நடிகை குட்டி பத்மினி பிறந்த தின பதிவு
குட்டி பத்மினி ஒரு தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாவார். கோலிவுட் படவுலகில் பிரதானமாக பணி புரிந்து வருகிறார். 1959இல் "ஆம்பள அஞ்சுலம்" எனறப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கு , கன்னடம், மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது மூன்றாவது வயதில் தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரசினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட தமிழ் சினிமாவின் பல முக்கிய நபர்களுடன் நடித்துள்ளார். குழந்தையும் தெய்வமும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரக் கலைஞராவார். களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் முதல் முறையாக இவ்விருதினை பெற்றுள்ளார்.
குட்டி பத்மினி, பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர...







