அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே நிறைவு பெற்ற ‘மாகாளி’ முதல் கட்டப் படப்பிடிப்பு!
அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே நிறைவு பெற்ற ‘மாகாளி’ முதல் கட்டப் படப்பிடிப்பு!
மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘மாகாளி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
படத்தின் அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, திட்டமிட்டதைவிட முன்னதாகவே முதல் கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த், இப்படத்தை எழுதி இயக்குகிறார். சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், மனிதர்களின் உறவுகள், உணர்வுகள் மற்றும் அவர்களுக்குள் உருவாகும் போராட்டங்களை அழுத்தமான திரைக்கதையின் வழியாகப் பதிவு செய்யும் என படக்குழு தெரிவித்துள்...

