
72வது தேசிய விருது வென்ற அனல் அரசு… நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்!
சென்னை:
மகாராஜா திரைப்படத்திற்காக 72வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த சண்டைக் காட்சி அமைப்பாளர் (Best Action) விருதை வென்றுள்ள முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு, இந்த உயரிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு மனம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது அறிவிப்புக்குப் பிறகு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில், இந்த விருது தனக்கு மட்டுமல்ல, தனது பயணத்தில் துணைநின்ற ஒவ்வொருவருக்குமான அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உயரிய விருதுக்கு தன்னைத் தேர்வு செய்த தேசிய திரைப்பட விருது நடுவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்ததுடன், மகாராஜா திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரின் அர்ப்பணிப்பே இந்த வெற்றிக்குக் காரணம் என அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், தனது படைப்புகளை தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்கள், திரையரங்கு பார்வையாளர்கள் மற்றும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும் அவர் உணர்வுபூர்வமாக கூறியுள்ளார். அவரது இந்த நெகிழ்ச்சியான நன்றியுரை சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் வெளியான ஜன நாயகன் திரைப்படத்தில் அனல் அரசு வடிவமைத்த அதிரடி சண்டைக் காட்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கதையின் உணர்வை பாதிக்காமல், விறுவிறுப்பையும் புதுமையையும் இணைக்கும் அவரது சண்டைக் காட்சி அமைப்புகள் ரசிகர்களிடமும், திரையுலக வட்டாரங்களிலும் பாராட்டைப் பெற்று வருகின்றன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் அனல் அரசு, இந்திய திரையுலகின் முன்னணி ஆக்ஷன் இயக்குநர்களில் ஒருவராக தனது முத்திரையைப் பதித்து வருகிறார். தேசிய விருது என்ற உயரிய அங்கீகாரம், அவரது நீண்டகால அர்ப்பணிப்புக்கும், சண்டைக் கலை மீதான தனித்துவமான அணுகுமுறைக்கும் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக திரையுலகினர் கருதுகின்றனர்.

National Award Winner Anl Arasu Expresses Gratitude; Dedicates Prestigious Honour to His Team and Fans
Chennai:
Celebrated stunt director Anl Arasu, who won the 72nd National Film Award for Best Action for his outstanding work in Maharaja, has shared an emotional message expressing heartfelt gratitude following the prestigious recognition.
In a special video released after the announcement, Anl Arasu described the National Award as a milestone that belongs not only to him but to everyone who has been part of his cinematic journey. He thanked the National Film Awards jury for recognising his work and acknowledged the collective effort of the Maharaja team, stating that the honour reflects the dedication and commitment of every individual involved in the film.
The acclaimed action choreographer also extended his sincere thanks to fans, audiences, and well-wishers whose unwavering encouragement has inspired him throughout his career. Dedicating the award to everyone who believed in his vision and supported his work, Anl Arasu’s emotional message has received an overwhelming response across social media platforms.
Meanwhile, the stunt sequences choreographed by Anl Arasu in the recently released Jana Nayagan have also been earning widespread appreciation. His signature blend of high-intensity action, innovative choreography, and cinematic storytelling continues to impress both audiences and members of the film fraternity.
Widely regarded as one of India’s leading stunt directors, Anl Arasu remains one of the most sought-after names in action choreography. He is currently working on an impressive lineup of projects across the Tamil, Telugu, Malayalam, Kannada, and Hindi film industries, further strengthening his reputation as one of the country’s finest action choreographers.
The National Award is seen as a fitting recognition of Anl Arasu’s years of dedication, creativity, and invaluable contribution to Indian cinema’s action filmmaking.
