Friday, November 13
Shadow

Tag: tamil cinema

பிறந்தநாளில் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘ஒரண்ட’ – இரட்டை கொண்டாட்டத்தில் இயக்குநர் சுசி கணேசன்

பிறந்தநாளில் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘ஒரண்ட’ – இரட்டை கொண்டாட்டத்தில் இயக்குநர் சுசி கணேசன்

Latest News, Top Highlights
பிறந்தநாளில் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘ஒரண்ட’ – இரட்டை கொண்டாட்டத்தில் இயக்குநர் சுசி கணேசன் படக்குழுவினருடன் இணைந்து பிரியாணி சமைத்து பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் இயக்குநர் சுசி கணேசன் தனது அடுத்த படைப்பாக உருவாக்கி வரும் திரைப்படத்திற்கு ‘ஒரண்ட’ எனப் பெயரிட்டிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். தலைப்பு அறிவிக்கப்பட்டது முதலே படத்தின் கதை என்ன, யார் நடிக்கிறார்கள், எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று ‘ஒரண்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்துள்ளதாக சுசி கணேசன் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவு பெற்றதோடு, தனது பிறந்தநாளையும் படக்குழுவினருடன் இணைந்து வித்தியாசமான முறையில் கொண்டாடியிருக்கிறார் சுசி கணேசன். படப்பிடிப்பு தளத்தில் படக்குழு...
படப்பிடிப்பு நிறுத்தம் வேண்டாம்… தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் – FEFSI வலியுறுத்தல்

படப்பிடிப்பு நிறுத்தம் வேண்டாம்… தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் – FEFSI வலியுறுத்தல்

Latest News, Top Highlights
படப்பிடிப்பு நிறுத்தம் வேண்டாம்… தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் – FEFSI வலியுறுத்தல் தமிழ்த் திரையுலகில் தற்போது முக்கியமான விவாதமாக மாறியிருக்கும் படப்பிடிப்பு தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும், இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக FEFSI தெரிவித்துள்ளது. சமீபத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரைப்படப் படப்பிடிப்புகள் தொடர்பான அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த முடிவு திரையுலகில் நேரடியாகப் பணியாற்றும் தொழிலாளர்களை மட்டுமல்லாமல், அவர்களைச் சார்ந்து வாழும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் பாதிக்கும் சூழல் உருவாகும் என்...
ஜி.வி.பிரகாஷ் –ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு

ஜி.வி.பிரகாஷ் –ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு

Latest News, Top Highlights
ஜி.வி.பிரகாஷ் – ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்ஜா’வின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் முருகு இயக்கும் இப்படம் முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. ‘நிஞ்ஜா’ படத்தின் சிறப்பம்சமாக, இசையமைப்பாளர்களாக ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் இத்தகைய கூட்டணியில் இணைந்துள்ளனர். இப்படத்தில் முதலில் இசையமைப்பாளராக இணைந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளார். இப்படத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பி...
‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ – லாபம் அல்ல, சமூக மாற்றமே இலக்கு!

‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ – லாபம் அல்ல, சமூக மாற்றமே இலக்கு!

Latest News, Top Highlights
‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ – லாபம் அல்ல, சமூக மாற்றமே இலக்கு! இலவசமாக திரைப்படங்களை பார்க்கலாம்; விருப்பப்பட்டால் ‘இம்பாக்ட் டிக்கெட்’ மூலம் பங்களிக்கலாம் – புதிய OTT தளத்தை அறிமுகப்படுத்திய யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் சென்னை: சினிமாவை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல், அதன் மூலம் சமூகத்திற்கும் பங்களிக்க முடியும் என்ற புதிய சிந்தனையுடன் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்ற லாப நோக்கற்ற OTT தளத்தை யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. திரைப்படங்களை பார்ப்பதற்கு வழக்கமான subscription கட்டணம் எதுவும் இல்லாமல், இலவசமாக திரைப்படங்களை காணும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்களுக்கு விருப்பமிருந்தால் பார்வையாளர்கள் ‘Impact Ticket’ என்ற வாய்ப்பின் மூலம் தங்களால் முடிந்த தொகையை பங்களிப்பாக வழங்கலாம். இந்த பங்களிப்பின் பெரும்பகுதி சமூக சேவைகளுக்காக பயன்ப...
செப்டம்பர் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை!

செப்டம்பர் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை!

Latest News, Top Highlights
செப்டம்பர் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை! படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் முடிவு சென்னை, ஆகஸ்ட் 22: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், செப்டம்பர் 1, 2026 முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்துவது என தயாரிப்பாளர்கள் சங்கங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன. சென்னை அண்ணாசாலையில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
90ஸ் கிட்ஸ் கல்யாணக் கஷ்டம் முதல் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ வரை – பிரபு ஏகாம்பரம் சொல்லும் நகைச்சுவைக் கதை!

90ஸ் கிட்ஸ் கல்யாணக் கஷ்டம் முதல் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ வரை – பிரபு ஏகாம்பரம் சொல்லும் நகைச்சுவைக் கதை!

