
பொன்மகள் வந்தாள் திரைவிமர்சனம் (தொடுவானம்) Rank 4/5
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை ஒடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகிறது.நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இப்படத்தில் ஜோதிகா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதோடு, பாக்யராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
ஜோதி என்ற பெண் நிறைய குழந்தைகளை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார். இந்த வழக்கை 'மனுதாரர்' பெதுராஜ் (பாக்யராஜ்), மற்றும் வென்பா (ஜோதிகா) ஆகியோர் மீண்டும் விசாரணைகு கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞராக ராஜ...