Friday, November 6
Shadow

Tag: திரைவிமர்சனம்

அரண்மனை 3 திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் சுந்தர் சி. இயக்கத்தில் நடிகர் ஆர்யா, நடிகை ராஷி கண்ணா இயக்கத்தில் வெளியாகி உள்ள அரண்மனை 3 படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரை திருமணமும் செய்து விடுகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் ஆண்ட்ரியா இறந்துவிடுகிறார். அந்த குழந்தை தான் ராஷி கன்னா. மனைவி ஆண்ட்ரியாவை இழந்ததால் மகள் ராஷி கன்னா மீது அதிக பாசம் இல்லாமல் இருக்கிறார் சம்பத். பள்ளிப் பருவத்தை எட்டிய ராஷி கன்னா, தனது அரண்மனையில் பேய் இருப்பதாக கூறி ஹாஸ்டலில் தங்குகிறார். படிப்பு முடிந்தபிறகே அரண்மனைக்கு திரும்புகிறார். இதற்கிடையே, அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வருகிறார் ஆர்யா. ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சி.யும் வந்து சேர, திரைக்கதை விறுவி...

பூமிகா திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
ஒரு பெரிய இடத்தை பிளாட் போட்டு விற்கும் பெரிய அசைன்மென்ட் ஒன்று கவுதமுக்கு வருகிறது. கவுதம் மற்றும் குடும்பத்தினர் அந்த வீட்டுக்குச் செல்ல, அமானுஷ்யங்கள், ஆபத்துகள் என இரவு நீள்கிறது. வந்திருக்கும் நபர்களின் பின்னணி, அந்த இடம் ஏன் அப்படிச் செயலாற்றுகிறது போன்ற விஷயங்களை வைத்து நவரசா சீரிஸின் 'இன்மை' புகழ் ரத்திந்திரன் R பிரசாத் ஒரு பசுமை சார்ந்த (எக்கோ) த்ரில்லரை முன்வைத்திருக்கிறார். பல்வேறு புது முகங்களுக்கு இடையே தனித்து நிற்கிறார் சம்யுக்தாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். சைக்காலஜிஸ்ட், குழந்தையின் தாய் என ஐஸ்வர்யா ராஜேஷ் கரியரில் இன்னும் ஓர் அழுத்தமான கதாபாத்திரம். சிறப்பாகச் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், பாவேல் நவகீதன், நக்கலைட்ஸ் குழு தவிர்த்து படம் முழுக்கவே பல புதுமுகங்கள். கதையின் நாயகன் கவுதமாக விது. கவுதமின் தோழியும் கட்டடக் கலைஞருமான காயத்ரியாக சூர்யா கணபதி. கவுதமின் தங்கை மா...
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களுக்கு மட்டும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும், அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, இப்படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா, பார்ப்போம்.. லண்டனில் சிவதாஸ், பீட்டர் என்று இரண்டு மாஃபியா கும்பலுக்கும் மோதல், வழக்கம் போல் ஒருவர் மாற்றி ஒருவர் கேங்கில் உள்ள ஆட்களை கொள்கின்றனர். இதே நேரத்தில் தனுஷ் ஊரில் ஒரு பரோட்டா கடையில் வேலைப்பார்த்து வருகிறார். அப்போது தன் ஊரில் ஒரு வட இந்தியாவை சேர்ந்த கடைக்காரர் தம்பியை தனுஷ் இரயிலை மறித்து கொள்கிறார். லண்டனில் உள்ள சிவதாஸை போட்டு தள்ள, தனுஷை லண்டன் அழைத்து செல்கின்றனர். அங்கு சென்று சிவதாஸ் குறித்து தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொண்டு அவரை கொல்ல தயாராக போது ஒரு டுவிஸ்ட் வருகிறது, அதன்பின் என்ன ஆனது என்பது மீதிக்கதை. ...

