“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை
“‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… மாற்றத்தை உருவாக்கும் படைப்பு!” – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை
சென்னை:
‘டோரதி’ திரைப்பட விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“‘டோரதி’ படத்தின் கதையின் சுருக்கத்தை முதலில் கார்த்திக் சார் என்னிடம் பகிர்ந்தபோது, இப்படியொரு படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டார். கதையைப் படித்தவுடனேயே, ‘கண்டிப்பாக இந்தப் படத்தைச் செய்கிறேன்’ என்று கூறிவிட்டேன். ஏனெனில் இப்படிப்பட்ட படங்களில் ஒரு பகுதியாக இருப்பதே நமக்குப் பெருமை.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஒரு நடிகராக நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். ‘டோரதி’ என்ற பெயருக்கே ‘கடவுளின் பரிசு’ என்ற அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தத்திற்கு ஏற்ற வகையில் இந்தப் படமும் அமையும் என்று நம்புகிறேன்.
...
