Sunday, June 21
Shadow

Tag: நடிகர்

நடிகர் பிரபுதேவா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பிரபுதேவா இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, ...

நடிகர் மோகன் ராமன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மோகன் ராமன் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராவார். மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். குறிப்பாக மர்மதேசம் (விடாது கறுப்பு), சிதம்பர ரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார். இவர் நடித்த திரைப்படங்கள்:  இதயம், மகாநதி, ஆனஸ்ட் ராஜ், ஒன்ஸ் மோர், ஆஹா, அரிச்சந்திரா, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தேவன், அன்பே அன்பே, மாஜிக் மாஜிக் 3டி, பெரியார், நான் அவனில்லை, குசேலன், டிஎன் 07 ஏஎல் 4777, குரு என் ஆளு, இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், பயணம், சபாஷ் சரியானப் போட்டி, ராமானுஜன், சென்னை எக்ஸ்பிரஸ்...
நடிகர் அஜய் தேவ்கான் பிறந்த தின பதிவு

நடிகர் அஜய் தேவ்கான் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அஜய் தேவ்கான் ஒரு பிரபல இந்தி நடிகர். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நடித்து வருகிறார். இவர் தில்லியில் வசித்த பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் அம்ரித்சர் ஆகும். இவரது குடும்ப உறுப்பினர்கள் மும்பை திரைத் தொழிலில் ஈடுபட்டு இருந்தார்கள். அஜய் தேவ்கான் 1999 ஆம் ஆண்டு பிப்பிரவரி 24 ஆம் திகதியில் கஜோலைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் இவர் சாக்ம் மற்றும் தி லெசன்ட் ஆஃப் பகத்சிங் ஆகிய திரைபடங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில், பாலிவுட் படத்திலும் நடிக்கிறார். ஸ்போர்ட்ஸ் டிராமா உருவாகும் இந்த படத்தில், 49 வயதாகும் பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்....

நடிகர் சாம் ஆண்டர்சன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாம் ஆண்டர்சன் (இயற்பெயர் ஆன்டர்சன் சாமுவேல்) என்பவர் 2007ல் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக யூடியூப் முதலிய சமூக வலைத் தளங்களிலும் புகழ் பெற்றவரும் ஆவார். இவர் ஈரோட்டில் பிறந்தவர். அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக் கொண்ட ஒரு கூரியர் நிறுவனம் நடத்தி வந்தார். 2001ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்னும் தமிழ்த் திரைப்படத்தினால் தூண்டப்பட்டு திரை உலகிற்கு வந்ததாக கூறியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான யாருக்கு யாரோ என்னும் திரைப்படம், இவரின் மாமாவால் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் நான்கு திரையரங்குகளில் 25 நாட்கள் ஓடியது. இவர் திரை உலகில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார். இவர் நடித்த படங்கள்: 10 என்றதுக்குள்ள, மகராணி கோட்டை, எட்டுத்திக்கும் மதயானை, கோ...

நடிகர் ராம்கி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராம்கி ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நிலவே முகம் காட்டு, பாளையத்து அம்மன் ஸ்ரீ ராஜராஜேசுவரி, படைவீட்டு அம்மன், குற்றப்பத்திரிக்கை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நிரோசா என்ற நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல படங்களில் இணைந்தே நடித்தனர். ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த ராம்கி பெரிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சினிமாவுக்கு வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய பெரும் இமயங்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவாக ஆரம்பித்த நேரத்தில் சின்னப் பூவே மெல்லப் பேசு படம் மூலம் ஹீரோவாக வந்தவர் ராம்கி. அதன் பின்னர் ஏகப்பட்ட படங்களில் நடித்தார்.  பெரிய ஹீரோவாகாவிட்டாலும் கூட பிசியான ஹீரோவாகவே இருந்தவர் ராம்கி. காலப் போக்கில் ஏகப்பட்ட இளம் ஹீரோக்கள் குவியத் தொடங்கியதால் ராம்கிக்கு வாய்ப்புகள் குறைந்தன. பிசியாக இருந்த காலத்திலேயே நிரோஷாவைக் காதலித்து...

நடிகர் ரவிச்சந்திரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
1960கள்-70களில் முன்னணி கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த 1951ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு திருச்சியில் உள்ள புனித யோசப் கல்லூரியில் படித்தார். ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமா...

நடிகர் சரத்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்...

நடிகர் ராம் சரண் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராம் சரண் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய் சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்பட கலை குடும்பம் ஆகும். இவர் டிசம்பர் 1ம் திகதி 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விர...

நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த நாள் பதிவு

Birthday, Top Highlights
பிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார். இவர் நடித்த படங்கள்  இருபத்தியாறு 26, இதயம் முரளி, அழியாத கோலங்கள், மத கஜ ராஜா, சில சமயங்களில், அக்னி சிறகுகள், தேவ், செய், சொல்லிவிடவா, செக்கச்சிவந்த வானம், நடிகையர் திலகம், 60 வயது மாநிறம், வனமகன், ரிச்சி, யாக்கை, மனிதன், தோழா, கடவுள் இருக்கான் குமாரு, கோ 2, ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, பூலோகம், ஒகே கண்மணி, தூங்காவனம், ருத்ரமாதேவி, உன் சமையலறையில், கதை திரைக்கதை வசனம் இயக்கம், தில்லு முல்...
விஜய் உடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது:  நடிகர் ஜாக்கி ஷெராப்

விஜய் உடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது: நடிகர் ஜாக்கி ஷெராப்

Latest News, Top Highlights
விஜய் 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தெறி, மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் அட்லீ விஜய் 63 படத்துக்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் உடன் நடிப்பது குறித்து பேசிய நடிகர் ஜாக்கி ஷெராப், இந்த படப்பிடிப்பில் படக்குழுவினர் என்னை குழந்தை போல் பார்த்துக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்....