Friday, November 13
Shadow

Tag: tamil cinema

‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி! பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்று, 13-க்கும் மேற்பட்ட விருது விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக தயாராகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படக்குழுவினர், ‘என்ன விலை’ ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், இதுவரை இந்திய சினிமாவில் பெர...
சண்முக பாண்டியனின் அடுத்த அதிரடி பயணம் தொடக்கம்!

சண்முக பாண்டியனின் அடுத்த அதிரடி பயணம் தொடக்கம்!

Latest News, Top Highlights
சண்முக பாண்டியனின் அடுத்த அதிரடி பயணம் தொடக்கம்! கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 10 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது – மாலை 6 மணிக்கு டைட்டில் லுக்கை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தயாரிப்பு நிறுவனத்தின் 10-வது படைப்பாக உருவாகும் இப்படம் தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 10’ என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கிய மணிசியோன் இப்படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படம், சண்முக பாண்டியனின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக பிரசன்ன குமா...
ஒரே இரவு… ஓயாத பதற்றம்… சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘திக். திக்.. திக்…’

ஒரே இரவு… ஓயாத பதற்றம்… சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘திக். திக்.. திக்…’

Latest News, Top Highlights
ஒரே இரவு… ஓயாத பதற்றம்… சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘திக். திக்.. திக்…’ ஒரே இரவில் நடக்கும் ஒரு கதை. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற பதற்றம். அதற்குள் குடும்ப உணர்வுகளையும், சமூக அக்கறை கொண்ட ஒரு முக்கியமான கருத்தையும் இணைத்து உருவாகிறது புதிய தமிழ் திரைப்படமான ‘திக். திக்.. திக்…’. ‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’ உள்ளிட்ட பாராட்டைப் பெற்ற படங்களை தயாரித்த JSK Film Corporation நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. JSK சதீஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக அறிமுகமாகிறார். ரகு ராஜகோபாலுடன் இணைந்து அவர் படத்தின் கதையையும் எழுதியுள்ளார். சென்னையை கதைக்களமாகக் கொண்டிருக்கும் ‘திக். திக்.. திக்…’, ஒரு இரவுக்குள் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட த்ரில்லர் படமாக உருவாகிறது. வெறும் பரபரப்பை மட்டும் நம்பாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் ...
விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

Latest News, Top Highlights
விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!   தமிழ் திரையுலகில் புதிய முகங்கள் மற்றும் புதிய கதைக்களங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், விற்பனை பிரதிநிதிகளின் அன்றாட வாழ்க்கை, நட்பு, காதல் மற்றும் அவர்கள் சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை கலகலப்பான பொழுதுபோக்கு படமாக சொல்லவிருக்கும் திரைப்படம் ‘கோல்ட் கால்’. புதுமுக நடிகர்களான சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ் எஸ்.ஏ. மற்றும் கிருஷ்ணா விஜய் சந்திரன் ஆகியோர் கதையின் முக்கிய நாயகர்களாக நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் தம்பிதுரை இயக்கியுள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படத்தில் வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா...
‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

Latest News, Top Highlights
‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்! ஒரு கொலை நடந்த வீடு… அதை விசாரிக்க உள்ளே செல்லும் இரண்டு காவல் அதிகாரிகள்… அங்கே அவர்களை எதிர்கொள்ளும் எதிர்பாராத அமானுஷ்ய சம்பவங்கள். இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து விலகி, மர்மம் மற்றும் திகிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்க தயாராகி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவின் சாவித் துவாரத்தின் வழியாக அச்சத்துடன் பார்க்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் இடம்பெற்றுள்ளது. அதைவிட, கதவில் இடம்பெற்றிருக்கும...
திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

Latest News, Top Highlights
திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா! சென்னையில் நடைபெற்ற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் வருகையால் களைகட்டியது. திரையுலகில் திரைப்பட விநியோகஸ்தராகவும், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனராகவும் செயல்பட்டு வரும் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் நேரில் கலந்துகொண்டனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் ...
அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘வேட்ட சாமி’ – ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வெளியீடு

அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘வேட்ட சாமி’ – ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வெளியீடு

Latest News, Top Highlights
அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘வேட்ட சாமி’ – ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வெளியீடு நெல்லை மண்ணின் காவல் தெய்வ வழிபாடு, கிராமிய வாழ்வியல், தலைமுறை கடந்து தொடரும் சமூகப் பிரச்சினைகள் என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 7 Miles Per Second Productions நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘பம்பர்’ படத்தை இயக்கிய எம். செல்வகுமார் எழுதி இயக்குகிறார். அருள்நிதி மற்றும் அமீர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர். காவல் தெய்வங்களை மையமாகக் கொண்ட கதை நெல்லை மாவட்ட மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ள சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட காவல் தெய்வங்களின் வழிபாட்ட...
25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது

25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது

Latest News, Top Highlights
25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திரம் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்கள் என தனது நடிப்பின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் கருணாஸ். திரையுலகில் அவர் கால்பதித்து 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு நடிகரின் 25 ஆண்டுகால பயணத்தில் பல படங்கள் இடம்பெறலாம். ஆனால், தனது நீண்டகால திரைப்பயணத்தில் இப்படியொரு கதையை எதிர்பார்த்திருந்ததாக கருணாஸ் கூறுவது ‘என்ன விலை’ படத்தின் மீதான அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படம், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் மையமாகக் கொ...
கடலின் பிரமாண்டத்தை IMAX திரையில் காட்ட வருகிறது ‘மண்டாடி’ – செப்டம்பர் 10 முதல் சூரியின் புதிய அவதாரம்!

கடலின் பிரமாண்டத்தை IMAX திரையில் காட்ட வருகிறது ‘மண்டாடி’ – செப்டம்பர் 10 முதல் சூரியின் புதிய அவதாரம்!

Latest News, Top Highlights
கடலின் பிரமாண்டத்தை IMAX திரையில் காட்ட வருகிறது ‘மண்டாடி’ – செப்டம்பர் 10 முதல் சூரியின் புதிய அவதாரம்! கடலை மையமாக வைத்து உருவாகியுள்ள படங்கள் திரையில் எப்போதுமே ஒரு தனி அனுபவத்தை கொடுக்கும். அதிலும் ஆழ்கடலில் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டியின் பரபரப்பு என பிரமாண்டமான காட்சிகளுடன் உருவாகியிருக்கும் ‘மண்டாடி’ படத்தை பெரிய திரையில் பார்க்க ரசிகர்களுக்கு இன்னொரு காரணமும் கிடைத்திருக்கிறது. இப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 முதல் இந்தியா முழுவதும் IMAX® திரைகளிலும் வெளியாகிறது. நடிகர் சூரி நடிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மண்டாடி’, வழக்கமான விளையாட்டு கதையாக இல்லாமல் தமிழ்நாட்டின் கடலோர மக்களின் வாழ்க்கை, அவர்களின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் பாய்மரப் படகு போட்டியை கதையின் முக்கிய பின்னணியாகக் கொண்டுள்ளது. கடலுக்க...
‘அரசன்’ படப்பிடிப்பில் வேகம் கூட்டும் வெற்றிமாறன் – சிலம்பரசன் – அனிருத் கூட்டணி!

‘அரசன்’ படப்பிடிப்பில் வேகம் கூட்டும் வெற்றிமாறன் – சிலம்பரசன் – அனிருத் கூட்டணி!

Latest News, Top Highlights
‘அரசன்’ படப்பிடிப்பில் வேகம் கூட்டும் வெற்றிமாறன் – சிலம்பரசன் – அனிருத் கூட்டணி! சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சிலம்பரசன் TR நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு. தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தற்போது முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பில் எந்தவிதத் தாமதமும் ஏற்படாத வகையில், திட்டமிட்டபடி பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மூன்று முன்னணி கலைஞர்களும் ஒரே இடத்தில் இணைந்திருக்கும் இந்த தருணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தை ம...