Thursday, January 16
Shadow

Tag: #விஜய் 62

விஜய் படத்தில் இவருக்கு இந்த கதாபாத்திரமா?

விஜய் படத்தில் இவருக்கு இந்த கதாபாத்திரமா?

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். வில்லன் வேடத்தில் பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். வரலட்சுமியின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவமான வேடம் என்று கூறப்படுகிறது. முக்கிய திருப்புமுனை ஏற்படுத்தும் வில்லத்தனம் கலந்த பாத்திரமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்....
பிறந்தநாளில் வரலட்சுமியை குஷியில் ஆழ்த்திய விஜய் படக்குழு

பிறந்தநாளில் வரலட்சுமியை குஷியில் ஆழ்த்திய விஜய் படக்குழு

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும், ராதாரவியும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரலட்சுமி பிறந்த நாளான இன்று விஜய் படத்தில் நடிப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பது, அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசாக அமைந்திருக்கிறது....
விஜய் 62 படக்குழுவினருக்கு புதிய உத்தரவு

விஜய் 62 படக்குழுவினருக்கு புதிய உத்தரவு

Latest News, Top Highlights
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது, 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தை அடுத்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது ஒரு பாடல் காட்சி படமானது. பின்னர் மொத்த படக்குழுவும் கொல்கத்தா சென்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகளும் வேறுசில காட்சிகளும் படமாகின. அப்போது அங்கு படமாக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இரைதயடுத்து படப்பிடிப்பில் யாரும் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்று படக்குழுவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அறிவுறுத்தியுள்ளாராம்....
ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

Latest News, Top Highlights
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் பேசும் போது, “மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன். நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி மகளிட...
விஜய்யை மாஸாக காட்ட களமிறங்கிய இரு பிரபலங்கள்

விஜய்யை மாஸாக காட்ட களமிறங்கிய இரு பிரபலங்கள்

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் விஜய்யின் தொடக்க பாடல் மற்றும் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்‌ஷ்மண் படக்குழுவுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இதில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் - ஏ.ஆ...
கத்தி படத்திற்கும், விஜய் 62 படத்திற்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

கத்தி படத்திற்கும், விஜய் 62 படத்திற்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கொல்கத்தா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு அனல் பறக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க ஏ.ஆர்.முருதாஸ் திட்டமிட்டிருக்கிறாராம். அங்கு சுமார் 1 மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். முன்னதாக கத்தி படத்தின் ஓபனிங் சீன் கொல்கத்தாவில் தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய்யின் ...
விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்போவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனம்

விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்போவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கியிருக்கிறது. அதன்படி விஜய்யின் அடுத்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் தான் விஜய் நடிக்கிறாராம். இதுகுறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்ததாகவும், விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜீவா கூறியிருக்கிறார். அந்த 100-வது படத்திற்கான கதைகள் கேட்கும் வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்...
ஆரம்பத்திலேயே குத்தாட்டம் போட்ட விஜய்

ஆரம்பத்திலேயே குத்தாட்டம் போட்ட விஜய்

Latest News, Top Highlights
‘மெர்சல்’. படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொங்கிய நிலையில், முதலில் பாடல் காட்சியை படமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பாடல் விஜய்யின் அறிமுக பாடல் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது....
‘விஜய் 62’ படத்திற்கு ரஜினி பட வசனகர்த்தா!

‘விஜய் 62’ படத்திற்கு ரஜினி பட வசனகர்த்தா!

Latest News, Top Highlights
‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் ‘விஜய் 62’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய க்ரீஷ் கங்காதரன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். தேசிய விருதுபெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஆர்ட் டைரக்டராக சந்தானம் பணியாற்றுகிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். ‘விஜய் 62’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பரதன் இயக்கிய ‘பைரவா’ படத்தில், முதன்முதலில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். கடந்த வருடம் பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸானது. ‘பைரவா’ ரிலீஸ...
விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் மட்டும் ஜோடியில்லை; 2 ஹீரோயின்களாம்!

விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் மட்டும் ஜோடியில்லை; 2 ஹீரோயின்களாம்!

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் ஒரு பாடல் காட்சியை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் விஜய் ஜோடியாக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. யோகி பாபு மற்றும் பிரேம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில், கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகிறது. துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருக...