Sunday, November 8
Shadow

Top Highlights

டைட்டானிக் கதையின் உல்டா புல்டா!

டைட்டானிக் கதையின் உல்டா புல்டா!

Latest News, Top Highlights
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சி வி குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்ற 'மாயவன்' படத்தைத் தொடர்ந்து '4ஜி' மற்றும் 'டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார் சி.வி.குமார். இதன் இரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 'டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளது படக்குழு. ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக க்ரிஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்....
தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. உருகிய ரஜினி!!

தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. உருகிய ரஜினி!!

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பேசியதாவது… என் அரசியல் அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எப்படி கையாள்வது என்றே எனக்கு தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் 2 மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன். நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டியளித்தேன். என் அரசியல் பணிக்கு ஊடகங்களின் உதவி தேவை. நம் எல்லோருக்கும் கடமை உள்ளது. மிகப்பெரிய புரட்சி எல்லாம் தமிழகத்தில் இருந்து தான் துவங்கியுள்ளது. விரைவில் உங்களை சந்தித்து கட்சி கொடி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்....
ஆக்ஸிஜன் கொடுக்க வரும் அசோக் செல்வன்

ஆக்ஸிஜன் கொடுக்க வரும் அசோக் செல்வன்

Latest News, Top Highlights
‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்திற்கு பிறகு நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் ப்ரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’. உருவாகியுள்ளது. இது தவிர கைவசம் நிர்மனின் ‘நெஞ்சமெல்லாம் காதல்’, ஆனந்த கிருஷ்ணன் படம் மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘மெட்ரோ’ புகழ் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் – ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்திற்கு ‘ஆக்ஸிஜன்’ (OXYGEN) என தலைப்பு வைத்திருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஜோகன் இசையமைத்து வரும் இதற்கு உதயகுமார் ஒ...
சண்டக்கோழி 2 படத்தின் புதிய அப்டேட்

சண்டக்கோழி 2 படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கிவரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. ஏனெனில், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். மேலும், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நெகட்டிவ் ஷேடில் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ மூலம் தயா...
ரஜினியின் காவலன் நான் – ராகவா லாரன்ஸ்

ரஜினியின் காவலன் நான் – ராகவா லாரன்ஸ்

Latest News, Top Highlights
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளின் போது நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றார். வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசியலில் மும்முரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ரஜினிமன்றம் என்ற பெயரில் இணையதள பக்கத்தை தொடங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர் மன்றம் அல்லாத நல்லது செய்ய நினைக்கும் அனைவரும் ஆதரவு அளிக்கும்படி தெரிவித்திருந்தார். மேலும் அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் ரஜினி பேசும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் ரசிகர் மன்றங்களை இணைக்கவும், ஆட்சேர்ப்பு பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியின் இந்த தொடர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சினிமா து...
தென் இந்திய சினிமாவின் பிரச்சனைகளை பிரதமர் கவனத்துக்கு கொண்டுபோகும் தென் இந்திய சினிமா வர்த்தக குழு

தென் இந்திய சினிமாவின் பிரச்சனைகளை பிரதமர் கவனத்துக்கு கொண்டுபோகும் தென் இந்திய சினிமா வர்த்தக குழு

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் முன்னிலைப்படுத்தி பாரத் நிதி என்ற அமைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து நடத்தும் 'இந்திய பொழுதுபோக்கு துறை: உலகளாவிய தலைமையாக உருவாக்கம்' என்ற தலைப்பில் ஒரு கான்ஃபெரன்ஸை வரும் ஜனவரி 6ஆம் தேதி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடத்த இருக்கிறது. அது குறித்து விழா அமைப்பாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கி பேசினர். இந்த மாதிரி ஒரு கான்ஃபெரன்ஸ் முதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் நடத்தப்பட இருக்கிறது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மொழி சினிமா துறைக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பைரஸி மிக முக்கியமான பிரச்சினை. அதேபோல இந்தி சினிமாவுக்கு இருப்பதை போல ஓவர்சீஸ் மார்க்கெட் தென்னிந்திய படங்களுக்கு இல்லை. தமிழ் படங்கள் 25 நாட...
ஜனவரி 6ம் தேதி விஜய் சேதுபதிக்கு முக்கியமான நாள்

ஜனவரி 6ம் தேதி விஜய் சேதுபதிக்கு முக்கியமான நாள்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் இயக்கி வரும் இப்படத்தில் ஹீரோயினாக நிகரிகா நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி பழங்குடி இனத் தலைவராகவும் பல வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவினர் வெளியிட்ட பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை ஜனவரி 6ம் தேதி மலேசியாவில் நடக்க இருக்கும் நட்சத்திர கலைவிழாவில் வெளியிட இருக்கிறார்கள். மேலும் அதே விழாவில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘ஜுங்கா’ படத்தின் டைட்டில் டீசரையும் வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். ஒரே நாளில் விஜய் சேதுபதி படங்களின் ஆடியோ மற்றும் டைட்டில் டீசர் வெளியாவது ரசிகர்களுக்கு இரட்டை ...
முக்கிய பிரபலம் அஜித்யின் விஸ்வாசம்  படத்தில் இருந்து திடீர் விலகல் அதிர்ச்சியில் பட குழு

முக்கிய பிரபலம் அஜித்யின் விஸ்வாசம் படத்தில் இருந்து திடீர் விலகல் அதிர்ச்சியில் பட குழு

Latest News, Top Highlights
தல அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு விசுவாசம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கி, தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என படத்தின் பூஜை புகைப்படத்தை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிவித்தது. தற்போது யுவன் விசுவாசம் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைந்ததால் சந்தோஷத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிச்சியளித்துள்ளது....
மெர்சல் செய்யும் உலக சாதனை மிரளும் இந்திய சினிமா

மெர்சல் செய்யும் உலக சாதனை மிரளும் இந்திய சினிமா

Latest News, Top Highlights
தளபதி என்றாலே சாதனை மன்னன் என்று ஆகிவிட்டது அதுவும் மெர்சல் என்று எப்போது டைட்டில் வைத்தார்களோ அப்போது முதல் ஒரே மெர்சல் சாதனைகள் குவிய ஆரம்பித்து விட்டது அது தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் என்பது தான் மேலும் சிறப்பு அந்த வகையில் கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அனைவரும் அறிவர். ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தி திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ள இப்படம் பல வகையில், பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. படம் ரிலிஸுக்கு முன்பே பெரிய எதிர்ப்பார்க்கப்பட்ட படம் வெளியான பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் முறியடித்து மிகப்பெரிய வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இந்திய அளவில் பேசப்பட்ட ‘மெர்சல்’ தற்போது விஜயை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. அதாவது, பிரான்ஸில் அதிகம் பார்த்த இந்திய திரைப்படங்க...
சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படம் தணிக்கைக்குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை முடிந்த பிறகு இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...