Wednesday, October 27
Shadow

Shooting Spot News & Gallerys

தேர்தலில் வாக்களிக்க படப்பிடிப்பை விரைவில் முடித்த பாயும் ஒளி நீ எனக்கு படப்பிடிப்பு குழுவினர் !

Shooting Spot News & Gallerys
தயாரிப்பாளர் குமாரசுவாமி பத்திக்கொண்டா அவர்களின் பட நிறுவனமான மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நானும் வாணி போஜனும் இணைந்து நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. அறிமுக இயக்குநர் கார்த்திக் சவுத்ரி அவர்களது இயக்கத்தில் கடந்த 55 நாட்களாக ஹைதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடந்து வந்த படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து சென்னை திரும்பிவிட்டோம். இவ்வளவு விரைவாக முடிந்ததின் நோக்கமே அனைவரும் தங்களின் ஜனநாயகக்கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். ஏப்ரல் 6 (நாளைய தினம்) நமது வாக்குரிமையை தவறாது நிறைவேற்ற மறக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். அன்புடன் உங்களின் விக்ரம் பிரபு....
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல்  படம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல் படம்

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
2020 ல் ஜீ5 ‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’ ‘முகிலன்’ ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘மதில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சோசியல்-டிராமா படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படத்தில் மைம் கோபி, 'பிக்பாஸ்' புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள எம்.தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். “இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நான்...

AMAZON PRIME VIDEO இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது: அக்ஷய் குமார் நடிக்சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக உருவெடுக்கிறதுகும் ராம்

Shooting Spot News & Gallerys
AMAZON PRIME VIDEO இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது: அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக உருவெடுக்கிறது இப்பங்கேற்பின் மூலம், இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகெங்கும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான மற்றொரு படியில் Prime Video முன்னெடுத்துப் பயணிக்கிறது கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் Prime Video தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த அதிரடி-சாகசப் படத்தை அபிஷேக் சர்மா இயக்கி டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், இந்திய சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நசரத் பருச்சா ஆகியயோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவ...
“ஆனந்தம் விளையாடும் வீடு”  திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் இனிதே துவங்கியது !

“ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் இனிதே துவங்கியது !

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள். கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது. சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதிய...
இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

Shooting Spot News & Gallerys
கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைகிறார். படத்தொகுப்பு - லாரன்ஸ் கிஷோர் கலை - M. லக்‌ஷ்மி தேவா புரொடக்‌ஷன் எக்ஸிகுயுடிவ் - D.சரவண குமார் (ராஜு) பாடல்கள் - உமா தேவி, கோசேஷா, பாலா டிசைனர் - நவீன் நடனம் - கல்யாண், சந்தோஷ் சண்டைப்பயிற்சி - விக்கி நந்தகோபால் காஸ்டுயும் டிசைனர் - நிகிதா நிரஞ்சன் ஸ்டில்ஸ் - ராஜேந்திரன் மக்கள் தொட...
சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

Shooting Spot News & Gallerys
888 Productions-ன் முதல் தயாரிப்பான இப்படத்தை, எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. திரைப்படத்தின் தலைப்பு 'சாந்தி செளந்தரராஜன்'. இதுவரை பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 Productions நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம் பதிக்கிறது. கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'மாமாங்கம்' திரைப்படத்தில ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும் மற்ற பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய...

ஜல்லிக்கட்டு குறித்த தமிழ் திரைப்படத்திற்காக இணையும் மலையாள இயக்குநர், நடிகர்

Shooting Spot News & Gallerys
தமிழ் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான காதலின் காரணமாக பிரபல மலையாள கதாசிரியரும் இயக்குநருமான வினோத் குருவாயூர் மற்றும் நடிகர் அப்பாணி சரத் ஆகியோர் ஒரு புதிய தமிழ் திரைப்படத்திற்காக இணைகின்றனர். ஜல்லிக்கட்டு பற்றிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரிச் மல்டிமீடியா தயாரிக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளுக்கு டாக்டர் ஜெயராம் சிவராம் பொறுப்பேற்றுள்ளார். திரைப்படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ‘சண்டைக்கோழி 2’ மற்றும் ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய திரைப்படங்களின் மூலமும், 'ஆட்டோ சங்கர்' வெப் சீரிஸ் மூலமும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான அப்பாணி சரத், நடிகர் ஆரியின் வில்லனாக வேகமாக வளர்ந்து வரும் தமிழ் திரைப்படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். இது தவிர, பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் அவர் பிசியாக உள்ளார். மல...
இயக்குநர் எஸ். ஏ .சந்திரசேகரன் வெளியிட்ட ‘2323 ‘ படத்தின் டீஸர்

இயக்குநர் எஸ். ஏ .சந்திரசேகரன் வெளியிட்ட ‘2323 ‘ படத்தின் டீஸர்

Shooting Spot News & Gallerys
மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக '2323 The beginning 'உருவாகியிருக்கிறது. கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கியுள்ளார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு 'தமிழனானேன்' என்றொரு படத்தை எடுத்திருந்தார். இந்த' 2323 'படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது, "இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும். இப்போது முதல் பாகத்தை உருவாக்கியுள்ளேன். இது 2020-ல் தொடங்கும் கதை. இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு கண்டுபிடிப்பை மாயோன் என்கிற நாயகன் கண்டுபிடிக்கிறான். அதைக் கொண்டு புயலை உருவாக்கலாம். கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால் அவனது அறிவியல் தொழில்நுட்பத்தை எதிரிகள் திருடி அவனுக்கு எதிராகப் பய...

தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH” படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. இந்த நிலையில் தற்போது “SSHHH” படக்குழு தமிழ் சினிமா முன்னெப்போதும் கண்டிராத வகையில், மிக விரைவாக படத்தின் படப்பிடிப்பினை முடித்து உள்ளனர். நான்கு வேறுவேறு வயது நிலைகளில், வேறுவேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் காம உணர்வுகளை பேசும், நான்கு அழகான கதைகளை உள்ளடக்கிய, இத்திரைப்படத்தின் இரண்டு பகுதிகளுக்காக, 1999 ஆம் ஆண்டு மற்றும், 2005 ஆம் ஆண்டு காலத்தை பிரதிபலிக்கும் வகையிலான வீடு மற்றும் இடம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. 2010 மற்றும் 2020 காலகட்டங்கள் நேரிடையான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது. Lust Stories” எனும் ஹிந்தி படத்தினை போன்று தமிழில் காமத்தினை பேசுபோருளாக ...
CLOSE
CLOSE