Friday, April 17
Shadow

Tag: நடிகர்

ராக்கிங் ஸ்டார் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதுமட்டுமின்றி இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி கன்னட சினிமா வரலாற்றிலேயே ரூ 200 கோடிக்கும் மேல் வசூலித்து அதிக காலெக்க்ஷனை செய்த படம் என்ற சாதனையை செய்தது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கேஜிஎப் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியானது. அதாவது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான சஞ்சய் தத் நடிக்க உள்ளார்...

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

Latest News, Top Highlights
நடிகர் பார்த்திபன் இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் பார்த்திபன், “படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும்,திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில் பெருங்களிப்பில்' பொன்னியின் செல்வன்'. அப்படத்திற்காக Spelling (ஸ்பெல்லிங்) மட்டுமே கற்றிருந்த நான் Swimming (ஸ்விம்மிங்) கற்கிறேன்!” என்று கூறியுள்ளார்....

நடிகர் துல்கர் சல்மான் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
துல்கர் சல்மான் ஒரு இந்திய நாட்டு நடிகர். இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் 2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் (Second Show) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். துல்கர் தென்னிந்தியா, கேரளா, இந்தியாவில் பிறந்தார். இவர் மலையாளம், தமிழ் திரைப்பட நடிகர் மம்மூட்டி - சுல்பாத் தம்பதியரின் மகன் ஆவார். இவருக்கு குட்டி சுருமி என்ற இளைய சகோதரி உள்ளார்....

நடிகர் தனுஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பே...

நடிகர் கல்யாண் குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கல்யாண் குமார் கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். 1950- 1999 காலகட்டத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழில் முதன்முதலாக நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த கடைசி தமிழ்த் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான ஜெய் ஹிந்த் ஆகும். இவர் நடித்த படங்கள்:  தாயின் கருணை, தென்றல் வீசும், கடவுளின் குழந்தை, நெஞ்சில் ஓர் ஆலயம், மணி ஓசை...

தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

Latest News, Top Highlights
தளபதி 64 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கிஸ் வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 64-வது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி 63 படத்தின் பணிகளை முடித்துக் கொண்ட பிறகு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் தளபதி 64 படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூர்யனும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜும் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தின் டைட்டில் தொடர்பான அறிவிப்பு ...

ஹீரோவாக நடிக்கும் பிரபல காமடி நடிகர்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி.  வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயனுடனும், , என தமிழ் சினிமாவின் மிக பெரிய விஜய், சூர்யா படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் சூரி. துவக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.  கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு அவரது இடத்திற்கு வந்துவிட்டார் பரோட்டா சூரி. பிரலமான நகைச்சுவை நடிகர்கள் ஹீரோ வாக மாறுவது தொடர்ந்து சினிமாவில் நடைபெற்று வருகிறது.விவேக்,வடிவேலு,வரிசையில் தற்போது சூரி நடிகராக புதிய அவதாரம் ஒன்றை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெகுநாட்களாக இந்த செய்தி உலவி வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் முடிவடைந்ததையடுத்து, தற்போது சூரியை ஹீரோவாக வை...

நடிகர் சு. ஜெயலக்சுமி பிறந்த தின பதிவு

Birthday, Latest News
சுந்தரம் ஜெயலக்சுமி தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1930, 1940 ஆம் ஆண்டுக்காலங்களில் திரைப்படங்களின் கதாநாயகியாக நடித்துள்ளார். கர்நாடக சங்கீதவான்களான, சு. ராஜம் மற்றும் சு. பாலச்சந்தர் இவருடைய சகோதரர்கள் ஆவர். இவர் சிவகவி, சீதா கல்யாணம் முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மனோஜ் குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மனோஜ் குமார், இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். வோ கோன் தி, உப்கர், நீல் கமல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பெற்ற விருதுகள்: சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, பத்மஸ்ரீ விருது, பால்கே ரத்னா விருது, வாழ் நாள் சாதனையாளர் விருது...

நடிகர் பகவதி பெருமாள் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பகவதி பெருமாள் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 2012 ஆவது ஆண்டில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் ஏற்ற பகவதி எனும் கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்து அறியப்படுகிறார். ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் (2014), நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் (2015), பிச்சைக்காரன் (2016) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்:  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், ஜிகர்தண்டா, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இன்று நேற்று நாளை, ஜில் ஜங் ஜக், பிச்சைக்காரன், இறைவி, சைத்தான் கா பச்சா, மாயவன்...