Latest News, Top Highlights
90ஸ் கிட்ஸ் கல்யாணக் கஷ்டம் முதல் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ வரை – பிரபு ஏகாம்பரம் சொல்லும் நகைச்சுவைக் கதை! சென்னை: ஒரு காலத்தில் குடும்பத்தின் விருப்பம், உறவினர்களின் எதிர்பார்ப்பு என திருமணம் தொடர்பான முடிவுகள் எளிதாக நடந்துவிடும். ஆனால், இன்றைய 90ஸ் கிட்ஸ் தலைமுறைக்கு திருமணத்துக்குப் பெண் தேடுவது என்பது தனி போராட்டமாகவே மாறிவிட்டது. வேலை, சம்பளம், எதிர்பார்ப்புகள், குடும்ப சூழல் என ஒவ்வொன்றாகப் பார்த்து வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் இந்த தலைமுறையின் சிக்கல்களை மையமாக வைத்து உருவாகி வருகிறது ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM) திரைப்படம். ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பிரபு ஏகாம்பரம் எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர், சினிமா மீதான ஆர்வத்தால் தனது முதல் படைப்பை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் ஹர...
“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

Latest News, Top Highlights
“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையுடன் பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் அப்துல் லீ. யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்களில் தொடங்கிய இவரது நடிப்பு பயணம், தற்போது வெள்ளித்திரை மற்றும் இணையத்தொடர்கள் என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அப்துல் லீ, தன்னுடைய நடிப்புக்கு முக்கிய உந்துசக்தியாக இருப்பவர்கள் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் பாலையா என்கிறார். குறிப்பாக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தபோதும் அதற்குள் இருக்கும் எதிர்மறை தன்மையை வெளிப்படுத்தி, ரசிகர்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த அவர்களது பாணி தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறுகிறார். அப்துல் லீ என்ற பெயரில் இருக்கும் ‘லீ’ கூட அவருடைய திரைப்பயணத்தி...
பியார் பிரேமா கல்யாணம் – திரைவிமர்சனம் (Rank 2.5/5)

பியார் பிரேமா கல்யாணம் – திரைவிமர்சனம் (Rank 2.5/5)

Latest News, Review
பியார் பிரேமா கல்யாணம் எப்படி? – வீட்டோடு மாப்பிள்ளையாகும் நாயகன் சொல்லும் திருமணப் பாடம்! திருமணத்துக்குப் பிறகு பெண் சந்திக்கும் வாழ்க்கை மாற்றங்களை ஒரு ஆண் எதிர்கொண்டால் என்ன ஆகும்? – சுவாரஸ்யமான கேள்விக்கு சினிமா மொழியில் விடை தேடும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ காதலைப் பற்றிப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. திருமணத்தைப் பற்றியும் ஏராளமான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்பச் சூழ்நிலைகளை, அதேபோல் ஒரு ஆண் எதிர்கொண்டால் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வியை மையமாக வைத்திருப்பதுதான் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் வித்தியாசமான முயற்சி. ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ படங்களை இயக்கிய இளன், இந்தப் படத்தை இயக்கியதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், செந்தில், எம்...
ஒன் மேன் – திரைவிமர்சனம்

ஒன் மேன் – திரைவிமர்சனம்

Latest News, Review
ஒன் மேன் – ஒரே மனிதனுக்குள் இத்தனை சினிமாவா? ஒரு திரைப்படத்தை உருவாக்க ஒரு பெரிய குழுவே தேவைப்படும் நிலையில், அந்தப் பொறுப்புகளில் பெரும்பாலானவற்றை ஒரே மனிதர் ஏற்றுக்கொண்டு ஒரு முழுநீளப் படமாக உருவாக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அந்த அசாத்திய முயற்சிதான் ‘ஒன் மேன்’. வழக்கமான கதைக்களம், வழக்கமான திரைமொழி என்ற பாதையில் பயணிக்காமல், “ஒரு மனிதனால் எவ்வளவு செய்ய முடியும்?” என்ற கேள்விக்கு திரையில் பதில் சொல்ல முயற்சிக்கும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘ஒன் மேன்’. கதை என்ன? தனித்திறமை கொண்ட ஐந்து பேருக்கு ஒரு விருது அறிவிக்கப்படுகிறது. அந்த விருதைப் பெறுவதற்காக அவர்கள் பயணிக்கும்போது, எதிர்பாராதவிதமாக அவர்களின் கார் பழுதாகிறது. உதவிக்காக காட்டுக்குள் செல்லும் அவர்கள் அங்கு மர்மமான ஒரு சோதனைக் கூடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அங்கே கிடைக்கும் செல்போன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும்...
மொதராத்திரி – திரை விமர்சனம்Rank  (3.5 / 5)

மொதராத்திரி – திரை விமர்சனம்Rank (3.5 / 5)

Latest News, Review
மொதராத்திரி – திரை விமர்சனம்: ஒரே இரவில் நடக்கும் கலகலப்பான காதல், குடும்பக் கதை! நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் மண் மணம் மாறாத கிராமத்து வாழ்வியலையும், காதல், திருமணம், குடும்ப உறவுகள், சாதி போன்ற சமூகப் பிரச்சனைகளையும் நகைச்சுவையோடும் உணர்வுகளோடும் கலந்து சொல்லும் ஒரு சுவாரஸ்யமான படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘மொதராத்திரி’. இயக்குநர் ராஜா கருப்புசாமி, ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, பார்வையாளர்களை அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திரைக்கதைக்குள் பயணிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, கிராமத்து மனிதர்களின் இயல்பான பேச்சு, அவர்களது மனநிலை, குடும்பத்துக்குள் இருக்கும் சின்னச் சின்ன மோதல்கள் என அனைத்தையும் செயற்கைத்தனம் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். கதைக்குள் ஒரு கல்யாணக் குழப்பம்! தென் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டி...