ஒரு பாடல் நடனத்துக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய காஜல் அகர்வால்
கதாநாயகிகள் சிலர், படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சம்பாதிக்கிறார்கள். ஓரிரு நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடன காட்சியை முடித்து கொடுக்கின்றனர்.
இதற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் மேலும் சில முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆடுவது இல்லை என்பதை கொள்கையாக வைத்து இருக்கிறார்கள்.
நயன்தாரா ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் ‘கோடம்பாக்கம் ஏரியா’ என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் ‘பல்லேலக்கா’ என்ற பாடலுக்கும் நடனம் ஆடினார்.
இதற்காக பெரிய தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டார். ஸ்ரேயா, அஞ்சலி, உள்ளிட்ட மேலும் பல கதாநாயகிகளும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர். இதுபோல் முன்னாள் கதாநாயகிகள் மீனா, சிம்ரன், ரோஜா போன்றோரும் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார்கள்.
தற்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் தமன்னா, காஜல் அகர்வால் போன்றோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுக...