டெடி திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
வித்தியாசமான கதையை படமாக்குவதற்கு பெயர் போன சக்தி சௌந்தர்ராஜன் டெடி படம் மூலம் மீண்டும் வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார். உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியாவால் ஸ்ரீ(சயீஷா) கடத்தப்படுவதுடன் படம் துவங்குகிறது. அவருக்கு மருந்து செலுத்திய பிறகு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார். அதன் பிறகு சயீஷாவின் ஆத்மா ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது. நம்ப முடியவில்லை தான், ஆனால் படத்தில் அப்படித் தான் காட்டியிருக்கிறார்கள். அந்த டெடி பொம்மை ஓசிடி மற்றும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளும் திறன் கொண்ட சிவாவுடன்(ஆர்யா) நட்பாகி ஸ்ரீ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்கிறது. புதுமையான கதையை திரையில் காட்டுவது சாதாரண விஷயம் அல்ல. அதில் இயக்குநருக்கு முழு வெற்றி கிடைக்காவிட்டாலும் அவரின் முயற்சியை பாராட்ட வேண்டும். டெடி பொம்மை செய்யும் காரியங்கள், அதற்கும் ஆ...

பூமி திரைவிமர்சனம் (மக்களின் மனசாட்சி) (4/5)

Review, Top Highlights
கொரோனா தாக்கம் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் தற்போது வரை முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகி வெற்றிகண்டு வருகிறது. அந்த வரிசையில் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் விவசாயிகளின் கஷ்டத்தை எடுத்து காட்டும் வகையில் பூமி திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருந்த இப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை ஓடிடி மூலம் பூமி திரைப்படம் முழுமையடைய செய்ததா? இல்லையா? பார்ப்போம்.. நாசாவில் பணியாற்றும் பூமிநாதன் விடுமுறைக்காக, தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கே விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து, இங்கேயே தங்கி அவர்களுக்கு உதவி செய்ய முடிவுசெய்கிறார். ஆனால், சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதனை முயியடித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் எப்படி ...
அந்தகாரம் திரைவிமர்சனம் (புதுமை ) Rank 4/5

அந்தகாரம் திரைவிமர்சனம் (புதுமை ) Rank 4/5

Review, Top Highlights
அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் என்ற இரண்டு பெர்பாமர்கள். அர்ஜுன் கெத்தாக நடிப்பவர், அவருக்கு இப்படத்தில் பயந்து ஓடி பதுங்கும், பயப்படும் கதாபாத்திரம். தனது பார்வை வாயிலாகவே மிரட்டுபவர் வினோத், அவருக்கு குருடன் கதாபாத்திரம். மனநல நிபுணராக குமார் நடராஜன் தனது பார்வை மற்றும் பேசும் தோணியில் மிரட்டி விடுகிறார். பூஜா ராமசந்திரன் எதற்கு படம் நெடுக என்று யோசிக்கும் நேரத்தில், இந்த மூவரையும் இணைப்பது அவரே. நெட் பிலிக்ஸ் தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி, இந்திய அளவில் ரீச் பெற்றுள்ள படம் அந்தகாரம். கூடிய விரைவில் உலகளவில் நல்ல பாராட்டை பெரும் இப்படம் என்பதில் சந்தேகமில்லை. இயக்குனர் விக்னராஜன் தனது படத்திற்கு non linear ஸ்டைல் தேர்தெடுத்துள்ளார். இவருக்கு ஒருபுறம் உறுதுணையாக இருப்பது நடிகர்கள் எனில் மறுபுறம் எட்வின் சாகி ஒளிப்பதிவு, பிரதீப் குமார் இசை, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங். இவர்கள் கூ...
மூக்குத்தி அம்மன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

மூக்குத்தி அம்மன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவில் இருந்து ரம்யா கிருஷ்ணன் வரை பல அம்மன் கதாபாத்திரங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள படம் தான் மூக்குத்தி அம்மன். திரையில் நயன்தாராவை அம்மனாக பார்க்கவேண்டும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஓடிடி மூலமாக மூக்குத்தி அம்மனாக அருள் தந்துள்ளார். அப்படி ஓடிடியில் வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் கேட்ட அணைத்து வரத்தையும் மூக்குத்தி அம்மன் வழங்கினாரா? இல்லையா? என்று பார்ப்போம். பத்திரிகையாளராக கடவுள் மீது கோபம் காட்டும் ஆர்.ஜெ. பாலாஜி, நிஜத்தில் தனக்காக கடவுள் எதாவது நல்ல விஷயத்தை செய்து விட மாட்டாரா என்று துடிக்கிறார். தன் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க திருப்பதி சென்ற வரவேண்டும் என்று நினைக்கிறார் நடிகை ஊர்வசி. ஆனால் திருப்பதி செல்ல முயற்சிக்கும் ஒவ்வொரு நேரத்திலும் பல நகைச்சுவையான தடைகள் ஏற்ப்படு...
பொன்மகள் வந்தாள் திரைவிமர்சனம் (தொடுவானம்) Rank 4/5

