Tuesday, April 21
Shadow

Tag: #seemaraja #sivakarthikeyan #ponram #samantha #yogibabu #soori #keerthysuresh

வரும் 13ம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட படைப்பு “சீமராஜா”

வரும் 13ம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட படைப்பு “சீமராஜா”

Shooting Spot News & Gallerys
வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே. அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் 'சீமராஜா'. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ...
சிவகார்த்திகேயனின்  சீமராஜா’ படத்திற்கு யு சான்றிதழ்!

சிவகார்த்திகேயனின் சீமராஜா’ படத்திற்கு யு சான்றிதழ்!

Latest News, Top Highlights
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சீமராஜா. இந்த படத்தில் சமந்தா யோகிபாபு சூரி மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோ ரோல் பண்ணும கீர்த்தி சுரேஷ் இந்த படத்துக்கு இசை இமான் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்.13ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில் இந்த படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் தற்போது இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.அதோடு இந்த படத்தின் நீளம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடம் என்றும் சான்றிதழில் குறிப்பிடுள்ளனர்....
போலந்து நாட்டில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் “சீமாராஜா”

போலந்து நாட்டில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் “சீமாராஜா”

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ படம், போலந்து நாட்டில் ரிலீஸாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது சீமராஜா திரைப்படம் காரணம் சிவகார்த்திகேயன் மற்றும் போன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது அதோடு சிவகார்த்திகேயனை மிக பெரிய அந்தஸ்தை கொடுத்தது இந்த இரண்டு படங்கள் என்பதால் மிகபெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் அதற்கு ஏற்ப இந்த படம் வெளியாவதுக்கு முன்னே பல சாதைனைகள் செய்து வருகிறது பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘சீமராஜா’. கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ச...
ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் மிக பிரமாண்டமான முறையில் நடக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீடு!

ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் மிக பிரமாண்டமான முறையில் நடக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீடு!

Latest News, Top Highlights
ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பது தான். 24ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் தனது திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். அந்த வகையில் சமீபத்திய முயற்சியாக தங்களது பெருமைமிகு படைப்பான 'சீமராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் ஆர் டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழாவை மிகப்பெரிய வெற்றியாக மாற்ற மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான...
சூப்பர் சிங்கர் செந்திலுக்கு அடித்த ஜாக்பாட் பிரபல ஹீரோவுடன் பாடுகிறார்

சூப்பர் சிங்கர் செந்திலுக்கு அடித்த ஜாக்பாட் பிரபல ஹீரோவுடன் பாடுகிறார்

Latest News, Top Highlights
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது சூப்பர் சிங்கர் சீசன் 6. இப்போட்டியில் மக்கள் இசைக்கலைஞரான செந்தில் கணேஷ் முதலிடம் பிடித்தது ஒட்டுமொத்த மக்களிசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கொண்டாடுகின்றனர். சூப்பர் சிங்கர் சீசன் 6 இறுதிப்போட்டியில் பாடகர்கள் இரண்டு சுற்றுகளில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். எப்போதுமே மேடையில் கலக்கி அனைவரின் பாராட்டுகளையும் பெறும் செந்தில் கணேஷ், வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளையும் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார். எல்லா சூப்பர் சிங்கர் சீசனிலும், வெற்றிபெறும் போட்டியாளர் ஒரு பிரபல இசையமைப்பாளரின் இசையில் பாடுவதற்கான வாய்ப்பை விஜய் டிவி ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் சீசன் 6ல் வெற்றிபெறுபவர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடுவார் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றிபெற்ற செந்தில்கணேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன்...
சிவகார்த்திகேயனின் சீமராஜா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் சீமராஜா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

Shooting Spot News & Gallerys
பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகவும் ராசியான ம...
மூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்

மூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் பயங்கர பிஸி நடிகர் அதோடு வெற்றி நடிகன் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லலாம் படத்துக்கு படம் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகபடுத்தும் சிவகார்த்திகேயன் திழ் சினிமாவின் ராசி நடிகர் என்று பெயர் அனால் இவருக்கு ஒரு ராசியான ஒருவர் உண்டு அவருடன் இவர் நடித்தால் படங்கள் மிக பெரிய வெற்றியை தரும். தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பால் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித் விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் தற்போது கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை கீர்த்தி சுரேஷும் ட்வீட் செய்து உறுதி செய்துள்ளார். ஏற்கனவே சிவாவும் ...