Friday, October 9
Shadow

“போட்டிக்காக அல்ல… மக்களுக்கு உதவவே!” – நற்பணி இயக்க நிர்வாகிகளிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

“போட்டிக்காக அல்ல… மக்களுக்கு உதவவே!” – நற்பணி இயக்க நிர்வாகிகளிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு சென்னை போரூர் அருகே நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் என 2,000-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நற்பணி இயக்கத்தின் நோக்கம் குறித்து நிர்வாகிகளிடம் தெளிவுபடுத்தினார்.

“நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். யாருடனும் போட்டியிடவோ, யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை. இதை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், வாழ்க்கையில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதேபோல், நன்றாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்றும், முதலில் தங்களது குடும்பத்தின் தேவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் கூறினார்.

நற்பணியை ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் செய்வதைவிட, அதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாக கருத வேண்டும் என்று குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், “நாள்தோறும் நற்பணி செய்வோம்” என்ற அடிப்படையில் பல நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதை பாராட்டினார்.

“ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 பேருக்காவது உதவி செய்து, ஆண்டின் 365 நாட்களும் நற்பணியைத் தொடர்ந்து செய்து வருவதை நான் கவனித்து வருகிறேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்” என்று அவர் தெரிவித்தார்.

“தினமும் குறைந்தது 10 நிமிடமாவது புத்தகம் படியுங்கள்!”

நிர்வாகிகளிடம் பேசிய சிவகார்த்திகேயன், சமூக சேவையுடன் அறிவை வளர்த்துக்கொள்வதும் அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக, ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் புத்தகக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் இருந்து முதல் புத்தகத்தை சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

“இரண்டு படங்களும் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படங்களாக இருக்கும்”

தற்போது தான் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்தும் சிவகார்த்திகேயன் பேசினார்.

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ‘சேயோன்’ திரைப்படத்திலும், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருவதாக தெரிவித்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை கவரும் வகையில் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படங்களாக அமையும் என்றும் அவர் கூறினார்.

கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவருடனும் சிவகார்த்திகேயன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடிய சிவகார்த்திகேயன், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் நிகழ்ச்சி நிறைவடைந்தது. உற்சாகத்துடன் கலந்துகொண்ட நிர்வாகிகள் அனைவரும் மதிய உணவை அருந்திவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

 

“This Organisation Is Not About Competition or Opposition; It Is About Helping People”: Sivakarthikeyan

Chennai: The biennial meeting of the office-bearers of actor Sivakarthikeyan’s Welfare Association was held near Porur in Chennai this year, with more than 2,000 office-bearers from various states, districts, cities, unions and local areas taking part in the gathering.

Addressing the gathering, actor Sivakarthikeyan urged everyone to remain clear about the core purpose of the organisation.

He said that the primary objective of the association is to extend whatever help they can to people in need, and that it was neither formed to compete with anyone nor to oppose anyone.

Sivakarthikeyan also stressed the importance of maintaining good health. He urged everyone to give priority to their physical well-being and lead a healthy life. He further advised the members to work hard, earn well and, above all, take care of their families.

Highlighting the importance of continuous social service, he appreciated the members who have been following the initiative “Let Us Do Charity Every Day” and extending help to at least 10 people every day throughout the year.

“I have been observing your efforts to help at least 10 people every day, all 365 days of the year, instead of limiting welfare activities to just a day or two. It gives me immense happiness. My heartfelt appreciation to all of you for this,” Sivakarthikeyan said.

“Read a Book for at Least 10 Minutes Every Day”

Sivakarthikeyan also encouraged the members to develop the habit of reading. He advised everyone to spend at least 10 minutes every day reading a book.

A book exhibition was organised as part of the event, and Sivakarthikeyan received the first book from the exhibition.

Sivakarthikeyan Talks About His Upcoming Films

Speaking about his current projects, Sivakarthikeyan revealed that he is presently working on ‘Seyon’, directed by Sivakumar Murugesan, and another film directed by Ramkumar Balakrishnan.

He said that both films are being made as commercial entertainers aimed at a wide audience, promising an enjoyable cinematic experience for fans.

Following the interaction, Sivakarthikeyan spent time with the office-bearers and posed for individual photographs with them. Lunch was also arranged for all the participants.

The gathering concluded on a cheerful note, with the office-bearers enjoying the interaction, lunch and photo session before leaving the venue happily.