பொன்மகள் வந்தாள் திரைவிமர்சனம் (தொடுவானம்) Rank 4/5

Latest News, Review, Top Highlights
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.  அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை ஒடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகிறது.நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இப்படத்தில் ஜோதிகா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதோடு, பாக்யராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஜோதி என்ற பெண் நிறைய குழந்தைகளை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார். இந்த வழக்கை 'மனுதாரர்' பெதுராஜ் (பாக்யராஜ்), மற்றும் வென்பா (ஜோதிகா) ஆகியோர் மீண்டும் விசாரணைகு கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞராக ராஜ...

நான் சிரித்தால் திரைவிமர்சனம் (ரேட்டிங் 2.5/5)

Latest News, Review
மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களை தொடர்ந்து நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் காதலர் தினமான இன்று வெளியாகி உள்ள படம் நான் சிரித்தால். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஹீரோ காந்திக்கு (ஹிப்ஹாப் தமிழா ஆதி) ஒரு வித்தியாசமான பிரச்சனை. அதாவது பதட்டமானாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி கெக்க பிக்கவென சிரித்துவிடுவார். இதனாலேயே அவர் வாழ்க்கையில் பிரச்சனையோ பிரச்சனை. ஜாலியான காந்திக்கு அங்கிதா (ஐஸ்வர்யா மேனன்) என்று ஒரு காதலி. ஆதி படத்தில் எப்பொழுதும் ஒரு நண்பர்கள் கும்பல் இருக்கும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த நண்பர்கள் கும்பலில் ஒருவர் காணாமல் போக அவரை தேடிச் செல்லும் ஆதி டில்லி பாபு(கே.எஸ். ரவிக்குமார்), சக்கரை (ரவி மரியா) இடையே நடக்கும் கேங் சண்டையில் சிக்கிக் கொள்கிறார். ஆதி சிரித்து சிரித்து பிரச்சனையில் சிக்குவது தான் கதையே. ஆதி தான் சிரித்துக் கொண்டே இருக்க...

பிழை திரைவிமர்சனம் (ரேட்டிங் 2.5/5)

Latest News, Review
கிராமத்தில் கல் உடைக்கும் வேலை செய்யும் பெற்றோர்கள் தங்களை மாதிரி தங்கள் பிள்ளைகளும் படிக்காமல் பிற்காலத்தில் கஷ்டப்படகூடாது என கருதி நன்றாக படிக்க சொல்லி கண்டித்து வளர்க்கிறார்கள். பெற்றோரின் கண்டிப்பை தவறாக கருதும் 3 பிள்ளைகள் வீட்டுக்கு தெரியாமல் பட்டணத்துக்கு ஓடி போகிறார்கள். பட்டணத்தில் அவர்கள் படும் பாடு அந்தோ பரிதாபம்! ‘இறுதியில் படிப்பே சிறந்தது’‘ என உணர்ந்து ஊர் திரும்பும் கதை இது. ஓவ்வொரு ஊரிலும் நடக்கும் – நடந்து கொண்டிருக்கும் சம்பவத்தை அற்புதமாக தந்து இருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. சின்ன படம் தான். ஆனால் படம் முழுக்க சிறப்பான நடிப்பு இருக்கிறது. பெற்றோராக மைம் கோபி , சார்லி ,ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களை நடிகர்களாக பாக்க முடியவில்லை.கிராமத்து ஏழை ஜனமாகவே பார்க்க முடிகிறது. அனுபவ நடிப்பை அள்ளி வழங்கி இருக்கிறார்கள், மூவரும். சிறுவர்களாக ரமேஷ், நாஸத் கோகுல். ...