Friday, November 13
Shadow

Tag: tamil cinema

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா கூட்டணியில் காதலும் காமெடியும் கலக்கும் ‘லைட்வெயிட், பேபி!’ – வெளியானது கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக்

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா கூட்டணியில் காதலும் காமெடியும் கலக்கும் ‘லைட்வெயிட், பேபி!’ – வெளியானது கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக்

Latest News, Top Highlights
விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா கூட்டணியில் காதலும் காமெடியும் கலக்கும் ‘லைட்வெயிட், பேபி!’ – வெளியானது கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் சென்னை, ஆகஸ்ட் 20: காதல் கதைக்கு காமெடி கலந்தால் எப்படி இருக்கும்? அதிலும் அந்தக் கதையின் பின்னணி ஃபிட்னஸ் உலகமாக இருந்தால், இன்னும் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்! இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் ‘லைட்வெயிட், பேபி!’ ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியனான விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் துறையில் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா இருவரும் இப்படத்தில் கதையின் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். பொதுவாக காதல் திரைப்படங்களில் பார்க்கப்படும் வழக்கமான பின்னணியிலிருந்து விலகி, ஃபிட்னஸ் மற்றும் பாடிபில்டிங் உலகத்தை கதையின் முக...
மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ‘அமரம்’ – தைரியமான கதையுடன் வரும் புதிய திரைப்படம்

மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ‘அமரம்’ – தைரியமான கதையுடன் வரும் புதிய திரைப்படம்

Latest News, Top Highlights
மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ‘அமரம்’ – தைரியமான கதையுடன் வரும் புதிய திரைப்படம் “இப்படியொரு கதையை உருவாக்க நிறைய தைரியம் வேண்டும்” – இயக்குநர் அருள் கிருஷ்ணன் மூன்று காலகட்டங்கள், மூன்று வெவ்வேறு நிலப்பரப்புகள், அவற்றுக்குள் பயணிக்கும் அழியாத காதல்… அதனுடன் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வாழ்வையும் வலியையும் பேசும் படமாக உருவாகியுள்ளது ‘அமரம்’. திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க, C.R. ராஜன் தயாரித்துள்ள இப்படத்தை அருள் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். தேஜஸ் ராஜன் கதாநாயகனாகவும், ஐரா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்...
ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’!

ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’!

Latest News, Top Highlights
ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’! தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஏற்கனவே ஈர்த்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘சிக்மா’ படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை வெளியான டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் மெலோடியான இசையால் கவனம் பெற்றுள்ளது. இரண்டு பாடல்களும் முற்றிலும் மாறுபட்ட இசை அனுபவத்தை கொடுத்திருப்பதுடன், படத்தின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்...
நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை

நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை

Latest News, Top Highlights
நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘மொத ராத்திரி’ தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறையிலும், கதைகளைத் தேர்வு செய்வதிலும் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான வணிக அம்சங்களைக் கடந்து, கதையின் புதுமை, கதாபாத்திரங்களின் இயல்பு, உணர்வுகளின் உண்மைத் தன்மை என பல்வேறு அம்சங்களை ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகும் திரைப்படங்களுக்கும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு, பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, வலுவான கதையம்சம் கொண்ட படங்களையும் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தற்போது தமிழ்...
‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி விழா: சூர்யாவின் துணிச்சலுக்கும், வெங்கியின் எழுத்துக்கும் குவிந்த பாராட்டு!

‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி விழா: சூர்யாவின் துணிச்சலுக்கும், வெங்கியின் எழுத்துக்கும் குவிந்த பாராட்டு!

Latest News, Top Highlights
‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி விழா: சூர்யாவின் துணிச்சலுக்கும், வெங்கியின் எழுத்துக்கும் குவிந்த பாராட்டு!   சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகள், பாசம், மனிதநேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்து வருகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்று, ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர். வழக்கமான வெற்றி விழா பேச்சுகளைக் கடந்து, படத்தின் உருவாக்கம், சூர்யாவின் கதாபாத்திரத் தேர்வு, வெங்க...
‘நீங்கள் பொருளை வாங்குகிறீர்களா… இல்லை, பொருள்தான் உங்களை வாங்குகிறதா?’ – விஷ்ணு டாக்கீஸின் ‘CUSTOMER’ குறும்படம் இன்று வெளியீடு

‘நீங்கள் பொருளை வாங்குகிறீர்களா… இல்லை, பொருள்தான் உங்களை வாங்குகிறதா?’ – விஷ்ணு டாக்கீஸின் ‘CUSTOMER’ குறும்படம் இன்று வெளியீடு

