
முடிவுக்கு வந்த விஷாலின் `இரும்புத்திரை’
`துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிதுள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.
வருகிற ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்த...