
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஃபீல் மை லவ்’ ஃபர்ஸ்ட் லுக்… காதலும் உணர்வும் கலந்த புதிய பான் இந்தியா திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு!
சென்னை:
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
தமிழ் திரைப்படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்ததுடன், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் A. N. பாலாஜி, தயாரிப்பாளராக தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக ‘ஃபீல் மை லவ்’ உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.
‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி இசையமைக்க, ‘லவ்’, ‘கொலை சேவல்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் பல விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அஜய் மனோஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
இப்படத்தை ஹரி பிரகாஷ் எம் எழுதி இயக்கியுள்ளார். “வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள், உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ‘ஃபீல் மை லவ்’ திரைப்படம் பான் இந்தியா அளவில் கவனம் பெறும் படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையையும் திரைப்பட வட்டாரத்தில் உருவாக்கியுள்ளது.

Vijay Sethupathi Launches the First Look Poster of Pan-India Romantic Entertainer ‘Feel My Love’
Chennai:
The makers of the upcoming Pan-India film ‘Feel My Love’ have unveiled its much-awaited first look poster, with Makkal Selvan Vijay Sethupathi officially releasing it on his X (formerly Twitter) account. The vibrant and youthful poster has instantly captured the attention of cinema lovers and is rapidly gaining traction across social media platforms.
‘Feel My Love’ is the maiden Tamil production of producer A. N. Balaji, who has earned recognition for distributing several Tamil films in Telugu and Kannada, besides presenting multiple Pan-India releases across India.
The film is being produced as a Pan-India project in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi.
The cast features M. S. Bhaskar, Adithya Bhaskar, Aira, Ammu Abhirami, Raj Ayyappa, Noble James, and Priyanka, while Madhusudhan Rao appears in a significant role.
Cinematography is by M. S. Satheesh, who was widely appreciated for his work in House Mates. The soundtrack is composed by Rajaravivarma S and Balasubramanian G, while Ajay Manoj, known for films like LOVE and Kolai Seval as well as several notable advertising campaigns, serves as the editor.
The film is written and directed by Hari Prakash M.
Centred on the uplifting belief that “A miracle can happen at any stage of life,” Feel My Love is described as a refreshing romantic comedy blending heartfelt emotions, realistic relationships, entertaining moments, and unexpected twists.
With Vijay Sethupathi unveiling the first look, the film has already generated considerable buzz among audiences. The poster’s youthful romantic appeal has further raised expectations for the project.
The film is currently in the final stages of production, and the team is preparing for a grand audio launch and trailer release event, with further announcements expected soon.
