Friday, April 17
Shadow

Tag: பதிவு

நடிகை அமலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
  அமலா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அமலா ஐரிஷ் தாய்க்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. விலங்குகள் மேல் கொண்ட அன்பால் 1992ஆம் ஆண்டு அமலா ஐதராபாத் புளு கிராசு இயக்கத்தை தொடங்கினார். 2015இல் அவர் தலைவியாக உள்ளார்....

நடிகர் திலகன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுரேந்தரநாத் திலகன் பரவலாக அறியப்பட்டது திலகன், இருநூற்றுக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள ஓர் இந்திய திரைப்பட நடிகரும் நாடக நடிகரும் ஆவார். குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்று இந்தியத் திரைப்படத்துறையில் பரவலாகப் பாராட்டப்பட்டவர். 2009ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21, 2012 அன்று புதிய திரைப்படமொன்றின் படப்பிடிப்புத் தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து திருச்சூரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இரண்டு மாரடைப்புகளைக் கடந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவருக்கு, இதய நோய் தவிர, குளிர்சுரமும் (நியுமோனியா) ஏற்பட்டுள்ளது. எனவே செயற்கை மூச்சியக்கக் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் செப்படம்பர் 24,2012 அன்று சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமையில் காலை 3 மணிக்கு இறந்தார். இவர் நடி...

நடிகர் முரளி மறைந்த தின பதிவு

Shooting Spot News & Gallerys
முரளி தமிழ்த் திரைப்பட நடிகர். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990-ல் வந்த “புது வசந்தம்”, 1991 -ல் வந்த “இதயம்”, படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இவர் வண்ணார் சமுகத்தை சேர்ந்தவரவார். இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரப...

இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
குன்னக்குடி வைத்தியநாதன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. 1935 இல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார். ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத...

நடிகர் சாண்டோ சின்னப்பா தேவர் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
சாண்டோ சின்னப்பா தேவர் என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆரை நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். எம். ஜி. ராமச்சந்திரன் இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 - 1971இல் கலைமாமணி விருது பெற்றவர். ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ...

நடிகை பத்மினி பிரியதர்சினி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பத்மினி பிரியதர்சினி என அழைக்கப்பட்ட பத்மினி இராமச்சந்திரன் ஒரு தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞரும், திரைப்படத் துணை நடிகையும் ஆவார். 1950களின் பிற்பகுதியில் சில தமிழ், கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பத்மினி பிரியதர்சினி கேரள மாநிலத்தில் மாவேலிக்கரா என்ற ஊரில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர். பின்னர் பெங்களூரில் நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, சிறந்த பல நடனக் கலைஞர்களை உருவாக்கினார். தனது நடனப் பள்ளி மாணவரக்ளுடன் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அகாதமி விருது பெற்ற லைஃப் ஒஃப் பை (2012) திரைப்படத்தில் நட்டுவனாராக நடித்தார். நடனக் கலைஞராகத் தனது பணியை ஆரம்பித்த பத்மினி, பல தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். சகோதரி படத்தில் ஆனந்தக்கோனாரின் (ஜே. பி. சந்திரபாபு) முறைப்பெண்ணாகவும், பாலாஜியை ம...

பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஆஷா போஸ்லே ஒரு இந்திய பாடகியாவார். அவர் பல துறைகளில் திறமை கொண்டவராக இருந்தாலும், அவர் பாலிவுட் பின்னணிப்பாடகியாக மிகவும் புகழ் பெற்றவராவார். அவரது கலைப்பயணம் 1943 ஆண்டில் துவங்கியது மற்றும் இன்று வரை அறுபது ஆண்டுகளாக தமது சேவைகளை அளித்து வருகிறார். அவர் பின்னணிப்பாடகியாக 1000 த்துக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியதோடு, அவர் பாடிய பல இசைத்தட்டுக்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. அவர் பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார். தெற்காசிய நாடுகளில் போஸ்லே அவர்கள் மிகவும் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் பாடகியாவார் — அவரது திறமை திரைப்படப்பாடல்கள், போப் இசை, கஜல் வழிப்பாடல்கள், பஜனைப்பாடல்கள், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசை, நாட்டுப்பாடல்கள், கவ்வாலிப்பாடல்கள், ரபீந்திர சங்கீதம் மற்றும் நஜ்ருல் கீதி பாடல்கள் அனைத்திலுமே பளிச்சென்று வெளிப்படுவதை அனைவரும் அறிவார்கள். அவர் 14 க்கும்...

நடிகை ராதிகா ஆப்தே பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராதிகா ஆப்தே ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கபாலி திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த தமிழ் படங்கள்: ரத்தசரித்திரம், தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச் செல்வன், கபாலி,

நடிகர் மம்மூட்டி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மம்முட்டி நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மம்மூட்டி பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். அவற்றில் சிறந்த நடிகர் பிரிவில் அவர் பெற்ற மூன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகள் மற்றும் எட்டு பிலிம்பேர் விருதுகள் ஆகியவை அடங்கும். 1998 இல், இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது. கைராலி டிவி, பீபிள் டிவி மற்றும் வீ டிவி போன்ற மலையாள தொலைக்காட்சி அலைவரிசைக...

நடிகை அனுயா பகவத் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அனுயா பகவத் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களான மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த தமிழ் படங்கள்: சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான்