
நடிகை பேபி அஞ்சு பிறந்த தின பதிவு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கும் அனைவராலும் கதாநாயகியாக நீடிக்க முடிவதில்லை. அந்த வகையில் உதிரிப்பூக்கள், மீண்டும் கோகிலா, கேளடி கண்மணி போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர் நடிகை பேபி அஞ்சு.
பின் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்த இவர், ஹார்மோன் பிரச்சனை காரணமாக உடல் எடை அதிகரித்து விட்டதால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் அவ்வப்போது சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த படங்கள்
உதிரிபூக்கள், பூட்டாத பூட்டுகள், சின்ன முள் பெரிய முள், மீண்டும் கோகிலா, கர்ஜனை, ஹிட்லர் உமாநாத், டார்லிங் டார்லிங் டார்லிங், பொய் சாட்சி, வடிவங்கள், அழகிய கண்ணே, பூம் பூம் மாடு, வில்லியனூர் மாதா, என் செல்வமே, எங்கள் சாமி அயப்பன், அரங்கேற்ற வலை, அதிகாரி, அக்னி பறவை, அமிராமி, அகத்தியன், பிரதிப் புருஷ லட்சணம், ...