Latest News, Top Highlights
‘நீங்கள் பொருளை வாங்குகிறீர்களா… இல்லை, பொருள்தான் உங்களை வாங்குகிறதா?’ – விஷ்ணு டாக்கீஸின் ‘CUSTOMER’ குறும்படம் இன்று வெளியீடு ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நமக்குள் தோன்றும் ஆசை உண்மையிலேயே நம்முடையதுதானா? அல்லது விளம்பரங்களும் மார்க்கெட்டிங் உத்திகளும் நம்முடைய மனதில் அந்தத் தேவையை உருவாக்குகிறதா? இந்தக் கேள்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய குறும்படம்தான் ‘CUSTOMER’. விஷ்ணு டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தக் குறும்படம், இன்று ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு Vishnu Talkies YouTube சேனலில் வெளியாகிறது. இன்றைய விளம்பர உலகம் ஒரு பொருளை விற்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒரு மனிதனின் ஆசை, பயம், குறைபாடு, தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகளையே முதலில் அடையாளம் கண்டு, பின்னர் அதையே ஒரு விற்பனைக்கான கருவியாக மாற்றுகிறது. இதுதான் ‘CUSTOMER’ படத்தின் மையக் கருத்து. ஒரு சாதார...
“தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை காப்பதே முதல் வெற்றி!” – ‘மொத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி

“தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை காப்பதே முதல் வெற்றி!” – ‘மொத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி

Latest News, Top Highlights
“தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை காப்பதே முதல் வெற்றி!” – ‘மொத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருந்து சினிமா இயக்குநராக தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் ராஜா கருப்பசாமி. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அவர், முதல் படத்திலேயே வித்தியாசமான திருமணத்தை மையமாக வைத்து குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் கலந்த கதையை சொல்லியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஊடகத்திலிருந்து சினிமா இயக்குநர் வரை... மக்களையும் அவர்களது வெவ்வேறு குணாதிசயங்களையும் நெருக்கமாக கவனிக்கும் வாய்ப்பை பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றிய அனுபவம் தனக்கு வழங்கியதாகக் கூறுகிறா...
‘மொத ராத்திரி’யில் மனதைப் பேச வைக்கும் கதாபாத்திரம் – அனிஷ்மா அனில்குமார்

‘மொத ராத்திரி’யில் மனதைப் பேச வைக்கும் கதாபாத்திரம் – அனிஷ்மா அனில்குமார்

Latest News, Top Highlights
‘மொத ராத்திரி’யில் மனதைப் பேச வைக்கும் கதாபாத்திரம் – அனிஷ்மா அனில்குமார் “வெளியில் சொல்ல முடியாத பல உணர்வுகளை மனதுக்குள் சுமந்து செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறேன்” – அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக தனது தனித்துவமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார் அனிஷ்மா அனில்குமார். ‘சிறை’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற இவர், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் சிக்கிக் கொள்ளாமல், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் அனிஷ்மாவுக்கு மற்றொரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் வெறுமனே கதாநாயகனுடன் பயணிக்கும் கதாபாத்திரமாக இல்லாமல், கதையின் உணர்வுப்பூர்வமான நகர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தனது கதாபாத்திர...
‘பாரிஸ் கஃபே’ – சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை அழுத்தமாகப் பேசும் புதிய திரைப்படம்

‘பாரிஸ் கஃபே’ – சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை அழுத்தமாகப் பேசும் புதிய திரைப்படம்

Latest News, Top Highlights
‘பாரிஸ் கஃபே’ – சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை அழுத்தமாகப் பேசும் புதிய திரைப்படம் குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்.வி. என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பாரிஸ் கஃபே’. குரு சோமசுந்தரம், அனுமோல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சமூகத்தில் தொடர்ந்து பேசப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ளார். அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா சாய், பிபின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே. கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சதீஷ் ஜி...
ஒரே மனிதன்… ஆயிரம் கதாபாத்திரங்கள்! – ‘ONE MAN’ மூலம் உலக சினிமாவையே வியக்க வைக்கும் சங்ககிரி ராஜ்குமார்

ஒரே மனிதன்… ஆயிரம் கதாபாத்திரங்கள்! – ‘ONE MAN’ மூலம் உலக சினிமாவையே வியக்க வைக்கும் சங்ககிரி ராஜ்குமார்

Latest News, Top Highlights
ஒரே மனிதன்… ஆயிரம் கதாபாத்திரங்கள்! – ‘ONE MAN’ மூலம் உலக சினிமாவையே வியக்க வைக்கும் சங்ககிரி ராஜ்குமார் சென்னை: ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒரு மிகப்பெரிய குழுவே தேவைப்படும். ஆனால், ஒரு முழுமையான திரைப்படத்தின் உருவாக்கத்தில் இடம்பெறும் பல்வேறு பணிகளை ஒரே மனிதர் மேற்கொண்டு, பல கதாபாத்திரங்களிலும் அவரே நடித்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் என்ற வித்தியாசமான முயற்சியுடன் உருவாகியுள்ளது இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’. ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கியுள்ள சங்ககிரி ராஜ்குமார், தற்போது ‘ONE MAN’ திரைப்படத்தின் மூலம் சினிமா உருவாக்கத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். வரும் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள...