Wednesday, January 15
Shadow

Tag: rajinikanth

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் ரஜினி பட பிரபலங்கள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் ரஜினி பட பிரபலங்கள்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தற்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் 2.0 பட பிரபலங்கள் இருவர் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவிக்குமார் இயக்கும் இந்த படம் விஞ்ஞானி தொடர்பான கதையாக உருவாக இருக்கிறதாம். வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்ப...
மிரட்டலான ‘2.0’ மேக்கிங் வீடியோ ஒரு பார்வை

மிரட்டலான ‘2.0’ மேக்கிங் வீடியோ ஒரு பார்வை

Latest News, Top Highlights
‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று காலை படத்தின் அதிகாரப்பூர்வமற்ற டீசர் சமூக வலைதளங்களில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை ‘2.0’ டீம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. https://youtu.b...
ஒரேநாளில் ரஜினிக்கு மகிழ்ச்சி அளித்த மூன்று விஷயங்கள்

ஒரேநாளில் ரஜினிக்கு மகிழ்ச்சி அளித்த மூன்று விஷயங்கள்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் நள்ளிரவு வெளியானது. இந்த டீசருக்கு ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. டீசர் வெளியான மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிக்கு மற்றொரு மகிழ்வான நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் சவுகார் பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹோலிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ரஜினி தனது வீட்டில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இன்று ரஜினியின் மனைவி, லதா ரஜினிகாந்த்த...
நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நலையில், ஏற்கனவே ‘காலா’ டீசரை காண அதீத ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள், நாளை வெளியாகும் டீசரை காணும் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக காலா டீசர் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நாளை டீசர் வெளியாகி யூடியூப்பில் இதுவரை படைத்த சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலா படத்தில் ரஜினி மும்பை கேங்ஸ்டராக வருகிறார். ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல...
மீண்டும் ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் கமல்ஹாசன்

மீண்டும் ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் கமல்ஹாசன்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம்-2 ரிலீசாக இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து இருக்கிறது. இந்நிலையில், விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட இருப்பதாக போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், கமலின் விஸ்வரூபம்-2 டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப...
டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர். இதில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அரசியலில் தீவிரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்தும் இதுகுறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கருத்து த...
ரஜினியால் சந்திரமௌலிக்கு வந்த பிரச்சனை

ரஜினியால் சந்திரமௌலிக்கு வந்த பிரச்சனை

Latest News, Top Highlights
விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கும் புதிய படம் ‘Mr.சந்திரமௌலி’. இதில் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இதனை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கிறார்கள். மேலும், இயக்குநர்கள் மகேந்திரன் – அகத்தியன், சதீஷ், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா, ஜெகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் ...
காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 14 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்று அந்த வீடியோ முடிகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந...
ரஜினியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறாரா இந்த பிரபல இயக்குநர்?

ரஜினியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறாரா இந்த பிரபல இயக்குநர்?

Latest News, Top Highlights
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். அந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கினார். பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியாகிய இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்களை கடந்து புதிய மைல்கல்லையும் தொட்டது. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். விஜய்யுடன் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடித்திருந்தார்கள். இந்நிலையில், அட்லி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் பிரபாஸ் நடிப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. இந்நிலையில், அடுத்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக...
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் ரசிகர்களின் கருத்து என்ன?

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் ரசிகர்களின் கருத்து என்ன?

Latest News, Top Highlights
கமல் வருகிற 21-ந்தேதி கட்சி தொடங்குகிறார். சுற்றுப்பயணமும் செல்ல இருக்கிறார். அரசியல் நிலவரம் குறித்து தனது கருத்துக்களை உடனடியாக தெரிவித்து வருகிறார். பஸ் கட்டண உயர்வு உள்பட பல்வேறு தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு கமல் உறுதியான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும். தமிழ்நாட்டு அரசியலை சுத்தப்படுத்துவதுதான் எனது முதல் கடமை என்று அறிவித்து இருக்கிறார். ஆனால், ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த பிறகு அரசியல் பிரச்சினைகள் பற்றி வாய் திறக்கவேயில்லை. ஆனால் கமல் ரசிகர்களிடம் கருத்து கேட்டுதான் எந்தவித முடிவும் எடுக்கிறார். கமல் நேரடியாக மக்களை சந்திக்க களம் இறங்கி விட்டார். கமல் எந்தவித பாகுபாடும் இல்லாமல் தமிழக மக்களை நேசிக்க கூடியவர். ஒரு சார்பினர் விரும்பும் ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடாது. ரஜினியை விட கமலுக்குதான் மக்கள் பலம் அதிகம் என...