படக்குழுவோடு இணைந்து துள்ளலான நடனம் ஆடியதை காண ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது. ராணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது அனைவரது உற்சாகத்தையும் பறைசாற்றியது. நடிகர்களோடு ரசிகர்கள் தனித்தனியாக சந்தித்து பேசும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ரசிகர்களை மேலும் மகிழ்...
பொங்கல் ரேஸில் களம் இறங்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

பொங்கல் ரேஸில் களம் இறங்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் தவிர விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா இணைந்து நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’, விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள ‘மதுரவீரன்’ ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இப்போது பொங்கல் வெளியீட்டு படங்கள் வரிசையில் சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படமும் இணைந்துள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் இந்த பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமல் நடித்து, சொந்தமாக தயாரித்துள்ள ‘மன்னர் வகையறா’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்து விளம்பரங்கள் செய்து வந்தனர். ஆனால் இப்படம் பொங்கல் ரிலீசிலிருந்த...
இசை புயல் ரகுமான் வாய்ப்பை தட்டிய இளம் இசை புயல்

இசை புயல் ரகுமான் வாய்ப்பை தட்டிய இளம் இசை புயல்

Latest News, Top Highlights
21 வருடங்கள் முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெட்ரா படம் என்றால் அது இந்தியன் இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப்போகிறது இதில் முதல் பாகத்தில் பங்குபெற்றவர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்ப்பார்த்தது ஆனால் பல மாற்றங்கள் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன்-2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வெளியானது. இதனையடுத்து இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்க இருந்ததாக கூறப்பட்டது, தற்போது அந்த தகவல் உண்மை தான் என்பது போல படக்குழுவினர் கூறி வருகின்றனர், மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக வேலைக்காரன் படத்தில் பணிபுரிந்த முத்துராஜ் இணைந்து...
எனக்கு திருமணத்தில் இப்போது ஈடுபாடு இல்லை – அஞ்சலி அதிரடி

எனக்கு திருமணத்தில் இப்போது ஈடுபாடு இல்லை – அஞ்சலி அதிரடி

Latest News, Top Highlights
முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான அஞ்சலி, குடும்ப பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள அவர், விரைவில் நடிகர் ஜெய்யை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்யும், அஞ்சலியும் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் சமையல் அறையில் இருவரும் ஒன்றாக இருப்பது போலவும், அஞ்சலி ஜெய்க்கு உணவு பறிமாறுவது போன்ற புகைப்படங்களும் வெளியானது. இந்த நிலையில், அஞ்சலி - ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்த அஞ்சலியிடம் திருமணம் குறுத்து கேட்ட போது, “ஜெய்யும் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரம் என்பதால் நடித்தேன். எங்கு என்றாலும் எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளூ...
ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டும் ஜீ வி பிரகாஷ்குமார்

ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டும் ஜீ வி பிரகாஷ்குமார்

Latest News, Top Highlights
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ்குமார் தொடங்கிவைத்தார். எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீ வி பிரகாஷ் குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் பேசும் போது,‘ தமிழகத்தின் தென் பகுதியை அண்மையில் வீசிய ஓகி புயலால் தமிழகத்தின் தென்கடலோரப்பகுதிகள் முழுவதும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், விவசாயப் பெருமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாக நடிகர் ஜீ வி பிரகாஷ்குமார் களத்தில் இறங்கினார். அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின...
ஓவியா பட வாய்ப்பை தட்டி பறித்த ஹன்சிகா

ஓவியா பட வாய்ப்பை தட்டி பறித்த ஹன்சிகா

Latest News, Top Highlights
சினிமாவை பொறுத்தவரை காற்று உள்ளபோதே தூற்றி கொள் என்பார்கள் ஆனால் அதுக்கு விதிவிலக்கு நம் ஓவியா படவாய்ப்பு இல்லாமல் இருந்த ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை. பிக் பாஸ் மூலம் பிரபலமான ஓவியாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அவர் கேட்கும் சம்பளத்தால் தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம். இதனால், தற்போதுவரை ஓவியா ‘காஞ்சனா 3’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இப்படத்தை தவிர வேறு எந்த படங்களும் அவர் கையில் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஞானவேல்ராஜா தயாரிப்பில் டிகே இயக்கும் ‘காட்டேரி’ படத்தில் தெலுங்கு நடிகர் சாய் மகன் ஆதி ஹீரோவாகவும், ஓவியா ஹீரோயினாகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் ஆதிக்கு பதிலாக வைபவ் ஹீரொவாக்கப்பட்டதோடு, ஓவியாவுக்கு பதில் ஹன்சிகாவை ஹீரோயினாக்கியுள்ளனர். பட வாய்...
ஏழு பாடலாசிரியர்கள் பாடல் எழுதும் “ அனிருத் “

ஏழு பாடலாசிரியர்கள் பாடல் எழுதும் “ அனிருத் “

Latest News, Top Highlights
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத் “ தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரத்னவேலு / இசை - மிக்கி ஜே. மேயர் இயக்கம் - ஸ்ரீகாந்த் ...
விஜய் கிண்டல் குறித்து அருவி தயாரிப்பாளர் விளக்கம்

விஜய் கிண்டல் குறித்து அருவி தயாரிப்பாளர் விளக்கம்

Latest News, Top Highlights
சமீபத்தில் திரைக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் படம் அருவி இந்த படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது அதோடு குருஞ்சி பூ பூப்பவது போல நீண்ட நாள் இல்லை இது வரை வந்த படங்களிலே மிக சிறந்த படம் என்றும் சொல்லலாம். இந்த படத்தில் கதைக்கு தேவைக்கு ஒரு சில காட்சிகள் வருகிறது அதில் விஜய் சமந்த காட்சியும் இடம் பெரும் இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர் ஆம் அருவி படத்தில் விஜய்யை கிண்டல் செய்யும் விதமாக ஒரு சில வசனங்கள் வரும், அதில் ‘விஜய் நடித்ததில் நல்ல படம், எப்படி கண்டுப்பிடிப்பது?’ என கூறியிருப்பார்கள். இதை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்த்தனர், இதற்கு அருவி தயாரிப்பாளர் பிரபு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார், இதோ.......