Friday, April 17
Shadow

Tag: பதிவு

நடிகை கரீனா கபூர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கரீனா கபூர் அடிக்கடி செல்லமாக பெபோ , என்று அறியப்படுபவர், பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகையாவார். அவர் ஒரு திரைக் குடும்பத்தில் பிறந்தவர், அவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, அவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்றோர் திரைப்படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள், அதன் காரணமாக மிகவும் சிறிய வயதிலிருந்தே, கரீனா ஊடகத்தின் இடவொளியிலேயே திளைத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும், 2000 ஆண்டுவரை அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை, அவ்வாண்டில் அவர் முதன்முதலாக ரெப்யுஜீ என்ற படத்தில் தோன்றினார், மேலும் அதில் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது. அவர் நடித்த உணர்ச்சி மிக்க இன்ப முடிவுகொண்ட கபி குசி கபி கம் என்ற திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சந்தையில் மிகவும் அதிகமான தொகையை ஈட்டிய இந்தியப்படமாகும் மேலும் வணிகரீதியில் இன்று வரை அவருடைய மிகப்பெரிய ...

நடிகை பத்மா லட்சுமி பிறந்த தின பதிவு

Shooting Spot News & Gallerys
பத்மா பார்வதி லட்சுமி அல்லது லேடி ருஷ்டி ஒரு அமெரிக்க இந்திய நடிகையும், முன்னாள் மாடலும், உணவு நூல் எழுத்தாளரும் ஆவார். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி ஆவார். இந்தியாவில் கேரளாவில் பிறந்து சென்னையிலும் பின்னர் கலிபோர்னியாவிலும் வளர்ந்தார். சமையல் கலையில் கைதேர்ந்தவரான இவர் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் தோன்றி சமையல் குறிப்புகளைத் தந்தவர். தற்போது பெண்கள் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்துக்கான தூதுவராகப் பணியாற்றுகிறார்....

நடிகை சுலக்சனா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுலக்சனா என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் செப்டம்பர் 1, 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ம. சு. விசுவநாதன் மகனான கோபிகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்....

நடன இயக்குனர் சிவசங்கர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கே சிவசங்கர் இந்திய திரைப்பட நடன இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பணிபுரிந்து வருகிறார். இவர் இதுவரை 800 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். பிரபல திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர். திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடல் மூலம் புகழ்பெற்றார். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். இவரது மூத்த மகன் விஜய் கிருஷ்ணாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர் நடித்த படங்கள் : கண்ணா லட்டு தின்ன ஆசையா...

கின்னஸ் பக்ரு பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மலையாள நடிகரான பக்ரு (எ) அஜய் குமார் முழுநீளப் படத்தில் நடித்த மிகக் குள்ளமான நடிகர் என்ற சாதனைக்காக ஏற்கனவே கின்னஸில் இடம் பிடித்தவர். தற்போது 'குட்டியும் கோலும்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் உலகிலேயே மிகவும் குள்ளமான இயக்குனர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகிறார். தமிழை விட, மலையாளத்தில் மிகவும் பிஸியான காமெடி நடிகரான இவர் தற்போது குட்டியும், கோலும் என்ற முழுநீள திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிகவும் உயரம் குறைவான நடிகரான பக்ரு, ஜீவா நடித்த டிஷ்யூம், விஜய் நடித்த காவலன், சூர்யா நடித்த ஏழாம் அறிவு போன்ற படங்களில் நடித்தவர். மலையாளப் படமான ‘குட்டியும் கோலும்' உலகிலேயே மிகவும் உயரம் குறைவாக உள்ள இயக்குனர் பக்ருவால் இயக்கப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்கியதற்காக பக்ரூவுக்கு கின்னஸ் விருது வழங்கப்பட உள்ளது. நவம்பர் 8, 2012ல் இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மிமிக்ரி கலைஞனாக தன் வா...

நடிகர் ஜெயசூர்யா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜெயசூர்யா, தென்னிந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2001ஆம் ஆண்டில் தோஸ்த் என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர், 2002ஆம் ஆண்டில் வினயன் இயக்கிய ஊமப்பெண்ணினு உரியாடாப்பய்யன் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர், தமிழில் எடுக்கப்பட்ட என் மன வானில் என்ற திரைப்படத்தின் மலையாளப் பதிப்பிலும் நடித்தார். சுவப்னக்கூடு, சதிக்காத சந்து, கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். இதுவரை ஐந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்....

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும். இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார். 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.[4] ஷில்பாவை விவாகரத்து செய்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்....

இயக்குனர் கே நட்ராஜ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கே.நடராஜ் – இயக்குநர் மற்றும் நடிகர். அன்புள்ள ரஜனிகாந்த், வள்ளி, செல்லக்குட்டி, தலையாட்டி பொம்மை, இரண்டு மனம், செல்வி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இராணுவ வீரன், பொல்லாதவன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் ரஜனிகாந்தின் நெருங்கிய நண்பர்.திரைப்படக் கல்லூரியில் இருவரும் ஒன்றாக பயின்றவர்கள். ”அன்புள்ள ரஜனிகாந்த்” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நட்ராஜ். இவர் ஒரு நடிகராகத்தான் திரைத்துறைக்குள் நுழைந்தார். “மூன்று முடிச்சு” படத்தில் ரஜினிகாந்தின் மனசாட்சியாக ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்த இவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய நடிப்புக் கல்லூரியில் பயின்று டிப்ளமோ பெற்றவர். ”1973 – 74 ஆம் ஆண்டு நடிப்புக் கல்லூரியில் இவரும் ரஜினிகாந்தும் ஒன்றாகப் படித்தவர்கள். பயிற்சிக்குப் பிறகு ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடித்து புகழ்பெறத் துவங்கினார். இவர் பயின்ற அதே கல்லூர...

நடிகர் கொத்தமங்கலம் சீனு மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
கொத்தமங்கலம் சீனு தமிழ் நாடகத், திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார். வி. எஸ். சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சீனு, மதுரைக்கு அருகேயுள்ள வற்றாயிருப்பு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற சீனு பிழைப்பைத் தேடி செட்டிநாடு பகுதியில் உள்ள கொத்தமங்கலம் வந்தார். ஆரம்பத்தில் கிராமபோன் இசைத்தட்டுகளில் இவரது பாடல்கள் வெளிவந்தன. பின்னர் பாடகரும் நடிகருமான கொத்தமங்கலம் சுப்புவுடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். கருநாடக இசைக் கச்சேரிகளை நடத்தி வந்ததோடு, மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் கொடுத்து வந்தார். இவரது குரல் இனிமை இவரை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. இவர் நடித்த முதல் திரைப்படம் சாரங்கதாரா. இது 1935 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் தாசி அபரஞ்சி, பக்த சேதா, விப்ரநாராயணா போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகு...

நடிகர் ஆனந்த் பாபு பிறந்த தின பதிவு

Shooting Spot News & Gallerys
ஆனந்த் பாபு ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டு முதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனந்த் பாபு 1985 டிசம்பர் 8 அன்று சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இளைய மகனான கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளானதால் 2006 ஆவது ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் நடித்த படங்கள்: ஆதவன், கொண்டாட்டம், சூரியன் சந்திரன், புத்தம் புதிய பயணம், சேரன் பாண்டியன், புரியாத புதிர், பந்தம்...