தங்கள் அணியின் நட்சத்திர வீரர்களை அறிமுகப்படுத்தியது ‘சென்னை ராக்கர்ஸ்’
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிரிக்கெட் விளையாட்டு மட்டும் தான் நம் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இறகுப் பந்தாட்டத்திற்காக வெள்ளி பதக்கம் வென்றதும், நாடெங்கும் அந்த விளையாட்டின் புகழ் பரவ தொடங்கிவிட்டது. தற்போது அந்த இறகுப் பந்தாட்டத்தின் முக்கியத்துவத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க தயாராக உள்ளது விரைவில் நடைபெற இருக்கும் 'செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் - 2016' (சீசன் 1). விளையாட்டு மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து தொடங்கப்பட்டிருப்பது தான் இந்த நட்சத்திரங்களுக்கான இறகுப் பந்தாட்டப் போட்டி... தமிழ்நாட்டின் சார்பில் களம் இறங்க இருக்கும் 'சென்னை ராக்கர்ஸ்', தங்கள் அணியின் விளையாட்டு வீரர்களை சென்னையில் உள்ள ஹயாத் ரீஜெண்சி நட்சத்திர ஹோட்டலில் அறிமுகப்படுத்த...









