விஜய் படத்தில் இவருக்கு இந்த கதாபாத்திரமா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். வில்லன் வேடத்தில் பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். வரலட்சுமியின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவமான வேடம் என்று கூறப்படுகிறது. முக்கிய திருப்புமுனை ஏற்படுத்தும் வில்லத்தனம் கலந்த பாத்திரமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்....