Tuesday, October 27
Shadow

ரஜினி , விக்ரம் அடுத்து விஜய் தான் !

தீபாவளி திருநாள் அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “மெர்சல்” இத்திரைப்படத்தில் கதாநாயகனாக இளைய தளபதி விஜய்,கதாநாயகிகளாக நித்யா மேனன், காஜல் அகர்வால் ,சமந்தா மற்றும் வைகைப்புயல் வடிவேலு ,கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் இசைப்புயல்ஏ .ஆர்.ரகுமான் இசையில் ஜீ.கே.விஷ்ணு ஒளிப்பதிவில் வெளிவந்த திரைப்படம் “மெர்சல்” வந்த நாளிலிருந்து பல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.

“மெர்சல்” திரைப்படம் தீபாவளி நாளில் இருந்து இன்று வரை உலகம் முழுவதும் 225 கோடி வசூல் செய்து உள்ளது.இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “எந்திரன்”மற்றும்”கபாலி” திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது.

நடிகர் விக்ரமின் “ஐ” திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply