Friday, November 6
Shadow

Top Highlights

பொங்கல் ரேசில் இருந்து விலகிய விக்ரமின் ‘ஸ்கெட்ச்’

பொங்கல் ரேசில் இருந்து விலகிய விக்ரமின் ‘ஸ்கெட்ச்’

Latest News, Top Highlights
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகாது என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’. விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். விக்ரம், தமன்னா அவர்களது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே சமயத்தில் ‘டப்பிங்’ பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வடசெ...
இன்றைய அரசியல்வாதிகளை கலாய்க்கும்  தமிழ் படம் 2.0

இன்றைய அரசியல்வாதிகளை கலாய்க்கும் தமிழ் படம் 2.0

Latest News, Top Highlights
கடந்த 2010 ஆம் ஆண்டு சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான ‘தமிழ் படம்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. தமிழ் படங்களையும், நடிகர்களையும் கிண்டல் செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘தமிழ் படம் 2.0’ என்ற தலைப்பில் எடுக்கப்படுகிறது. சிவா நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்த போஸ்டரில், தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தது போல, நடிகர் சிவா தியானம் செய்யும் புகைப்படத்தோடு பஸ் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், புதிய படங்களை திருச்சுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையளத்தை கலாஇக்கும் விதமாகவும் போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஆரம்பத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘தமிழ் படம் 2.0’ ரசிகர்களிடம் பெரும் எத...
ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கஜினிகாந்த்

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கஜினிகாந்த்

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வழங்கும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யா - சாயிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாக இருக்கும் இந்த படத்தற்கு பாலமுரளிபாலு இசையமைக்கிறார். இந்த படத்துக்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினிகாந்த் பிறந்தநாள் மற்றும் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஆர்யா இன்று (11.12.2017) அவரது 38-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதேபோல் ரஜினிகாந்த் நாளை (12.12.2017) 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆர்யா பிறந்தநாளின் கடைசி நிமிடத்திலும்,...
கன்னியாகுமரி மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆரி, ஜி.வி.பிரகாஷ்

கன்னியாகுமரி மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆரி, ஜி.வி.பிரகாஷ்

Latest News, Top Highlights
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று நடிகர் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆறுதல் கூறியுள்ளனர். அவர்களை சந்தித்தப்பின் அவர்கள் கூறியதாவது, ‘நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூற வந்தோம். ஆனால் இங்கே இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள். சின்னதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர். அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள். அவர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை. என்று கூறும் போது மனது படபடக்கிறது. மீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள்​. இவர்களின் வாழ்வாதாரமே இந்த மீன்பிடி தொழில்தான். ஆனால் முறையான தொழில் நுட்பம் இல்லாமல் கடலில் சென்றதால் இம்மாவட்டத்தின் ப...
மீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்

மீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்

Latest News, Top Highlights
கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் எப்போதும் போல் தனது சமூக பணியை செய்து வரும் நடிகர் அபி சரவணன் அவர்களின் பதிவு.. குமரி மாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பை உண்டாக்கியது... சின்னாபின்னமான வாழைமரங்கள் போல அனைத்துதரப்பு மக்களையும் குலைநடுக்கவைத்தது... அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியாகிய மீனவர்களின் முகத்த நொடிகூட பார்க்க முடியாத அளவு மாறிவிட்டது... மனபாரம்தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன்... வழியில் என்னால் இயன்ற தேவையான நிவராண பொருட்களை காரில் நிரப்பியவாறு சென்றேன்.... அதிகாலை குமரியின் மீனவ கிராமங்களில் நுழைந்த போது காதைமட்டுமல்ல இதயத்தை துளைத்த கதறல்கள்..அப்பாவை தேடும் குழந்தையும் அண்ணணை தேடும் தங்கை கணவனை தேடிய மனைவிகளின் கதறல் கடவுளுக்கே கண்ணீரை தரும்... அதேநேரம் சுசீந்தரம் பகுதியில் உள்ள ஒருகிராமத்தில் ஒரு பகுதி...
அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா

அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா

Latest News, Top Highlights
சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்பட விழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை நடக்கவுள்ளது. 15-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் துவக்க விழாவில் நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காகப் போட்டியிடும் 12 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. 8 தோட்டாக்கள் 2. அறம் 3. கடுகு 4. குரங்கு பொம்மை 5. மாநகரம் 6. மகளிர் மட்டும் 7. மனுசங்கடா 8. ஒரு கிடாயின் கருணை மனு 9....
ரஜினிக்கு போட்டியாக களம்  இறங்கும் விஜய் வெற்றியாருக்கு ?

ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கும் விஜய் வெற்றியாருக்கு ?

Latest News, Top Highlights
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் கபாலி. இப்படம் தான் ஓவர்சீஸிலேயே ரூ 100 கோடி வசூல் செய்த படம். இதன் பிறகு விஜய்யின் மெர்சல் ரூ 77 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது, இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் வரும் பொங்கலுக்கு கபாலி படம் ஒளிப்பரப்பவுள்ளார்கள். அதனால் சன் தொலைக்காட்சிக்கு TRP எகிறும் என்று நினைத்தால், ஜீதமிழ் தொலைக்காட்சியில் விஜய்யின் மெர்சல் படத்தை ஒளிப்பரப்பவுள்ளனர். இதனால், இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் கடுமையான TRP மோதல் இருக்கும், இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....
இந்திய அளவில் சாதனை படைத்த சூர்யா படம்

இந்திய அளவில் சாதனை படைத்த சூர்யா படம்

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியாகிய `சொடக்கு' பாடல் வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகிய டீசரை 60,7000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளதன் மூலம் இந்திய அளவில் அதிக லைக் பெற்ற இர...
தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழுவில் விஷால் – சேரன் அணிக்கு இடையே சலசலப்பு

தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழுவில் விஷால் – சேரன் அணிக்கு இடையே சலசலப்பு

Latest News, Top Highlights
தயாரிப்பாளர் சங்கத்துக்கு இந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக விஷால் பொறுப்பேற்ற பிறகு தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கந்துவட்டி பிரச்சனை, தயாரிப்பாளர்கள் சங்க வைப்பு நிதி, கேபிள் டி.வி, சேட்டிலைட் உரிமங்கள், டிஜிட்டல் சினிமா, கட்டண குறைப்பு, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த நிர்வாகத்தின் பொது கணக்கு தாக்கல் நிறைவு பெறவில்லை. எனவே கடந்த நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஷால் - சேரன் அணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சேரன் உள்ளிட்ட அவரது அணியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் பொதுக்குழுவில் பங்கே...
சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு

சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ...